புதன், 12 அக்டோபர், 2016

சங்கராச்சாரி தனக்குத் தொல்லை கொடுத்த சங்கரராமனைக் கொன்றது மனு விதிகளின்படி சரியானதுதானே!

  காஞ்சி ஜெயேந்திர சரசுவதி சுப்பிரமணிய சங்கராச்சாரி. தனக்குத் தொல்லை கொடுத்த சங்கரராமனை பட்டப்பகலில் ஆள் வைத்துக் கொலை செய்தார். இந்த நாட்டில் அரசு, காவல்துறைää நீதிமன்றங்கள் அனைத்தும் இருந்தும் ஒரு பார்ப்பான் எப்படித் துணிச்சலாகக் கொலை செய்தான் என்று என் மனதில் நீண்ட நாட்களாக ஒரு குழப்பம் இருந்து வந்தது.

 அந்தணன் அரசனுக்கும் மேலே என்று இதே சங்கராச்சாரி ஒரு விழாவில் பேசியதும் எனக்கு நினைவில் வந்தது. அந்தணர் என்போர் அறவோர் என்ற திருக்குறள்படி அவர்கள் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு உள்ளவர்கள் என்று கருதிக் கொண்டிருந்தேன்.

 அந்தக் குழப்பத்துக்கெல்லாம் இப்பொழுது விடை கிடைத்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய கட்டுரைகள் ~பார்ப்பனீயத்தின் வெற்றி| என்ற நூலாகத் தொகுக்குப்பட்டுள்ளது. அந்த நூலை நான் படித்துக் கொண்டிருந்த போது அந்தக் குழப்பத்திற்கு எனக்கு விடை கிடைத்தது.
அதில் மனுதர்மத்தில் உள்ள சுலோகங்கள் எப்படி பார்ப்பனருக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அண்ணல் அவர்கள் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
அதாவது,

“சட்டமறிந்த பார்ப்பனன் மன்னனிடம் எந்த வழக்கையும் கொண்டு செல்ல வேண்டியதில்லை. தன் சொந்த அதிகாரத்தின் மூலம் தன்னைத் தொல்லைப் படுத்திய எவரையும் தண்டிக்கலாம்”
    மனு அத்தியாயம் 11. சுலோகம் 31
“ மற்றவர்களை நம்பியுள்ள அரசனின் பலத்தைக் காட்டிலும்ää தன்னையே நம்பியுள்ள பார்ப்பனனின் பலம் வலிமையானது. ஆகவேää ஒரு பார்ப்பனன் தன் எதிரிகளைத் தானே பணிய வைக்கலாம்.”
    மனு அத்தியாயம் 11. சுலோகம் 32
“ ஒரு பார்ப்பனன் மூவுலகத்தில் இருக்கும் மக்களைக் கொன்றாலும் கூட ரிக்ää யசுர்ää அல்லது சாம வேதங்களையும் உபநிடதங்களையும் மூன்று முறை பாராயணம் செய்தால் அனைத்துப் பாவங்களில் இருந்தும் முற்றிலும் விடுவிக்கப்படுவான்”
    மனு அத்தியாயம் 11. சுலோகம் 261-62

இவ்வளவு தெளிவாக ஒரு பார்ப்பனனுக்கு அதிகாரத்தை மனு தர்மம் வழங்கியிருக்கும் போது சங்கராச்சாரி தனக்குத் தொல்லை கொடுத்த சங்கரராமனைக் கொன்றது மனு விதிகளின்படி சரியானதுதானே!

காந்தியைக் கொலை செய்த கோட்ஷேவும் அதைத்தானே செய்தான்.
அதனால்தான் மனுதர்மத்தை நம்புகின்ற சுப்பிரமணிய சாமி, இராமகோபாலன்ää வெங்கட்ராமன்ää சோ அய்யர் உள்ளிட்ட அனைத்துப் பார்ப்பனர்களும் சங்கராச்சாரியைக் கைது செய்தபோது கண்டித்தார்கள்.

ஏனெனில் அவர்கள் மனுதர்மத்தை நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நடைமுறைப் படுத்தியிருக்கிறார்கள்.

இப்பொழுது பிஜேபி ஆர்எஸ்எஸ் அட்சி அமைந்துள்ளது. அவர்கள் மனுதர்மத்தை நம்புகிறவர்கள். அதனை அமுல்படுத்த வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள்.
இனிமேல் இதுபோன்ற தர்மங்கள் நிலைநாட்டப்படலாம் என்று எதிர் பார்ப்போமாக!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக