திங்கள், 7 நவம்பர், 2016

நூறு வீடுகள் இருக்கும் இடத்தில் ஒரு வீட்டில் மட்டும் ~இது பதிவிரதை வீடு| என்று போர்டு மாட்டினால் மற்றவர் வீடு என்ன அர்த்தம்?| மற்ற வீட்டுக்காரர்களெல்லாம் ஒழுக்கமற்றவர் என்றுதானே அர்த்தம்?



நூறு வீடுகள் இருக்கும் இடத்தில் ஒரு வீட்டில் மட்டும் ~இது பதிவிரதை வீடு| என்று போர்டு மாட்டினால் மற்றவர் வீடு என்ன அர்த்தம்?| மற்ற வீட்டுக்காரர்களெல்லாம் ஒழுக்கமற்றவர் என்றுதானே அர்த்தம்?

நீ உன் கடையில் பிராமணன் என்று போர்டு மாட்டினால் நாங்களெல்லாம் சூத்திரன் என்றுதானே அர்த்தம்? என்று 60 ஆண்டுகளுக்கு முன்பு பிராமணாள் உணவு விடுதி என்று பெயர் போட்டிருப்பவர்களைப் பார்த்து பெரியார் கேட்டார். கேள்வியிலுள்ள நியாயத்தை உணர்ந்து அனைவரும் பிராமணாள் பெயரை எடுத்து விட்டார்கள். என்னுடைய கடை. நான் முதல் போட்டுத் தொழில் நடத்துகிறேன். எனக்குப் பிடித்த பெயரை வைத்துக்கொள்ள சுதந்திரம் இல்லையா? என்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் ஒருவர் எடுக்க மறுத்தார். அதனை எதிர்த்து பெரியார்; போராடினார். அந்த உணவு விடுதிக்காரரும் பெரியாரை சந்தித்து மன்னிப்புக் கேட்டு அப்பெயரை எடுத்து விட்டார்.

அறுபது ஆண்டுகளுக்குப்பின் அதே திமிர். அதே ஆணவம். என் கடை. என்ன பெயர் வேண்டுமானாலும் வைப்பேன். அதைக் கேட்க நீங்கள் யார்? என்று சீரங்கத்தில் ஆணவமாகப் பேசுகிறார் பிராமணாள் உணவு விடுதி என்ற பெயரில் ஓட்டல் நடத்திவரும் ஒரு பார்ப்பனர்.

காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. முதல்வரும் பச்சைக்கொடி காட்டியிருப்பார் போல் தெரிகிறது.
பிராமணன் என்பவன் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் என்கிறது மனுதர்மம். சத்திரியன் தோளில் பிறந்தானாம். வைசியன் தொடையில் பிறந்தானாம். சூத்திரன் காலில் பிறந்தானாம். ஒரு ஆளுக்கு அதுவும் ஒரு ஆணுக்கு நான்கு இடத்தில் பிறப்பு உறுப்பு இருக்குமா? அப்படித்தான் மனிதன் பிறந்தானா? அறிவியலுக்கும் இவர்களுக்கும் கொஞ்சமாவது சம்மந்தம் உண்டா?

முகத்தில் பிறப்பாருண்டோ முட்டாளே!                                          தோளில் பிறப்பாருண்டோ தொழும்பனே!   இடையில் பிறப்பாருண்டோ எருமையே!                காலில் பிறப்பாருண்டோ கழுதையே!              நான்முகன் ஒருவன் உண்டோ கூறடா நாயே!                      புளுகடா புகன்றவை அனைத்தும் போக்கிலியே!

என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இன்னமும் அந்தப் புளுகை தைரியமாகச் சொல்லிக் கொண்டு உலா வருகிறார்கள் என்றால் எவ்வளவு திமிர் இருக்கும்? உழைக்கும் மக்களான சூத்திரர் அனைவரும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று அந்த மனுதர்மம் சொல்கிறது. இதை ஏற்றுக் கொண்டு நாம் அனைவரும் தேவடியாள் மக்களாக இருக்க வேண்டுமா?  
அந்த மனுதர்மம் அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்ய வேண்டும் என்கிறது. பார்ப்பானுடைய குலத்தொழில் பிச்சை எடுத்து உண்பது. குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த இராஜாஜிää பார்ப்பனர் உணவு விடுதி வைப்பதையும் ஜவுளிக்கடை வைப்பதையும்ää செருப்புக்கடை வைப்பதையும் கண்டித்ததில்லை. கீழ்ஜாதி மக்கள் உயர் கல்வி கற்பதை ஆதரிக்காத திலகரும் பார்ப்பான் இந்த வேலைகளைச் செய்வதைக் கண்டித்ததில்லை. இவர்களுக்கு ஆதரவாக பிஜேபிää ஆர்எஸ்எஸ்ää இந்துமுன்னணிää அனுமார் சேனை எல்லாம் அணி திரள்கிறது. தமிழர்களே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைக் கண்டித்து திருவரங்கத்தில் கூட்டம் போட்டால் ரெங்கநாதர் எழுந்து ஓடிவிடுவார் என்று அனுமதி மறுக்கிறது காவல் துறை. நீதிமன்ற அனுமதியுடன் திருவானைக்காவலில் தமிழர் தலைவர் கி.வீரமணி 04-11-2012 அன்று எழுச்சியுரை ஆற்றுகிறார். எழுச்சியுடன் வாருங்கள். பார்ப்பானின் இழிசெயலை முறியடிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக