வியாழன், 13 அக்டோபர், 2016



நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரித் தொடர்ந்து போராடி வருகிறார்கள். நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். தொழிலாளர் களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் உடனே உச்சநீதிமன்றம் தாவுகிறது நிருவாகம். இப்பொழுது உச்சநீதிமன்றமும் தெளிவாக - திட்டவட்டமாக தீர்ப்பு அளித்து விட்டது. என்.எல்.சி.யில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டு விட்டது.

இதே நிலைதான் திருவெறும்பூர் பெல் நிறுவனக் கதையும்; தொழிலாளர்கள் போராடிப் பார்த்து நீதிமன்றம் சென்றால் அதற்கு இடைக்காலத் தடை வாங்குவது, தொழிலாளர்களுக்குச் சாதகமாக நீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் அதனை எதிர்த்து நிர்வாகம் மேல் முறையீடு செய்வது என்கின்ற வஞ்சனையான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றால் சொந்தமாகச் செலவு செய்ய வேண்டும்; நிறுவனம் நீதிமன்றம் சென்றால் அதன் செலவு நிறுவனத்தைச் சேர்ந்தது. சோசலிசம்  பேசும் நாட்டில் (?) இப்படித் தொழிலாளர்கள் பழி வாங்கப்பட்டு  வருகின்றனர்.

நெய்வேலியில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஆணை திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தNt செய்யும்.

பெல் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியத்தை பெல் நிருவாகம்  ஏற்படுத்தாது என்று நினைக்கிறோம். பெல் நிருவாகம் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் இன்னொரு கண்ணில் வெண்ணெய்யையும் வைக்கும் வஞ்சனை நிறைந்ததாகும்.பெல் நிறுவனத்தைச் சேர்ந்த அரித்துவாரில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 557 பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த நியாயம் அதே நிறுவனமான திருவெறும்பூர் பெல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் கிடையாதாம்.நாம் என்ன ஒரு ஜனநாயக நாட்டில் தான் வாழுகிறோமா என்ற கேள்வி தான் எழுகிறது? ஊருக்கு ஒரு சட்டம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் இரயில்வே துறையின் அமைச்சராக இருந்தபோது ஏழரை லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களை இரயில்வேயில் நிரந்தரப் படுத்தினார். அதனையெல்லாம் எடுத்துக்காட்டி பெல் நிறுவனத்தில் இயங்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான திராவிடர் தொழிலாளர் கழகம் பல வடிவங்களிலும் போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறது.எந்த நியாயத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப் படாமல் தானடித்த மூப்பாக திருவெறும்பூர் பெல் நிர்வாகம் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

240 நாட்களுக்கு மேல் ஒருவர் தொடர்ந்து பணியாற்றினால், அவர் பணி நிரந்தரம் பெறத் தகுதி உடையவர் என்ற விதி முறைகள் இருந்தும், அவற்றை எல்லாம் வெற்று காகிதச் சுரைக்காயாகத் தான் இருக்கின்றன. 1978ஆம் ஆண்டு பெல் வளாகக் கூட்டுறவு ஒப்பந்த தொழிலாளர்கள் (Y1 No II) என்ற பெயரில் பெல் நிர்வாகமே ஒரு கூட்டுறவுச் சங்கத்தைத் துவக்கி நிர்வாகமே அதனை நடத்தியும் வருகிறது.

1300 பேர்கள் பணியாற்றினார்கள் என்றால் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப் பட்டோரே! இவர்களில்  பட்டதாரிகளும் உண்டு. பெல் நிறுவனத்தில் இவர்கள் செய்யாத பணிகளே கிடையாது. 30 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியும் கடைசி வரை நிரந்தரப்படுத்தப் படாமலேயே ஓய்வு பெற்றும் சென்று விட்டனர்.உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இது ஒரு மனித உரிமை மீறல் என்றே கூற வேண்டும். மனித உரிமை ஆணையம்கூடத் தலையிடலாம். அவ்வளவு நியாயம் இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை எல்லாம் நிறுவனத்துக்குத்தான் (முதலாளிக்குத்தான்) சேவை செய்யத் துடிக்கிறதே தவிர, உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக  பச்சை மையால் கையொப்பமிட மனம்  மறுக்கிறது.            

Text Box: 20-04-2013Text Box: ,tz; :jpuhtplu; njhopyhsu; fofk; நெய்வேலி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகவே ஆணை பிறப்பித்து விட்டது.  திருவெறும்பூர் பெல் நிருவாகம் இறங்கி வருமா? இல்லை தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டுமா?                                                                                                                        ed;wp!:  (tpLjiy jiyaq;fk; 20-04-2013)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக