வெள்ளி, 21 அக்டோபர், 2016

கறை நல்லது யாருக்கு? டிடர்ஜென்ட் தயாரிப்பவனுக்கு?


 துக்ளக் பத்திரிகையில் தயாரான ஆர்எஸ்எஸ்காரர் வைத்தியநாத அய்யர் இன்று தினமணியின் ஆசிரியர். வேதகாலத்தில் சோமபானம் சுரா பானம் குடித்த கூட்டத்தின் இன்றைய வாரிசு. மது ஒழிப்பு குறித்த கருத்தரங்கில் பேசினாராம்.

 மதுப்பழக்கத்தால் சமுதாயம் சீரழிந்து வருகிறது. 1971க்கு முன்பு குடி என்றால் என்னவென்றே தெரியாதாம். சோமாபானம் சுராபானம் தயாரிப்பவர் யாரும் இல்லை போலும். இன்று குடியால் சமுதாயம் சீரழிந்து வருகிறது என்று தனது சமுதாயப் பற்றைக் காட்டியிருந்தார். தமிழன் காசில் டாஸ்மாக்கில் மெக் ட்வலும் முனியாண்டிவிலாசில் சிக்கன் 65 யும் சாப்பிடும் அம்பிகளை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. பொதுவாக மதுவின் தீமைகளைப் பிளந்து கட்டியிருந்தார்.
 திக காரன் தீபாவளி கொண்டாடாதே என்று சொன்னால் கோபாலகிருஷ்ணன் னு எவன் கூப்புட்றான். எல்லாம் சப்பாணின்னுதான் கூப்புட்றான் என்று எகத்தாளம் பேசிய அம்பி தீபாவளியை ஜமாய்க்கச் சொன்னார். அப்படி ஜமாய்த்ததில் ..

 தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மூலம் மது விற்பனை 71 கோடியாம். சென்னையில் மட்டும் 10 கோடியாம். திருச்சியில் இரண்டரை கோடியாம். இது கடந்த ஆண்டைவிட 1.35 கோடி அதிகமாம். ஆண்டுக்கு எட்டாயிரம்கோடி மது விற்னையாகிறதாம்.

 வைத்திய நாத அய்யர் சொல்லியும் இவ்வளவு விற்பனை ஆகியிருக்கிறதே. குடிமகன்கள் எண்ணிக்கை கூடியிருக்கிறதே, அதனால் குடி நல்லது என்று ஒத்துக்கொள்வார்களா?

எய்ட்ஸ் ஒழிப்புப் பற்றி விழிப்புணர்வுப்பிரச்சாரம் நடைபெற்றும் ஆண்டுதோறும் அந்த நோயாளிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறதே ... அந்தப்பிரச்சாரம் தவறு என்று நிறுத்தி விடலாமா?
 பொது இடத்தில் சிகரெட் பிடிக்காதே என்று சட்டம் போட்டாலும் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் ஒரே புகை மயமாக இருக்கிறதே! அதனால் சிகரெட் நல்லது என்று ஒத்துக் கொள்ளலாமா?
 அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும்  பொருத்தமில்லாத தீபாவளி திராவிடனை ஆரியன் ஒழித்த நாள். அதனை திராவிடர்களாகிய தமிழர்கள் கொண்டாடுவது இழிவு என்று சொன்னால் பக்தியின் பெயரால் தமிழன் இன்னும் தடுமாறுகிறான். ஈராயிரம் வருடத்துப் பழக்கமாயிற்றே. உடனே நிறுத்துவானா? சற்று சிரமம்தான்.

ஆரியம் அவ்வளவு ஊடுருவி கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக தீபாவளிக் கதையில் பூமி தட்டை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
 பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறந்தது என்பதை ஒத்துக் கொள்ள முடியுமா?
படிப்பறிவு இருந்தாலும் பகுத்தறிவில்லாத படித்த பாமரர்கள் சிந்திக்க மறுப்பதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? கடைசி மூடநம்பிக்கைக் காரன் இருககும்வரை எமது இயக்கம் தமிழனைத் திருத்த தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும்.

 இந்த தீபாவளியில் பட்டாசு வெடித்ததில் திருச்சியில் மட்டும் 15 இடத்தில் தீவிபத்து. முசிறியில் ஒரு ஜோதிடர் வீட்டிலேயே தீ பத்திக்கிச்சாம். அவருக்கு கிரகம் சரியில்லைபோலும் புதுக்கோட்டையில் அம்பேத்கார் காலனியில் இரண்டு குடிசைகள் எரிந்து சாம்பலாயின. சென்னையில் எழுபத்தைந்து இடங்களில் தீ. பல குடிசைகள் எரிந்து சேதமாயின. எரிந்த குடிசை எதுவும் பார்ப்பனக் குடிசையில்லை. ஏனெனில் பார்ப்பனர் குடிசையில் இருப்பதில்லை.

ஜமாய் ஜமாய் என்று ஜமாய்த்ததில் பல இடங்களில் வெட்டு குத்து கொலை வேறு. ஆட்டுக்கறி வாங்கப்போன இடத்திலும் ஜமாய்த்ததில் கோஷ்டி சண்டையில் பலபேர் மண்டை உடைந்தது.
கண்ட பலகாரங்கள் தின்னதில் பலபேருக்கு வயித்து வலி.ää வாந்திபேதி வேறு
 ஏற்கனவே பூமி வெப்பமயமாகி ஆபத்தில் இருக்கிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை பெரிதாகிறது. அதனாலும் பூமிக்கு, மனிதகுலத்துக்கு ஆபத்து.

பட்டாசின் புகையால் அது மேலும் அதிகமாகிறது. காசும் கரியாகிறது.
எவன் வீட்டில் எழவு விழுந்தால் என்ன? வருஷாவருஷம் திதி செய்து தெவசம் கொடுத்து என்னுடைய தாய் என்னை யாருக்குப் பெற்றாளோ என்று மந்திரம் சொல்ல வைத்து காசு தேத்தலாம் அல்லவா?  அதனால்தான் அம்பி ஜமாய்க்கச் சொல்கிறார்..  ஜமாய்ங்கோ.
கறை நல்லது  யாருக்கு?   டிடர்ஜென்ட் தயாரிப்பவனுக்கு?
தீபாவளி நல்லது  யாருக்கு? பார்ப்பானுக்கும் வியாபாரிகளுக்கும்.

30-10-2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக