செவ்வாய், 18 அக்டோபர், 2016

சித்திரை அல்ல நமக்குப் புத்தாண்டு! தை முதல்நாளே நமக்குப் புத்தாண்டு!

மறைமலையடிகள்ää திருவிக, நாவலர் சோமசுந்தரபாரதியார், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தமிழறிஞர்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் எல்லாம் தமிழனுக்கென்று ஒரு ஆண்டை உருவாக்க வேண்டும் என்று குரல் கொடுத்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்காலம் ஓடிப்போனது.

திராவிடர் கழகம், தமிழர் அமைப்புக்களெல்லாம் தொடர்ந்து போராடியும் கிட்டவில்லை. வாராதுவந்த மாமணியாய் தமிழாய்ந்த தமிழ்மகன் தந்தை பெரியாரின் மாணாக்கன் பேரறிஞர் அண்ணாவின் வழித்தோன்றல் மானமிகு மாண்புமிகு கலைஞர் அய்ந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று அவர்கள் கனவையெல்லாம் நனவாக்கினார்.

தமிழனுக்குப் புத்தாண்டு ~தை முதல் நாளே| சித்திரை ஒன்று அல்ல என்று ஆணையிட்டுச் சொல்லிவிட்டார்.

ஏன் அப்படிச் சொன்னார்? சித்திரை ஒன்றில் தொடங்கும் ஆண்டின் பெயரில் ஒரு சொல்லும் தமிழ் இல்லை. அது எப்படித் தமிழனின் ஆண்டின் பெயர் ஆனது? அது ஆரியத்தின் திருத்தல் வேலை.
அறுபது பெயர்களாம் தமிழனின் ஆண்டுக்கு. அதை வரிசையாக யாராவது ஒன்றுவிடாமல் சொல்ல முடியுமா? நாட்காட்டியைப்; பார்க்காமல் இந்த ஆண்டின் பெயரை மட்டுமாவது சொல்ல முடியுமா? வழக்கத்தில் யாராவது அதனைப் பயன்படுத்துகின்றார்களா? பயன்படுத்தத்தான் முடியுமா?
கல்யாணம்ää கருமாதிக்கு பார்ப்பானின் ஆலோசனை கேட்டுப் பத்திரிகையில் போடுவதைத் தவிர வேறு எங்காவது அது பயன்படுகிறதா?

அலுவலகத்தில் கையொப்பமிட்டு அதற்குக்கீழே போடும் தேதி எது? பள்ளிகளில்ää கல்லூரிகளில், அது பயன்படுகிறதா? நாடாளுமன்ற சட்டமன்றத்தில் அதற்கு ஏதும் பயன் உண்டா?
பின் என்னதான் அதற்குப் பயன்? சோதிடக்காரன் புத்தாண்டு சோதிடப்பலன் என்று பயன்படுத்துகிறான். அவனாவது அதை முழுவதும் நம்புகிறானா?

ஜனவரி வந்தாலும் அதற்கும் புத்தாண்டுப்பலன் சொல்லுகிறான். ஒரு ஆண்டில் இரண்டுமுறை ஆண்டுப்பலன். ஆண்டுக்கே பலன் சொன்னபிறகு வேறு சோதிடம் பார்க்காமல் இருக்கிறானா? மாதப்பலன் என்கிறான்@ வாரப்பலன் என்கிறான். நாள் பலன் என்கிறான். நாள் பலன் பார்த்தபிறகும் மணிக்கணக்குக்கும் பலன் பார்க்கிறான். எந்தப்பலனையும் யாரும் நம்புவதில்லை.

இப்படி அந்த ஆண்டை பயன்படுத்துகிறவன்கூட முழுசாக அதை நம்பாதபோது அப்புறம் எதற்காக அது நமக்கு? இந்த அறுபது ஆண்டைக்கொண்டு ஒருவன் வயதையாவது கண்டுபிடிக்க முடியுமா? 60 முடிந்தபின்னர் அடுத்த ஆண்டு அவனைப்பார்க்காதோர் அவனுக்கு வயது ஒன்று என்பாரா? அறுபத்தி ஒன்று என்பாரா?

இப்படி எதற்குமே பயன்படாத இந்த ஆண்டுக்குப் பெயர் எப்படி வந்தது? கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும், நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்களாம் இவை. ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா? இது அறிவுக்குப் பொருந்துமா? இதற்காகப் புராணங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள கதையும் மிகமிக ஆபாசம். அசிங்கம். இதுதான் தமிழனின் ஆண்டுகள் என்றால் இதைவிட மானக்கேடு எதுவும் கிடையாது.

இதனால்தான் மாற்றினார் மானமிகு மாண்புமிகு கலைஞர். இதை மாற்றியதன்மூலம் தமிழனின் மானம் மீட்கப்பட்டது.  இதனால் சோதிடக்காரருக்குப்பிழைப்புப் போனது. ஆரியனுக்குப் பிழைப்புப்போனது. ஆரிய அடிமைகளுக்குப் பிழைப்புப் போனது.

எனவே, இனிமேல் திருவள்ளுவர் ஆண்டை மய்யமாய் வைத்து தமிழனின் ஆண்டுக்கணக்கைத் துவக்குவோம். கிறித்துவிற்கு 31 ஆண்டுகள் முந்தியவர் திருவள்ளுவர் என்று ஆய்தறிந்து சொன்னார் அறிஞர் பெருமக்கள். 2008 உடன் 31அய்க் கூட்டிக்கொள்வோம். இப்பொழுது நடப்பது திருவள்ளுவர் ஆண்டு 2039.

இதுவரை தூங்கியதுபோதும்@ தமிழா! விழித்துக்கொள். சித்திரை அல்ல நமக்குப் புத்தாண்டு! தை முதல்நாளே நமக்குப் புத்தாண்டு! பொங்கல் வைத்துப் புத்தாடை உடுத்தி அதனை நாம் கொண்டாடுவோம் தை மாதம். இப்பொழுது ஆரியம் திணித்த தடையைத் தாண்டுவோம்!                            
திருவள்ளுவராண்டு 2039
சித்திரை 1
13-04-2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக