திங்கள், 17 அக்டோபர், 2016

அவாளுக்குத் தேவையானால் எந்த சம்ப்ரதாயமும் காற்றில் பறக்கும். தமிழன் உயர்வுக்கு எதிரான சம்ப்ரதாயங்கள் மட்டும் மாற்றப்படக் கூடாதா?


மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்றார் தமிழின மானமீட்பர் தந்தை பெரியார். ஒரு மனிதனுக்கு வீடு, வாசல், சொத்து, சுகம் எதுவும் இல்லை என்றாலும் கவலை இல்லை. மானமும் அறிவுமே உயிரைவிட மேலானது.

அந்த மானத்தையும் அறிவையும் தமிழனிடமிருந்து பறிப்பதற்காகவே தமிழன்மீது சுமத்தப்பட்டதுதான் தமிழனின் ஆண்டுகள் என்று சொல்லப்படும் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத என்கின்ற அறுபது ஆண்டுகள். இதில் ஒரு சொல்கூடத் தமிழ் கிடையாது. தமிழ் அல்லாத ஒன்றைத் தமிழன் ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கு யாரும் அறிவுப்பூர்வமாகப் பதில் சொல்வதில்லை.

 அதற்குச் சொல்லப்படும் கதைகளும் மிகவும் ஆபாசமாக இருக்கிறதே என்றால் அதற்கும் சரியான பதில் இல்லை. ஆனாலும் அதனை மாற்றக் கூடாது என்பதிலே சிலர் பிடிவாதமாக இருக்கிறார்கள். தமிழனை மானமும் அறிவும் அற்றவனாகவே வைத்திருக்க வேண்டும் என்பதிலே அவர்களுக்கு அவ்வளவு ஆசை. மானத்தையும் அறிவையும் பற்றிக் கவலைப்படாத தமிழனும் அதை மாற்றக்கூடாது என்கிறான்.

காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சம்பிரதாயங்களை மாற்றலாமா? என்பது இவர்களது கேள்வி. சம்பிரதாயங்களும் பழக்கவழக்கங்களும் மாற்றப்பட்டதே இல்லையா? பார்ப்பனர்கள் தங்களது சுகவாழ்வுக்கு வசதியாக எத்தனையோ சம்பிரதாயங்களை மாற்றிக் கொள்ளவில்லையா? 

      பார்ப்பான் கடல் தாண்டிப் போகக்கூடாது என்பது இந்துமத சம்ப்ரதாயம். இன்று பார்ப்பான் இல்லாத நாடு உண்டா? டாலர்களிலும் யூரோக்களிலும் அம்பிகள் அத்திம்பேர்கள் புரளுவது சம்ப்ரதாயமா? நாடுவிட்டு நாடு போகக் கூடாது என்று சொன்னதற்காகத்தானே சங்கராச்சாரி காஞ்சி வரதராஜர்கோயில் மேலாளர் சங்கரராமனை கூலிப்படையை ஏவிவிட்டுக் கோயில் வளாகத்திலேயே போட்டுத் தள்ளினார்?

தண்ணியடிக்க மாட்டார்கள் கறி திங்க மாட்டார்கள் என்று பார்ப்பனர் மேல் இட்டுக்கட்டப்பட்ட கதை என்னாச்சு? பார்களில் உட்கார்ந்துகொண்டு பீஃப் வறுவலும் பிராந்தியுமாய் எத்தiனை பார்ப்பனர் இருக்கிறார்கள்? இன்று மாமிகளே மாட்டுக்கறியையும் கோழிக்கறியையும் பன்றிக்கறியையும் வெளுத்து வாங்குகிறார்களே! இது சம்ப்ரதாயமா?

எட்டு வயதுக்குள் பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது இந்து மத சம்ப்ரதாயம். அப்படித் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் அந்தப் பெண் வயசுக்கு வந்தவுடன் அந்தப்பெண் மாதவிலக்காகும்போது வெளிப்படும் கழிவை அவளின் தகப்பன் அருந்த வேண்டும் என்று மனுதர்மம் சொல்வதாக அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி அவர்கள் ~இந்துமதம் எங்கே போகிறது?| என்ற நூலில் தெரிவித்துள்ளாரே! இன்று எத்தனைப் பாரப்பனப் பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணமாகிறது? எந்தத் தகப்பன் அவளின் தீட்டை அருந்துகிறான்?
அந்தக் காலத்தில் ஒரு வயதுக்குழந்தைகூட விதவையாக இருந்ததே! சாரதா சட்டத்தின்மூலம் அது மாற்றப்படவில்லையா? பார்ப்பனப் பெண்கள் விதவையானால் மொட்டையடித்து முக்காடுபோட்டு மூலையில் உட்கார்த்தி வைப்பார்களே! இன்று மொட்டைப் பாப்பாத்திகள் யாராவது உண்டா? புருஷன் செத்துப்போனால் மனைவியையும் உடன்கட்டை ஏற்ற வேண்டும் என்ற சம்ப்ரதாயம் மாற்றப்படவில்லையா?        

இராத்திரி பன்னிரண்டு மணிக்கு இந்துக் கோயில்களை திறந்து வைக்கக்கூடாது என்று சங்கராச்சாரி இராமகோபாலன், இல கணேசன் வகையறாக்கள் கரடியாய் கத்தியும் வருமானம் வருகிறது என்பதற்காகக் கோயிலை ஜனவரி 1 அன்று இரவு 12 மணிக்குத் திறந்துவைத்து காசு பார்க்கவில்லையா?

பஞ்சக்கச்சத்தையும் மடிசாரையும் தூக்கியெறிந்துவிட்டு ஜீன்ஸ் பேண்ட்டிலும், டி சர்ட்டிலும், சுடிதாரிலும்ää பாட்டியாலாவிலும் அம்பிகளும் அக்கிரஹாரத்துப் பொம்மனாட்டிகளும்  திரியறதுகளே! இது சம்ப்ரதாயமா?   

அவாளுக்குத் தேவையானால் எந்த சம்ப்ரதாயமும் காற்றில் பறக்கும். தமிழன் உயர்வுக்கு எதிரான சம்ப்ரதாயங்கள் மட்டும் மாற்றப்படக் கூடாதா?        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக