வெள்ளி, 21 அக்டோபர், 2016

கடந்த ஆண்டுக்குப் பெயர் விரோதியாம். அதற்குப் பொருள் சொல்லத் தேவையில்லை. இந்த ஆண்டின் பெயர் விக்ருதியாம்.



கடந்த ஆண்டுக்குப் பெயர் விரோதியாம். அதற்குப் பொருள் சொல்லத் தேவையில்லை. இந்த ஆண்டின் பெயர் விக்ருதியாம். இதற்கு என்ன பொருள் என்று அகராதி படிச்சவர்தான் சொல்ல வேண்டும். கடந்த விரோதி ஆண்டில் எந்தத் தலைவருமே தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச் சொல்லவில்லை ஒரு சிலரைத்தவிர. இராம.கோபாலன், இல.கணேசன் ஆகியோர் விரோதி வருடத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து தாங்கள் தமிழின விரோதிகள் என்பதை வெளிப்படுத்திக் கொண்டனர்.
செல்வி ஜெயலலிதா அம்மையாரும் வாழ்த்துத் தெரிவித்தார். அது அவருடைய இனப்பற்று. இன்னும் ஒரு சில தமிழினத்தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தார்கள். அது ஏனோ தெரியவில்லை!
அதே போல் தை முதல் நாள் அன்று நமது நிறுவனத்திலுள்ள அனைத்து அமைப்புக்களுமே பாராட்டுக்குரிய வகையில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். பிஎம்எஸ்ää அதிமுக ஆகிய அமைப்புக்கள் வாழ்த்துத் தெரிவிக்காமல் தங்களுடைய ஆரிய அடிமைப் புத்தியைக் காட்டிக் கொண்டன.

 தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் திரு.வி.க, தந்தை பெரியார் போன்ற சான்றோர்களும் ஆன்றோர்களும் கூடி முடிவெடுத்தபடி தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்து தமிழ் வருடப்பிறப்பு என்ற ஆபாசத்தை ஒழித்துக்கட்டி சாதனை படைத்தார் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர். தமிழர்களும் தமிழின ஆதரவாளர்களும் அதனை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர்.
 சித்திரை 1 அய்த்தான் தமிழருக்குரிய ஆண்டாகக் கொண்டாட வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் அதனை அறிவுப்பூர்வமாக மறுக்க வேண்டுமா இல்லையா?

 தமிழன் இதுவரை கொண்டாடிய பிரபவ முதல் அட்சய வரையுள்ள ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழில் இல்லை. அது எப்படித் தமிழனுக்குரிய ஆண்டாக இருக்க முடியும்? என்று நாம் கேட்கின்றோம். இதைத் தவறு என்று யாராவது கூறுகிறார்களா?

 இரண்டாவது காரணம், அதற்குரிய கதை மிகவும் ஆபாசமாக இருக்கிறது. கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் ஒழுக்கக் கேடான உறவின்மூலம் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்தான் தமிழனுக்கு ஆண்டுகளின் பெயர்களாக இருப்பதா? என்று கேட்கின்றோம். இதையும் யாராவது அறிவுப்பூர்வமாக மறுக்கிறார்களா?

ஆனாலும் துக்ளக் சோ போன்ற அதிமேதாவிகள் அதைக் கேலி செய்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய பிறவிக்குணம். தமிழன் தன்மானத்தோடு வாழக்கூடாது@ அறிவுப்பூர்வமாகக் கேள்விகள் கேட்கக் கூடாது என்கின்ற அகங்காரத்துடன் பிராஹ்மணர்கள் சொன்னதில் அர்த்தமுண்டுää அதனைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டே தீர வேண்டும்@ அது அவர்கள் தலையெழுத்து என்பது அவர்களின் கருத்து.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அடிமையாய் வாழ்ந்த தமிழன் தன்மானத்துடன் வாழ இதுபோன்ற பண்பாட்டுப் புரட்சி தேவையா? இல்லையா?
எனவே, தமிழர்களே! சித்திரை அல்ல நமக்குப் புத்தாண்டு!
தைமுதல் நாளே தமிழனுக்குப் புத்தாண்டு!!

என்ற கலைஞரின் அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்போம். தன்மானமுள்ள தமிழர்களாய் வாழ்ந்திடுவோம்.
              

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக