திங்கள், 17 அக்டோபர், 2016

தமிழர்களின் இரட்சகர் காமராசர்


 தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களும்,பல்லவர்களும், நாயக்கர்களும், நவாபுகளும் குளத்தை வெட்டினான், சாலையைப் போட்டான், மரத்தை நட்டான், கோயிலைக் கட்டினான், கும்பாபிஷேகம் நடத்தி பார்ப்பனரின் பாதார விந்தங்களைத் தொழுதான் என்றுதான் வரலாற்றில் உள்ளதே தவிர எந்த மன்னனும் பள்ளிக் கூடங்களைக் கட்டினான்ää பல்கலைக்கழகங்கள் கட்டினான் என்று எங்கேயும் இல்லை. திருமலை நாயக்கர் காலத்தில் மதுரையில் ஒரு பல்கலைக்கழகம் இருந்தது. அதில் பத்தாயிரம் பேர் படித்தார்கள் என்ற வரலாறு இருக்கிறது. ஆனால் அங்கே படித்த அத்துனைப் பேரும் பார்ப்பனர்கள்.

 சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மம் எல்லா மன்னர் காலத்திலும் கொடிகட்டிப் பறந்தது. அதனால்தான் நூறு ஆண்டுகளுக்கு முன் நம்முடைய தமிழன் எவனும் பட்டதாரி கிடையாது. ஒருவர் இருவர் படித்திருந்தாலும் அது வெள்ளைக்காரன் வந்த பிறகுதான்.

 தமிழகத்தில் 1920க்குப்பிறகு நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதில் ஆசிரியர்கள் அனைவரும் உயர் ஜாதியினர். கீழ்ஜாதியினருக்கு அங்கே கல்வி மறுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளாதவர்கள் நடத்தும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று நீதிக்கட்சி உத்தரவு போட்டபிறகுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்விக்கண் திறக்கப்பட்;டது.

 1938ல் ஆட்சிக்கு வந்த ராஜாஜிää நீதிக்கட்சி ஆட்சியில் திறக்கப்பட்ட பள்ளிகளில் இரண்டாயிரம் பள்ளிகளை இழுத்து மூடினார். மீண்டும் 1952ல் தமிழகத்தில் முதல்வராகப் பதவியேற்ற இராஜாஜி மேலும் ஆறாயிரம் பள்ளிகளை மூடியது மட்டுமல்லாதுää மாணவர்கள் பாதி நேரம் பள்ளியில் படித்துவிட்டு மீதி நேரம் அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார். இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளின் கல்வியில் மட்டுமல்லாது எதிர்காலத்தையே குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்று தந்தை பெரியார் வெகுண்டெழுந்தார். அண்ணா ஆர்ப்பரித்தார். காமராஜர் கண்டனம் செய்தார். திட்டத்தை ராஜாஜி வாபஸ் வாங்கவில்லை என்றால் அக்கிரஹாரம் கொளுத்தப்படும் என்றார் பெரியார். அப்பொழுதும் திட்டத்தை திரும்பப் பெறாத இராஜாஜிää பதவியை மட்டும் இராஜினாமா செய்துவிட்டு ஓடினார். அந்த அளவிற்கு இராஜாஜி மனுதர்மத்தின்மீது பற்றுக் கொண்டிருந்தார்.

 தந்தை பெரியாரின் ஆதரவுடன் முதல்வரான காமராசர், இராஜாஜி மூடிய பள்ளிகள் அனைத்தையும் திறந்ததுடன்ää ஓணான் முட்டையிடாத கிராமத்திலும் பள்ளிகளைத்திறந்து பள்ளிகள் இல்லாத கிராமமே இருக்கக்கூடாது என்ற வரலாற்றைப் படைத்தார். அதனால் பெரியார் காமராசரை தமிழர்களின் இரட்சகர் என்றார்.

 பெரியார் போராடவில்லை என்றால் இராஜாஜி பதவியை விட்டு ஓடியிருக்க மாட்டார். காமராசர் முதல்வராகவில்லையென்றால் தமிழனுக்குக் கல்வியில்லை. வேலைவாய்ப்பு இல்லை. இன்று நாம் பெற்றிருக்கும் கல்விää பட்டம்ää பதவிää வேலை வாய்ப்பு அனைத்தும் அந்த இருபெரும் தலைவர்களின் கொடையால் வந்தது. எனவேää தமிழர்கள் அனைவரும் இன்று மானத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதே பெரியாராலும் காமராசராலும்தான்.

 தமிழனாய்ப்பிறந்த ஒவ்வொருவரும் நன்றியுடன் நினைவுகூரத்தகுந்த தலைவர்கள் பெரியாரும் காராசரும். ஜூலை 15 காமராசர் பிறந்தநாள். அந்நாளில் அவரை நன்றியுடன் நினைப்போம்! வாழ்க காமராசர்! வாழ்க பெரியார்!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக