திங்கள், 17 அக்டோபர், 2016

சமஸ்கிருத வாரம்


ஆர்எஸ்எஸ் பெற்றுப் போட்ட பிள்ளைகளுள் ஒன்று ஆட்சியைப் பிடித்து விட்டது. அரியணையில் ஏறியதும் நாட்டு மக்களுக்கான தீர்க்க முடியாத பிரச்சினைகள் எத்தனையோ இருக்க கங்கை நதியைச் சுத்தம் செய்ய நாலாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. ஏற்கனவே காங்கிரஸ் அரசில் இருந்த பார்ப்பனர்கள் இரண்டாயிரம் கோடியைக் கொட்டியழுதும் கங்கையைச் சுத்தம் செய்ய முடியாது என்று கைகழுவி விட்ட திட்டம்தான் இது.

இது மாதிரியான திட்டங்களுக்குப் பல கோடிகளை வாரி இறைக்கிறது பிஜேபி அரசு. எல்லாம் அவங்க அப்பன் வீட்டுப்பணம் அல்ல. நம் மக்களது வரிப்பணம்தான். இதில் கிறிஸ்தவனும் வரி கட்டுகிறான்ää முஸ்லிமும் வரி கட்டுகிறான். மதத்தையே நம்பாதவனும் வரி கட்டுகிறான். ஊரான் வீட்டு நெய்யே@ பெண்டாட்டி கையே என்று அந்த வரிப்பணத்தை எடுத்து வாரி இறைக்கிறது ஆர்எஸ்எஸின் குட்டி. ஏற்கனவே ஆட்சியிலிருந்தபோது அன்றைய மந்திரியாய் இருற்த உம்மா பாரதி சரஸ்வதி என்ற ஒரு நதியைக் கண்டுபிடிக்க நூறு கோடி ஒதுக்கினார். வரலாற்றில் அப்படிப்பட்ட நதியே இல்லை. எல்லாம் புராணங்களில்தான்.

இதே பாணியில் போனால் முப்பத்தி முக்கோடி தேவர்களையும் நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளையும்ää கின்னரர் கிம்புருடர் அஷ்டதிக்குப் பாலகர்களையும் இந்திரன் சந்திரன் அக்கினி வாயு நந்தி நாரதர் அத்தனை பேரும் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க நிதி ஒதுக்கினாலும் ஒதுக்குவார்கள். எல்லாம் புராணங்களில் உள்ளவைதானே! இந்த தேவர்களுக்கென்று ஒரு பாஷை இருக்கிறது. அதுதான் சமஸ்கிருதம். இந்த முப்பத்தி முக்கோடி பேரும் நாற்பத்தி எண்ணாயிரம் பேரும் பேசிய மொழியை இப்ப எவ்வளவு பேர் பேசுகிறார்கள் என்றால் வெறும் 16000 பேர்தான். இதைப் பேசிய தேவர்களெல்லாம் செத்துப் போயிட்டாங்க போலிருக்கிறது. அதனால் அந்த பாஷையும் செத்துப் போச்சு.

அதை அப்படியே விடலாமா? அதனால் அதற்கு உயிருண்டாக்க அதே சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லி உயிரை உண்டாக்காமல் அதற்காக சம்ஸ்கிருத ஆண்டு என்று ஒரு ஆண்டையே அறிவித்தது முன்னாள் பிஜேபி அரசு. இந்நாள் பிஜேபி அரசோ சம்ஸ்கிருத வாரம் கொண்டாடனும்னு அறிவிச்சிருக்கு.

தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி வருமா? என்று கேட்ட பார்ப்பானெல்லாம் இதனை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கிறான். சமஸ்கிருத வாரம் கொண்டாடினால் வெங்காய விலை குறையுமா? தக்காளி விலை இறங்குமா? என்று கூடக் கேட்க மனமில்லை. அவர்கள் இனத்தின் நன்மைக்காக எப்படியும் இறங்கிப் போவார்கள்.

சம்ஸ்கிருதம் ஏன் அனைவராலும் பேசப்படாத மொழியானது? அதுதான் தேவபாஷை ஆச்சே! கல்லையே கடவுளாக்குகிற சக்தி அந்த பாஷைக்கு உண்டே! இன்னும் தமிழில் அர்ச்சனை வேண்டும் என்று கேட்டால் அந்த தமிழ் பாஷை கடவுளுக்குப் புரியாது. சம்ஸ்கிருதத்தில் சொன்னால்தான் கடவுளுக்குப் புரியும் என்று சொல்லி எதிர்க்கிறார்களே! அவ்வளவு சக்தியுள்ள பாஷை எப்படிச் செத்துப் போனது?

பார்ப்பனர் அல்லாத யாரும் சம்ஸ்கிருதத்தைப் படிக்கக்கூடாது என்று தடை விதித்திருந்தார்கள். அதைப் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும். கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.
நினைவில்; வைத்திருந்தால் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று தண்டனை எல்லாம் தரப்படும் என்று சொன்னார்கள். இந்த நூற்றாண்டிலும் அதனை யாராவது படிக்க விரும்பினால் அதனைப் பார்ப்பனர்கள் சொல்லித்தர மறுத்தார்கள்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் அண்ணல் அம்பேத்கர் பள்ளியில் படித்த பொழுது சமஸ்கிருதத்தை விருப்ப மொழியாக எடுத்துப் படிக்க விரும்பியபொழுது பார்ப்பன ஆசிரியர்கள் தீண்டத்தகாதவனான உனக்கு சமஸ்கிருதத்தைச் சொல்லித் தர முடியாது என்று மறுத்து விட்டார்கள். அதனால் தனக்கு விருப்பமில்லாத பார்சி மொழியை எடுத்து அம்பேத்கர் படித்தார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய்கீர் கூறுகிறார்.

இப்படிப்பட்ட மொழியை வளர்க்கத்தான் சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டிருக்கிறது ஆர்எஸ்எஸ்ஸின் பிள்ளையான பாஜக. ஏன் தெரியுமா? அதனைத்தான் தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை. ஏனென்றால் அந்த மொழியில்தான் நம்மை சூத்திரனாகவும் கீழ் ஜாதிக்காரனாகவும் ஆக்குகின்ற ஸ்லோகங்கள் இருக்கின்றன. பார்ப்பானை எல்லோரும் கடவுளாக வணங்க வேண்டும் என்று சொல்லக் கூடிய மந்திரங்கள் இருக்கின்றன.
பார்ப்பனர்களை அனைவரும் கடவுளாக வணங்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக அரசு சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க முன்னோடியாக சமஸ்கிருத வாரம் அறிவித்திருக்கிறது. ஓட்டுப்போட்ட மக்களெல்லாம் பார்ப்பானை காலில் விழுந்து கும்பிடத் தயாராகுங்கோ! அதற்கும் விரைவில் சட்டம் வந்தாலும் வரலாம். டும்..டும்..டும்..டும்..டும்..
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக