புதன், 12 அக்டோபர், 2016

தீபாவளியைப் புறக்கணிப்போம்! மானத்தோடு வாழ்வோம்!



 பிஜேபிää இந்துமுன்னணி, பிஎம்எஸ் கும்பல் தீபாவளியை ஜமாய்க்கச் சொல்கிறது. தமிழனை அசுரன், அரக்கன், சூத்திரன்ää தஸ்யூää தாசன், அடிமை என்று சொல்வதில் அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம். இருக்காதா பின்னே! அவர்களுடைய நோக்கமே பிராமணனே கடவுள், அவனைத்தான் அனைவரும் வணங்கவேண்டும் என்ற தத்துவம்தானே! தமிழன் விழிப்படைந்து விட்டால் அவாள் பிழைப்பு அதோகதி ஆகிவிடாதா? அதனால்தான் தமிழன் விழிப்படைய வேண்டும் என்று சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லும் அவர்களுக்குப் புலம்பலாகத் தெரிகிறது.

 இந்தத் தீபாவளி தமிழர்களுக்கு உரிய பண்டிகையல்ல. தமிழ் இலக்கியங்களில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் நாயக்கமன்னர்கள் காலத்தில் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட பண்டிகையே தீபாவளி ஆகும். நாயக்க மன்னர்கள் பிராமண தாசர்களாய் இருந்தார்கள். மனுதர்மத்தின்படி ஆட்சி செய்தார்கள். மன்னன் காலையில் எழுந்து மலஜலம் கழித்து விட்டு ஜப தப ஹோமங்களை முடித்து விட்டு பிராமணர்கள் காலில் விழுந்து வணங்கிவிட்டுத்தான் அரச சபைக்குப் போவான். அரச சபை என்பது முழுக்க முழுக்க பிராமணர்கள் நிரம்பியது. சபையில் மக்களுடைய குற்றங்குறைகளை விசாரித்து மனுதர்மத்தின்படி அவரவர் வருணத்திற்குத் தக்கவாறு தண்டனை வழங்கினார்கள். அதாவது சூத்திரன் கொலை செய்தால் மரணதண்டனையும்ää பிராமணன் கொலை செய்தால் அவனை மொட்டையடித்து அவன் பொருள் முழுவதையும் அவனிடமே கொடுத்து ஊரை விட்டு விரட்டிவிட வேண்டும் என்றும் தீர்ப்புச் சொன்னார்கள். இதன்படி சூத்திரன் உயிரும் பிராமணன் மயிரும் சமம் என்ற கருத்தைச் சொல்கிறது மனுதர்மம்.

 அந்த நாயக்க மன்னர் காலத்தில் சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பத்தாயிரம் பேர் படிக்கக் கூடிய சர்வகலாசாலை மதுரையில் இருந்தது. அதில் பிராமணர் மட்டுமே படித்து வந்தனர். கல்வி என்பது வேதப்படிப்புத்தான். வேதத்தை சூத்திரன் காதில் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற விதி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.  இராஜ குருவிடம் ஒரு சூத்திரன் ஒரு குறிப்பிட்ட வேதத்தைச் சொல்லி அதற்குப் பொருள் என்ன என்று கேட்டான். அடுத்த நாள் அவனை அரசசபைக்கு வரச்சொல்லி அந்த இராஜகுரு மன்னிடம் செங்கோலைக்கேட்டுப் பெற்று சிம்மாசனத்தில் அமர்ந்து வேதத்துக்குப் பொருள் கேட்ட சூத்திரனை வரவழைத்து பழுக்கக் காய்ச்சிய இரும்பை அவனது ஆசன வாயில் செருகி உச்சிவரை செலுத்தி அவனைக் கொலை செய்தான் அந்தப் பார்ப்பான்.

 இப்படி முட்டாளாக இருந்த மன்னனைப் பயன்படுத்தி மக்களை தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடச் செய்தனர். ஆசனவாயில் இரும்பைக் காய்ச்சிச் சொருகக்கூடிய அளவு கொடுங்கோலாட்சிபுரிந்த அப்பார்ப்பனர்களிடம் யாராவது எதிர்த்துக் கேள்வி கேட்க முடியுமா? பூமி உருண்டையா? தட்டையா? அந்த பூமியை ஒருவன் பாயாகச் சுருட்ட முடியுமா? எதன்மீது நின்றுகொண்டு பூமியைச் சுருட்டினான்? கடல் பூமியை விட்டு தனியாகவா இருந்தது? என்று கேள்வி கேட்க யாருக்காவது தைரியம் இருக்குமா?

 இப்படி தமிழனை கல்வி அறிவற்றவனாக ஆக்கிவைத்து அடிமைப்படுத்திய காலத்தில் பூமியைத் தட்டை என்று நம்ப வைத்து தமிழன்மீது திணிக்கப்பட்ட பண்டிகையை நாம் இன்னமும் கொண்டாடத்தான் வேண்டுமா? இன்று பூமி தட்டை என்று சொன்னால் எல்கேஜி குழந்தைகூட கைகொட்டிச் சிரிக்குமே! கற்றறிந்த நாம் அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டாமா? மானத்தோடு வாழ வேண்டாமா? பூமியைத் தட்டை என்று சொல்லக்கூடிய கதையைக் கொண்ட தீபாவளி நம்முடைய பண்டிகை அல்ல!  எனவே, தீபாவளியைப் புறக்கணிப்போம்!  மானத்தோடு வாழ்வோம்!                  இவண்: : 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக