புதன், 12 அக்டோபர், 2016

அய்யய்யோ அய்யப்பா!

அய்யய்யோ அய்யப்பா!

கடவுளே ஜோதி வடிவில் வந்து தை ஒன்றாம் தேதி மகரஜோதியாகக் காட்சி தருவார் என்று ஒரு காலத்தில் கதை கட்டிவிட்டு ஜோதியைப் பார்க்கப் போகிறோம் என்று ஜனவரி 14அன்று கூட்டம் சபரிமலையில் அலைமோதும். அந்த மகர ஜோதி என்பது உண்மையானதல்ல. கேரள அரசாங்கமே தனது அதிகாரத்தின்கீழ் பணியாற்றும் மின்சாரத்துறை ஊழியர்களைப் பயன்படுத்தி செயற்கையாகக் காட்டப்படும் தீபம்தான். இதனைகேரள மாநில முதல்வராக இருந்த ஈ.கே.நாயினார் அவர்கள்; இதை ஒப்புக் கொண்டுள்ளார் அதனைத் தடை செய்ய முடியாது என்றும் கூறினார்.

சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மஹாராஜா குடும்பத்தைச் சேர்ந்த பி.ரவிக்குமார் என்பவர் ~எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்த வேண்டும் என்று கூறி ஆட்களை அனுப்புவார்கள்| என்று ஒப்புக்கொண்டார்.அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரேறு மகேஸ்வரரு மகரவிளக்கை மனிதன்தான் இயக்குகிறான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். தேவஸம் போர்டு தலைவர் சி.கே.குப்தனும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு மேலாக அறநிலையத்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவர்களும் மோசடி உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுவிட்டார். இதற்கு மேலும் என்ன ஆதாரம் வேண்டும் அய்யப்பன் மகர ஜோதி மோசடி என்பதற்கு? மோசடி என்று தெரிந்த பிறகும் ஜோதி பார்க்கப் போகிறேன் என்பது யாரை ஏய்க்க?

ஜெயமாலா என்ற நடிகை தன்னைத் தொட்டு வணங்கிவிட்டார் என்பதற்காக அய்யப்பன் கோபமாக இருந்தானாம். தேவபிரசன்னம் பார்த்த உன்னி கிருஷ்ணன் என்ற ஜோதிடர் சொல்லி சிறப்பு பூ10ஜை நடந்தது. அந்த ஜோதிடர் யார் தெரியுமா? நம்ம தமிழக முதல்வர் ஜெ. அம்மாவுக்கே ஜோதிடம் பார்த்துச் சொல்பவர்.

அய்யப்பன் ஆண்டு முழுவதும் கூடவே இருந்து அய்யப்பனைத் தொட்டு நாள்தோறும் நைவேத்தியம் செய்து, வருகின்ற பக்தருக்கெல்லாம் அய்யப்பனின் அருளைப் பெற்றுத்தரும் தலைமைத் தந்திரி தன் மனைவி அல்லாத வேறு பெண்ணிடம் ஒருமுறை அல்ல பலமுறை சென்றுää வீடியோ கேசட்டில் படமெடுத்து அம்பலப்பட்டார். மாட்டிக்கொண்ட தந்திரி பிளாக் மெயில் செய்த கும்பலிடம் பறிகொடுத்த செயின் மட்டும் நாற்பது சவரனாம். சவரனுக்கு 8கிராம் என்றால் 320 கிராம். கிட்டத்தட்ட அரை கிலோ. நம்ம தமிழன் வீட்டுப் பணக்காரப் பெண்கள் கூட ஒரே நேரத்தில் நாற்பது சவரன் அணிந்திருப்பார்களா என்றால் சந்தேகம்தான். இவர் கழுத்தில் கிடக்கும் நகையே நாற்பது சவரன் என்றால் வீட்டில் எவ்வளவு இருக்கும்? மனைவி, மக்கள் கழுத்தில் எவ்வளவு இருக்கும்? இன்னும் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும். இவையெல்லாம் அவருக்கு எப்படி வந்தது? வரவு - செலவு கணக்கு உண்டா? வருமானவரி உண்டா? ஆடிட்டிங் உண்டா?

ஜெயமாலா தன்னைத் தொட்டு வணங்கியதற்கே இருபத்தைந்து வருடம் கழித்து கோபப்பட்ட அய்யப்பன் தலைமைத் தந்திரியின் இந்தச் செயலுக்குக் கோபப்படவில்லையே! அது உன்னி கிருஷ்ணனின் தேவப்ரஸ்ன்னத்தில் தெரியவில்லையே! ஏன்?

பக்தர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து காப்பாற்றும் அய்யப்பன் 2010ம் ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி நூறறுக்கும் மேற்பட்டோர் செத்துப் போனார்களே! அவர்களைக்; காப்பாற்ற அய்யப்பன் ஏன் ஓடி வரவில்லை. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு முல்லைப் பெரியாரில் தண்ணீர் விட மறுத்த மலையாளி சபரிமலைக்குச் சென்ற பக்தர்களையெல்லாம் அடித்து விரட்டினானே! அப்பொழுது அவர்களைக் காக்க அந்த அய்யப்பன் ஏன் ஓடி வரவில்லை?

இதற்குப் பிறகும் சபரிமலை செல்லும் பக்தர்களே! உங்கள் மூளையைப் பயன்படுத்தி சிந்தித்துப் பாருங்கள். முன்பெல்லாம் ஏன் மலைக்குப் போகிறாய்? என்று ஒரு பக்தனைக் கேட்டால் நான் ஆண்டு முழுவதும் தண்ணி அடிக்கிறேன்@ கெட்ட காரியமெல்லாம் செய்கிறேன். ஒரு நாற்பது நாளாவது நல்லவனாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மலைக்குப் போகிறேன் என்பான். இப்பொழுது அதுவும் தளர்த்தப்பட்டு டாஸ்மாக் கடைகளில் அய்யப்ப பக்தர்களுக்கு தனி கிளாசில் சப்ளை செய்யப்படுகிறது. ஆகää அந்தக் காரணமும் அடிபட்டுப் போச்சு. அப்புறம் எதுக்குத்தான் மலைக்குப் போறீங்க? பக்தி வந்தால் புத்தியைப் பயன்படுத்தக் கூடாதா? சிந்தியுங்கள்! அறிவும் மானமும் உள்ளவர்களாய் மாறுங்கள்.!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக