செவ்வாய், 22 நவம்பர், 2016

இயோலா மாநாட்டில் (13.10.1935) அண்ணல் அம்பேத்கர்.




அம்பேத்கர் முகமூடியா?

சனிஇ 26 ஏப்ரல் 2014 15:57
0


வாரணாசி தொகுதியில் வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நரேந்திர மோடி அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்திருக்கிறார்.
சரியானதுதானே! இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி ஒருவருக்குஇ பிரதமருக்கான வேட்பாளர் ஒருவர் மரியாதை செய்வது சான்றாண்மை மிக்க செயல்பாடு தானே என்றுஇ அவசரக் குடுக்கைத்தனமாகச் சொல்லக் கூடும். அப்படி கருத்துச் சொல்லுவது மேலோட்ட மானதாக இருக்க முடியுமே தவிரஇ ஆழமானதல்ல.

சங்பரிவார்இ அதன் அரசியல் வடிவமான பி.ஜே.பி. யைப்பற்றி சரிவர உணர்ந்தவர்கள் வேறு வகையாகத் தான் சிந்திக்க முடியும்.
அதுவும் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் தமது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அறிவித்துத் தேர்தலைச் சந்திக்க உள்ளது.
அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவதுஇ பசுவதைத் தடுப்புஇ வெளிநாடுகளில் வாழும் இந்துக்கள் பாதிக்கப் பட்டால்இ அவர்களுக்குப் பாதுகாப்பு என்பது உள்பட பச்சையான தனது இந்துத்துவா மனப்பான்மையை வெளிப்படுத்தக் கூடியதாய் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களோஇ இந்துவாய் நான் பிறந்திருந்தாலும்இ நான் இந்துவாய்ச் சாகமாட்டேன் என்று சொன்னதோடுஇ அதனைத் தம் வாழ்நாளில் செய்தும் காட்டியவர்.
இந்து மதத்தை விட்டுஇ புத்த மார்க்கத்தில் ஏன் சேரப் போகிறேன் என்பதற்கான காரணத்தை இயோலா மாநாட்டில் (13.10.1935) அறிவித்தார் அண்ணல் அம்பேத்கர்.
நான் தீண்டப்படாதவனாக இந்த இந்து மதத்தில் பிறந்துவிட்டேன். இவ்வாறு நான் பிறக்க நேர்ந்ததைத் தடுப்பது என்பது என் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால்இ இந்து மதத்தின் மரியாதை கெட்ட இழிவு படுத்தும் சூழ்நிலையின்கீழ் நான் வாழ மறுப்பது என்பது என் சக்திக்கு உட்பட்டதேயாகும். ஆகவேஇ நான் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்று குறிப்பிட்டாரே!

1956 அக்டோபர் 14 ஆம் நாள் நாகபுரியில் பல்லா யிரக்கணக்கானோர்களுடன் அம்பேத்கர் பவுத்தம் தழுவினார்.
அப்பொழுது அம்பேத்கரும்இ அவருடன் இணைந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களும் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் என்ன?
சமத்துவமின்மையும்இ ஒழுக்கமின்மையும் கொள்கை யாகக் கொண்டிருந்த என்னுடைய பழைய இந்து மதத்தைக் கைவிட்டதன்மூலம்இ இன்று நான் புதுப் பிறவி எடுத்துள்ளேன். கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்ற தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.
விஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்று கூறுவது தவறானதும்இ விஷமத்தனமானதும் ஆகும். இனி நான் எந்த ஒரு இந்துக் கடவுளுக்கோ அல்லது கடவுளச்சிக்கோ பக்தன் அல்லன். நான் மூதாதையர்க்குச் சிரார்த்தம் (திதி) செய்ய மாட்டேன் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டாரே!

அம்பேத்கரின் கொள்கைகளும்இ கோட்பாடுகளும் இந்த நிலையில் உறுதியாக இருக்கும் நிலையில்இ இந்து மதத்தில் கூறப்படும் விஷ்ணுவின் அவதாரமான ராமனுக்குக் கோவில் கட்டுவோம் என்று கூறிக்கொண்டு தேர்தலில் நிற்கும் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட் பாளர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்யப் புறப்படுமுன் அம்பேத்கர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துவது ஒடுக்கப்பட்ட மக்களைத் திசை திருப்பும் திருகுதாளம்தானே!
அதுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்பற்றி மோடியின் மனப்பான்மை என்ன? மலம் எடுப்பதைத் தெய்வீகக் காரியமாக அவர்கள் நினைத்துச் செயல்படக் கூடியவர் கள் என்று எழுதியவர்தானே! அவர்களின் இழி தொழி லுக்கு ஆன்மிக மலர் சூடி அழுத்தி வைக்கும் நயவஞ்சகம்தானே அதில் அடக்கம்.

இன்னும் குஜராத் மாநிலத்தில் கிராமப் பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் குடிதண்ணீர் எடுப்பதற்குக்கூடஇ நேரம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதே!
போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில்கூடஇ குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது எத்தகைய கொடுமை! இவர்கள் எல்லாம் தீண்டாமையை அனுசரிக்கும் குற்றவாளிகள் அல்லவா!
1927 டிசம்பர் 25 அன்று மகத்தில் மாநாடு ஒன்றை நடத்திய பாபா சாகேப் அம்பேத்கர்இ அன்று காலை 9 மணிக்கு மனுநீதி சாஸ்திரம் சிதைக்குத் தீ மூட்டுவது போலஇ ஒரு குழியில் வைத்து தீ மூட்டப்பட்டதே!

அதேநேரத்தில்இ குஜராத் மாநிலத்தின் முதலமைச் சரான நரேந்திர மோடியின் நிலை என்ன? அம் மாநிலத்தில் மனு தர்ம சாஸ்திரம் பாடத் திட்டத்தில் வைத்துச் சொல்லிக் கொடுக்கப்படுகிறதே!
இப்பொழுதாவது மோடி வாய் திறந்து சொல்லட்டுமே பார்க்கலாம். தீண்டாமை - அதற்குக் காரணமான ஜாதியை ஒழிப்போம்! இந்துக் கோவில்களில் இந்து மதத்தைச் சார்ந்த எந்த ஜாதியினரும் அதற்குரிய மதக்கல்விஇ பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் - அதற்கான சட்டம் செய் வோம் என்று பகிரங்கமாக அறிவிக்கட்டுமே பார்க்கலாம்.
உண்மைகளைக் களப்பலி செய்வது அல்லாமல் -  அம்பேத்கரைத் தவறாகச் சித்தரித்து கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளைத் தட்டிப் பறிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறார் - தந்திரம் செய்கிறார் மோடி என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்வார்களாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக