புதன், 12 அக்டோபர், 2016

ஆன்மிகத்தைப் போதிக்கிறதா ஆசிரமங்கள்?

பதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆன்மிகத்தைப் போதிக்கிறதா ஆசிரமங்கள் என்ற தலைப்பில் நடந்த ஆய்வுக்களத்தில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் அய்யா கவிஞர் அவர்கள் கலந்துகொண்டு பேசினார். எதிர்த்தரப்பில் எஸ்.வி.சேகர் என்ற கோமாளிப் பார்ப்பான் கவிஞர் எது சொன்னாலும் நாடகத்தில் வருவதுபோல் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான். கவிஞருடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் கால் தூசு கூடப் பெறாத அந்தப் பார்ப்பானின் அறிவு சூன்யம் நன்கு வெளிப்பட்டது.
கவிஞர் சொன்னார் ~இன்னமும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லையே அதனைத் தடுப்பவர்கள் பார்ப்பனர்கள்தானே? என்று கேட்டார். அதற்கு நியாயமான பதிலை சொல்ல முடியாத ஞான சூன்யம் என்ன சொன்னதென்றால் பார்ப்பானாகிய நான் நினைத்தாலும் அர்ச்சகராக முடியாது. என்பதுதான்.

அவனுடைய அறிவு எவ்வளவு சூன்யமானது என்பதனை தந்தை பெரியார் தோலுறிக்கிறார் பாருங்கள்:
“வைகானச ஆகமத்தில்” உள்ள பிருகு சம்ஹிதையின் கிரியாதிகாரம் பற்றிய 24வது அத்தியாயத்தில் தரப்பட்டிருக்கும் பிராயச்சித்தம் மீதான ஒரு குறிப்பு:

1.அர்ச்சக அன்யாத்லி ஜைஹி ஸ்புருஷ்டே சுத்தோடை ரபிஷ்சாயேத்
சபத்பிஹி சத்ரியைஹி ஸ்புருஷடே காலாசைஹி ஸ்னபாயேத்தரிம்.
 பொதுவழிபாட்டுக்குரியதான கோயில்களில் கடவுளின் உருவத்தையோää சிலையையோ அல்லது பிற இதுபோன்ற உருவத்தையோ (கோயில் சடங்குகளை அதிகாரப்பூர்வமாக நடத்தி வைப்பவரான) அர்ச்சகர் தவிர பிற பிராமணன் எவனாவது தொட்டுவிட்டானானால் பின்னர் அந்தச் சிலையோ அல்லது உருவமோ தூய நீரினால் சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும்.
சத்திரியர்களால் (போர்வீரர் (ராஜ) சாதி) தொடப்பட்டு விட்டதானால் பின்னர் ஏழு கலசங்களை வைத்து முறைப்படி வணங்கியபின்ää சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும்.
2. ஸ்டிபாயேத் வைஸ்யா சமஸ்பர்ஷாய் சதுர்விம் சதிபிஸ்ததா.
சாந்திஹோமம் சா ஜூஹ_யாத் சக்திதோ போஜ யேத்த்விஜன்.
 வைசியர்களால் (வர்த்தக சமூகம்) தொடப்பட்டு விட்டதானால்ää பின்னர் இருபத்தி நாலு கலசங்களை வைத்து முறைப்படி வணங்கியபின் பிம்பங்களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து சாந்திஹோமமும் பிராமணபோஜனமும் செய்யப்பட வேண்டும்.
3. அஷ்டோத்ர சதாய்ஹி சூத்ரைஹி சமஸ்புர்சே ஸ்னாபயேத் தடோ.
மகாசாந்திம் ததா ஹ_த்வா பிராமணானி போஜயேத்.
ஸ்புர்வைஹி அனுலோனயஹி சூத்ரோத பிராயஸ் சமாச்சரேத்.
 சூத்திரர்களால் (நாலாவதான உழைக்கும் சமூகம்) தொடப்பட்டு விட்;டதானால்ää பின்னர் நூற்றியெட்டுக் கலசங்களை வைத்து முறைப்படி வணங்கியபின்ää பிம்பங்களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மகாசாந்தி ஹோமமும் பிராமணபோஜனமும் செய்யப்பட வேண்டும். அனுலோமர்களால் தொடப்பட்டு விட்டதானால் பின்னர் பிராயச்சித்தம் சூத்திர ஸ்பர்ஷத்துக்கு விதிக்கப்பட்டிருப்பதுபோல் செய்யப்பட வேண்டும்.
(அனுலோமர் : தீண்டத்தகாதவர்)

 இதிலே சூழ்ச்சியாக இன்றைக்கும்கூட பார்ப்பனர்கள் சொல்லுகின்ற காரணம் மற்ற ஜாதிக்காரர் மட்டுமல்ல அர்ச்சகர் தவிர பிற பார்ப்பனர்கள் தொட்டுவிட்டாலும் தீட்டு என்று புகுத்தி வைத்திருக்கிறார்கள். அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் தெரியுமா? மற்றவர் தொட்டுவிட்டால் தீட்டு என்பவர்கள் அந்தத் தீட்டைப் போக்குவதற்கு பரிகாரம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள். அதிலேதான் அவர்களது சூழ்ச்சி இருக்கிறது. அதிலே ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று சொல்லக்கூடிய அளவுக்கு பேதங்களைப் புகுத்தி இருக்கிறார்கள்.

பார்ப்பன சூழ்ச்சி நரித்தந்திரம் அதில்தான் அடங்கியிருக்கிறது. அர்ச்சகன் அதே ஜாதியானதால்ää அவர்களைப் பொறுத்து ஒரு குறிப்பை அதில் இணைத்துக் கொள்வதால் அவர்களுக்கு நட்டம் எதுவும் இல்லை. பொதுவாக அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டது போல் ஒரு பிரமை ஏற்படுத்த அது உதவும் என்பதால்தான் அதனைப் புகுத்தியுள்ளார்கள்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது நாலு சாதியினரும் நாலாஞ்சாதியினரும் இழிந்த அனுலோமசாதியினரும் அதில் தனித்தனியாகக் குறிப்பிடப் பட்டிருப்பதும்ää பிராமணரால் தீட்டு ஏற்பட்டு விட்டால் வெறும் தண்ணீர் ஊற்றிவிட்டால் சிலை மீண்டும் புனிதமாகிவிடும் என்பதும்ää அதே காரியத்தை சத்திரியன் செய்தால் ஏழு கலசம் வைக்கவும் வைசியன் செய்துவிட்டால் 24 கலசமும் சாந்திஹோமமும் பிராமணர்க்குப் போஜனமும் நடத்தப்பட வேண்டும். என்றும்ää சூத்திரன் செய்துவிட்டால் 108 கலசமும் மகாசாந்தி ஹோமமும் பிராமணப் போஜனமும் செய்விக்கப்பட வேண்டும் என்பதும் சாதி தர்மத்தைக் கட்டிக் காக்கும் ஏற்பாடு என்பதோடு தீட்டு என்பதற்கான ஆதாரமாகவும் இந்த ஆகமம் விளங்கவில்லையா?

~தீட்டு|ப்பட்டு விட்டால் அதற்குப் பரிகாரம் பிராயச்சித்தம் சாதிக்குச் சாதி வேறுபடுவானேன்?
(ஆதாரம் : தந்தை பெரியார் எழுதிய ~கோயில் பகிஷ்காரம் ஏன்?| என்ற நூல்)
இதனை அந்த ஞானசூன்யம் விளக்குமா? இவனைப் போன்றவர்கள்தான் இன்றைக்கு ஆர்எஸ்எஸ் ஸில் புகுந்துகொண்டு நம்முடைய திராவிடர் இயக்கத்தை எதிர்க்கிறார்கள்.
அய்யா தந்த அறிவு ஆயுதத்தால் அதனை முறியடிப்போம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக