திங்கள், 31 அக்டோபர், 2016

மோடி அரசாங்கம் வந்த பிறகு காவிக்கும்பல் வல்லபாய் பட்டேலுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள?


மோடி அரசாங்கம் வந்த பிறகு காவிக்கும்பல் வல்லபாய் பட்டேலுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள?

பட்டேல் ஒன்றும் ஆர்எஸ்எஸ் காரரோ இந்துமகாசபையைச் சேர்ந்தவரோ அல்லவே கடைசிவரை காங்கிரசில் இருந்தவர்தானே அவரை ஏன் காவிக்கும்பல் உயர்த்திப் பிடிக்கிறது?

காந்தி கொலையை அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். தடுக்கவில்லை. தடுக்காதது மாத்திரமல்லாது அதன் முக்கிய குற்றவாளியான சவர்க்கரை தப்பிக்க வைத்தார். ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.

அதைவிட மிக முக்கியமானது அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பல காரியங்களைச் செய்திருக்கிறார்.

அவர் எப்படிப்பட்ட ஜாதி வெறியர் என்பதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
மேலும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 7ல் உள்ள செய்தி மேலும் அவரை அம்பலப்படுத்துகின்றது.
1935 பம்பாய் மாகாணம் டோல்கா தாலுகா கவிதா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியை அம்பெத்கர் விவரிக்கிறார்.

பொதுப்பள்ளிகளில் ஹரிஜனக் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ளலாம் என பம்பாய் அரசாங்கம் உத்தரவிட்டது. அதனால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நான்குபேர் தங்கள் குழந்தைகளை அப்பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் அக் கிராமத்தின் சாதி இந்துக்கள் தங்கள் குழந்தைகள் தீண்டத்தகாத குழந்தைகளுடன் சேர்ந்து உட்கார்ந்து படிப்பதை விரும்பாமல் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டார்கள்.
அதன்பின் ஒரு தீண்டத்தகாதவர் ஒரு பிராமணரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். சாதி இந்துக்கள் தீண்டத்தகாதவர்களின் கிராமத்தில் புகுந்து அவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள். ஈட்டிகள் அம்பு வாள்கள் போன்ற ஆயுதங்களைக்கொண்டு வயதான ஆண்களையும் பெண்களையும் தாக்கினார்கள்.தாக்கப்பட்டவர்களில் சிலர் பயந்துகொண்டு காடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர். வடுகளுக்குள் புகுந்து கதவைத் தாழிட்டு; கொண்டார்கள் இந்துக்கள் அந்த வீடுகளின் கதவுகளை உடைத்து ஓடுகளையும் சாரக்கட்டைகளையும் உடைத்து எரிந்தார்கள்.

தீண்டாதோரை வேலைக்கு அமர்த்த மறுத்தார்கள். கால்நடைகளை மேய்ப்பதற்கு இடம் தராமல் தாக்கினார்கள். தண்ணீர்க்கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றினார்கள்.
இவ்வளவு கொடுமைகள் செய்த உயர்சாதியினர் மீது வழக்குப் போட விடாமல் தடுத்து அவர்களுக்கு தண்டனை தரவிடாமல் தடுத்து உயர் ஜாதியினரைக் காப்பாற்றியவர் வல்லபாய் பட்டேல்; என்பதை மிகவும் விரிவாகவும் ஆணித்தரமாகவும் அண்ணல் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒருவரைத்தான் காவிக்கும்பல் தலைமேல தூக்கி வைத்து ஆடுகிறது.
அவரைத் தலைமேல் தூக்கி வைத்து ஆடும் அதே கும்பல் அண்ணலையும் பாராட்டுவதாக நடிக்கிறது.
அவர்களைப் போன்றவர்களிடம் தீண்டத்தகாதவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று அண்ணல் அவர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 141வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்இ பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக