செவ்வாய், 25 அக்டோபர், 2016

விஷ்ணு ஒன்பது அவதாரம் எடுத்திருந்தாலும் பார்ப்பனர்களும் சங் பரிவாரும் இராமனையும் கிருஷ்ணனையும் மட்டும் முன்னிலைப்படுத்துவதேன்?



இராமன் விஷ்ணுவின்; அவதாரமாம். அந்த விஷ்ணு பத்து அவதாரம் எடுக்க வேண்டியதில் ஒன்பது அவதாரத்தை எடுத்து விட்டான். பத்தாவதாக கல்கி அவதாரம் எடுக்க வேண்டும். எப்பொழுது எடுப்பான் என்று எவனுக்கும் தெரியாது. அவன் அவதாரம் எடுக்கப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் மக்களை மடையர்களாக்க எவனெவனோ இன்று நான்தான் கல்கி அவதாரம் என்று ஏமாற்றுகிறான். அவன் பின்னாலும் செல்வதற்கு இங்கு மக்கள் இருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடு.

 விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்தான். ஆமை அவதாரம் எடுத்தான். நரசிம்ம அவதாரம் எடுத்தான் குள்ளப்பார்ப்பான் அவதாரம் எடுத்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இப்படி ஒன்பது அவதாரம் எடுத்திருந்தாலும் பார்ப்பனர்களும் சங் பரிவாரும் இராமனையும் கிருஷ்ணனையும் மட்டும் முன்னிலைப்படுத்துவதேன்?
 அனைத்து அவதாரங்களும் ஆரிய - திராவிடப்போராட்டத்தை விளக்கினாலும் இராமனும் கிருஷ்ணனும் பார்ப்பனர்களை மிக உச்சத்தில் உயர்த்திப்பிடிக்க உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களாகும்.

 பௌத்த இராமாயணம், யவன இராமாயணம், ஜைன இராமாயணம் என்று பல இராமாயணம் இருந்தாலும் இந்து மதவாதிகளால் போற்றப்படுவது வடமொழியில் வால்மீகி இரமாயணம் தமிழில் கம்ப இராமாயணம் இந்தியில் துளசிதாஸ் இராமாயணம் ஆகியவையாகும். இவை கதையிலும் கருத்துக்களிலும் பல்வேறு முரண்பாடு கொண்டவையாகும். இவை அனைத்திலும் பார்ப்பான்தான் எல்லாரையும்விட மிக உயர்ந்தவன் என்ற தத்துவம் உயர்த்திக்காட்டப்பட்டுள்ளது.
 பிரேம்நாத்பாஸ் என்பவர் துளசிதாஸ் இராமாயணத்தை ஆய்வு செய்து அதில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதியுள்ளார்.

~இராமராஜ்யத்தில் ஆண்களும் பெண்களும் தாராளமாக இருந்தார்கள். பார்ப்பனர்கள் முன்னாலே அவர்கள் அடக்கமான வேலைக்காரர்களாக இருந்தனர்.

     இராமராஜ்யத்தில் இரண்டுபேர்தான் வணங்கத்தக்கவர்கள். ஒன்று பார்ப்பனர்கள். இரண்டு கோமாதா. இராமன் இலட்சிய புருஷன். அவன் யாரை வணங்குகிறான்? பார்ப்பனர்களையும் பசுக்களையும் தான் வணங்குகிறான்.

      அடுத்து அதில்; இராமனே கூறுவதாகப் பல வசனங்கள் உள்ளன.

பார்ப்பனர்களுடைய சாபம் பயங்கரமானது. அதன் விளைவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. ஏழேழு பிறவிக்கும் உங்களை விடாது.|

பார்ப்பனர்களை எவர் எதிர்க்கிறார்களோ வெறுக்கவேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களை நான் விரும்ப மாட்டேன்

 பிரம்மா விஷ்ணுää சிவன் மற்றும் இவற்றின் ஆதிக்கத்தாக்கத்துக்கு உட்பட்ட எல்லாக் கடவுள்களுமே பார்ப்பனர்களை நன்றியோடு வணங்கித் தொழுதனர்.

 பார்ப்பான் நம்மை திட்டினாலும் கொன்றாலும் அவனமீது ஆத்திரப்படக்கூடாது. அப்பொழுதும் அவனைத்தான் நீ வணங்கவேண்டும்.

 இந்த உலகத்தில் மதிப்பிற்குரியதாகச் செய்யக் கூடிய காரியம் ஒன்றே ஒன்று உள்ளது. அது பார்ப்பனர்களின் காலடியைத் தொழுவதுதான். அப்பொழுதுதான் கடவுளுக்கு மகிழ்ச்சி வரும.;

 பார்ப்பனர் என்பவர் கடவுளுக்கு இணையானவர் என்பதை அறிந்துகொள்க! |
ஒரு இடத்தில் பார்ப்பனர்கள் கடவுளைவிட மேலானவர்கள் என்று கூறும் இராமன் இன்னொரு இடத்தில் பார்ப்பனர்கள் கடவுளுக்கு இணையானவர் என்கிறார்.

இப்பொழுது புரிகிறதா ஆர்எஸ்எஸ் சங்பரிவார், சுப்பிரமணியசாமிகள், இராமகோபாலன்கள், துக்ளக் சோ க்கள், சீரங்கத்து அம்பிகள் எல்லாம் இராமனை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று?
இராமராஜ்யம் வரவேண்டும் என்பதன் சூட்சுமமும் புரிகிறதா?       தொடரும்...
இவண் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக