செவ்வாய், 18 அக்டோபர், 2016

கொலைவெறி இன்னமும் தீட்சிதர்களுக்குக் குறையவில்லை

 அப்பர்ää சுந்தரர், திருஞானசம்மந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் நாயன்மார்கள். தேவாரம், திருவாசகம் பாடியவர்கள். இதில் அப்பர் என்ற திருநாவுக்கரசர் பார்ப்பனரல்லாதவர். சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு திருஞானசம்மந்தரால் மதமாற்றம் செய்யப்பட்டவர்.

 சம்மந்தர் பல பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஏமாற்றி அப்பரை மதம் மாற்றியிருக்கிறார். அவர் கொடுத்த வாக்குறுதியை அவரே மீறி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற பாகுபாட்டை வளர்த்து வருகிறார். பார்ப்பனரல்லாதார் சிவனை நேரடியாக வழிபடத் தேவையில்லை.

சிறுதெய்வங்களை வழிபட்டு அவற்றுக்கு ஆடு, மாடு கோழி முதலியவற்றைப் பலியிட்டு வழிபாடு நடத்திக்கொள்ளவேண்டும் என்றும் திருஞானசம்மந்தர் பிரச்சாரம் செய்து வந்தார்.
 திருஞானசம்மந்தரின் இந்த வஞ்சகங்களையும் பிரச்சாரங்களையம் கண்ட அப்பர் ~அய்யர் பேச்சைக்கேட்டு மோசம் போனோமேää தன்குலத்தவரான பார்ப்பனர்க்கு ஒரு ஆச்சாரமும்ää பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு ஆச்சாரமும் சம்மந்தர்; பரப்புகிறாரே| என்று பொறுமுகிறார்.
அத்துடன் அப்பருக்குத் தெரியாமலேயே மதுரையில் மங்கையர்க்கரசியின் துணையோடு எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிக் கொல்லுகிறார் சம்மந்தர்.

பார்ப்பனர்களின் இந்தப் பித்தலாட்டங்களையெல்லாம் நன்கு புரிந்துகொண்ட அப்பர் பார்ப்பனர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவே, தில்லை தீட்சிதர்கள் அவரை தந்திரமாக சிதம்பரம் கோயிலுக்குள் அழைத்துச்சென்று கதவை சாத்தி, அவரைக் கொன்று புதைத்துவிட்டு அப்பர் சிவனோடு இரண்டறக் கலந்துவிட்டார் என்று மக்களை ஏமாற்றிவிட்டனர்.

அதேபோல திருநாளைப்போவார் என்ற நந்தன் எப்படியாவது நடராசரை தரிசிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார். தன் பிறவியின் பயனே அதுதான் என்று கருதுகிறார். தில்லை தீட்சிதர்கள் இந்தப் பறையனை  கோயிலுக்குள் அனுமதித்தால் மற்ற பறையர்களும் கோயிலுக்குள் வர ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் நந்தனை தீயில் போட்டுக் கொளுத்திவிட்டு நந்தன் சிவனோடு இரண்டறக் கலந்துவிட்டார் என்று கதைகட்டி விட்டனர். சிதம்பர ரகசியம் என்பது இதுதான.;

அந்தத் திமிரும் கொழுப்பும் சிதம்பரம் தீட்சதர்களுக்கு இன்னமும் குறையாமல் அப்படியே இருப்பதால்தான் ஆறுமுகசாமி என்ற சிவனடியார், சிதம்பரம் கோயிலுக்குள் சென்று தமிழில் அப்பர் எழுதிய தேவாரப்பாடல்களைப் பாடுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இந்து அறநிலையத்துறையினரும் தமிழக அரசும் ஆணை பிறப்பித்த பின்னரும்கூட அவரை ஆலயத்துக்குள் நுழைந்து தமிழ்ப்பாடல்கள் பாடினால் கோயில் தீட்டாகிவிடும் என்று கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள். ஆறுமுகசாமி தன்னுடைய ஆதரவாளர்களோடு சென்று தேவாரம் பாடச் சென்றபோது தீட்சிதர்கள் ஆறுமுகசாமியையும், அவரது ஆதரவாளர்களையும் காவல்துறையினரையும்கூடத் தாக்கி இருக்கிறார்கள்

அப்பரையும் நந்தனையும் கொன்ற அதே கொலைவெறி இன்னமும் தீட்சிதர்களுக்குக் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தந்தை பெரியாருடைய இயக்கமும், முற்போக்கு இயக்கங்களும் மனித உரிமை அமைப்புக்களும் இல்லையென்றால் தேவாரம் பாடச்சென்ற ஆறுமுகசாமியையும் அதேபோல் கொன்றுவிட்டு சிவபக்தரான ஆறுமுகசாமி சிவனோடு அய்க்கியமாகிவிட்டார் என்று கதைவிடுவார்கள் என்பதில் அய்யமில்லை.

இதுபோன்ற செய்திகளையெல்லாம் லோட்டஸ் எஃப் எம் செய்தி வாசிக்கும் அம்பி கண்டு கொள்ள மாட்டார். ஏனெனில் தமிழும் தமிழர்களும் அவர்களுக்குத் தீட்டாயிற்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக