செவ்வாய், 18 அக்டோபர், 2016

கோயில்களைக்கட்டி அங்கு கோடிக்கணக்கில் செல்வங்களைக் கொட்டி பார்ப்பனர் கொளுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த மன்னர்களின் வாரிசுகள் இன்று யாராவது அதை அனுபவிக்கிறார்களா?


 17-09-2008 கூட்டத்தில் முஸ்லிம் கொள்ளைக்காரனுக்குக் குரல் கொடுத்தோமாம். அருமையான கண்டுபிடிப்பு. கஜினி முகமது 17முறை படையெடுத்தும் தோற்றுப் போனான். 18ம் முறை படையெடுத்து வந்து கொள்ளையடித்துச் சென்றான். 17 முறை தோற்றுப் போன அவன் 18வது முறை மட்டும் வெற்றி பெற்றானா? சண்டை நடந்தால்தானே வெற்றி பெறுவதற்கு?

 கஜினி முகமது வெறும் இருபத்தையாயிரம் போர் வீரருடன் படையெடுத்து வருகிறான். நாலரை லட்சம் படைவீரர்களைக் கொண்ட சோமநாதபுரம் மன்னன் கஜினி முகமதுவை விரட்டிவிடலாம் என்று தைரியமாக இருந்த நேரத்தில் பார்ப்பனர்கள் நாங்கள் யாகம், வேள்வி செய்தே அவர்களை விரட்டி விடுவோம்@ போருக்குச் செலவிடும் தொகையை எங்களுக்குச் செலவிடுங்கள் என்று சொல்லி அத்துடன் அன்னதானம் சொர்ணதானம், கன்னிகாதானம் எல்லாவற்றையும் பெற்று பார்ப்பனர் கொழுத்து வந்தனர்.

 மன்னன் எதிர்த்துப் போர் செய்ய மாட்டான் என்பதையறிந்த கஜினிமுகமது மகிழ்ச்சியுடன் படையெடுத்து கோயிலை நெருங்கவே, தலைமைப் பார்ப்பான் கஜினியை முத்துப்பல்லக்கில் எதிர்கொண்டு வரவழைத்து அப்பொழுதே அய்ம்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிம்மாசனத்தில் கஜினியை அமர்த்தி  மூன்று கோடி ரூபாய் காணிக்கையாகத் தருகிறோம். இதை எடுத்துக்கொண்டு எங்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் செல்லுங்கள் என்று வேண்டுகிறான்.

 கஜினி முகமது ~காபிர் பன்றியே! உங்கள் மன்னனையும், மக்களையும் ஏய்த்து பணத்தையும் மானத்தையும் பறித்து உணவுப் பண்டங்களை அக்கினியில் போட்டு வீணடித்து அவர்களை ஏமாற்றுவதுபோல் என்னையும் ஏமாற்றப் பார்க்கிறாயா? எங்கே பொக்கிசத்தைக் காட்டு என்றவுடன் பார்ப்பனத் தலைவன் எல்லாச் செல்வங்களையும் காட்டினான். கஜினிமுகமது எல்லாப் பொருட்களையும் வாரிக்கொண்டு; போனான்.

 அதே நேரத்தில் அரசன் புதையல் எடுத்தால் அதில் பாதியை பிராமணருக்குக் கொடுத்து விடவேண்டும் பிராமணன் புதையல் எடுத்தால் அரசனுக்குத் தர வேண்டிது இல்லை. முழுவதையும் பிராமணனே எடுத்துக் கொள்ளலாம் என்று மனுதர்மத்தில் எழுதி வைத்து நாட்டின் செல்வத்தையெல்லாம் சுரண்டி வந்தது பார்ப்பனக் கும்பல்.

அதே மனுதர்மம் சூத்திரன் செல்வம் சேர்க்க தகுதியுள்ளவனாக இருந்தாலும் அதிகமாகப் பொருள் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அது பார்ப்பனர்களுக்கு மனத்துன்பத்தை அளிக்கும். அதனால் சூத்திரனின் செல்வத்தை பார்ப்பான் தாமாகவே எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறுகிறது.

மங்கலம் என்று முடியும் ஊர்களையும்  பல மான்யங்களையும் மன்னனிடம் தானமாகப் பெற்று அதை இன்னும் அனுபவித்து வருவது பார்ப்பனர்கள்தான்.

 மராட்டிய சிவாஜி, முஸ்லிம்களை வென்ற பிறகு நீ சூத்திரன் அதனால் நீ மன்னனாக முடியாது உன்னை சத்திரியனாக்குகின்றேன் என்று எடைக்கு எடை தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் அனைத்தையும் பெற்று மன்னனை சுரண்டியதும் பார்ப்பனர்களே.

 கோயில்களைக்கட்டி அங்கு கோடிக்கணக்கில் செல்வங்களைக் கொட்டி பார்ப்பனர் கொளுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த மன்னர்களின் வாரிசுகள் இன்று யாராவது அதை அனுபவிக்கிறார்களா? இன்னமும் அவற்றை அனுபவிப்பது பார்ப்பனர்கள்தானே?
 பார்ப்பனர் பெற்ற மான்யங்கள் இன்னும் பார்ப்பனரிடம் இருக்கிறது. கஜினிமுகமது கொள்ளையடித்துச் சென்ற செல்வங்கள் இன்று யாரிடம் இருக்கிறதோ நமக்குத் தெரியாது. ஒருவேளை அம்பிக்குத் தெரியுமோ என்னவோ? எனவே, பார்ப்பனர் வசம் உள்ள செல்வங்களைப் பிடுங்கி அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு கஜினிமுகமது கொள்ளையடித்த செல்வங்களையும் யாரிடம் இருக்கிறதோ அதைப்பிடுங்கி அரசாங்கத்திடம் ஆர்எஸ்எஸ் கும்பல் ஒப்படைக்கட்டும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக