புதன், 30 நவம்பர், 2016

பிஎம்எஸ் 2014 மே மாதம் நடந்த தேர்தலுக்கு முன்பாக ஓட்டுப்போடச் சொல்லி கேட்டில் நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் சாமர்த்தியமாக யாருக்குப் போட வேண்டும் என்று சொல்லவில்லை.



ஆர்எஸ்எஸ் என்பது கொடிய விஷமுள்ள பாம்பு. அது நாற்பது குட்டிகளுக்கு மேல் போட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் பல்லிலுள்ள விஷம் அந்தக் குட்டிகளுக்கும் உள்ளது. ஆர்எஸ்எஸ் காந்தியைக் கொன்றது. அதன் குட்டிகள் திருச்சியில் மாநாடு போட்டு திரிசூலம் வழங்கி திரிசூலத்தின் ஒருமுனை இஸ்லாமியரைக் குத்த இன்னொரு முனை கிறிஸ்தவர்களைக் குத்த மூன்றாவது முனை நாத்திகம் பேசும் கம்யூனிஸ்ட் தி.க காரர்களைக் குத்த என்று வெறியூட்டினார்கள்.

அதன் பிறகு பாதிரியார்கள் கொல்லப்படுகிறார்கள்ää கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்படுகிறார்கள்ää மசூதிகளும் சர்ச்சுகளும் எரிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். இதையெல்லாம் செய்தது ஆர்எஸ்எஸ் போட்ட குட்டிகள்தான். தாய் எட்டுப் பேரைக் கடித்துக்கொன்றால் குட்டிகள் பதினாறு பேரைக் கடித்துக்கொல்லும்.


ஆனால் அந்தக் குட்டிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்று சொல்லிக் கொள்ளும். பிஜேபி என்கிற குட்டிக்கு ஜனசங்கம் என்ற பெயர்தான் முதலில் இருந்தது. இது ஆர்எஸ்எஸ் முன்பே போட்ட குட்டி. ஆனால் அதற்குப் பின்பு போடப்பட்ட குட்டிதான் பிஎம்எஸ் என்கிற குட்டி. பிஎம்எஸ் என்கிற குட்டி சொன்னது “நாங்கள் 1955லேயே போடப்பட்ட குட்டிகள். பிஜேபியை 1982ல்தான் ஆர்எஸ்எஸ் போட்டது. அப்படியிருக்க அந்தக் குட்டிக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்று சொல்வது தவறு என்றது. பெயர்தான் 82ல் மாற்றப்பட்டதே தவிர அந்தக் குட்டியை ஆர்எஸ்எஸ் 1952லேயே போட்டது. இதிலேயே பித்தலாட்டம்.

அந்த பிஜேபி குட்டி சார்பாக ரங்கராஜன் குமாரமங்கலம் திருச்சியில் நின்றபோது அந்த பிஜேபி குட்டிக்கு ஓட்டுப்போடச்சொல்லி கேட் மீட்டிங் புக் பண்ணிக் கொடுத்து தேர்தல் ஏஜன்ட் வேலை பார்த்து ஜெயிக்க வைத்துää அவர் மூலம் பல சலுகைகளை அனுபவித்தது பிஎம்எஸ் குட்டி. அவர் செத்த பிறகு சுகுமாறன் நம்பியாரை பிஜேபி குட்டி தேர்தலில் நிறுத்தியபோது அவருக்கும் கேட் மீட்டிங் புக் பண்ணிக்கொடுத்து தேர்தல் வேலை பார்த்ததுää பிஎம்எஸ் குட்டி. அதற்குப் பிறகு லலிதா குமாரமங்கலத்துக்கும் கேட் மீட்டிங் புக் பண்ணி இத்தியாதி வேலை பார்த்ததும் பிஎம்எஸ் குட்டிதான். இந்த வரலாறெல்லாம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது என்று நினைத்துக்கொண்டு அந்தக் குட்டிக்கும் இந்தக் குட்டிக்கும் சம்மந்தமில்லை என்று புஷ் புஷ் என்று சீறுகிறது.

ஆனால் இந்த பிஎம்எஸ் குட்டி 2014 மே மாதம் நடந்த தேர்தலுக்கு முன்பாக ஓட்டுப்போடச் சொல்லி கேட்டில் நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் சாமர்த்தியமாக யாருக்குப் போட வேண்டும் என்று சொல்லவில்லை. இந்தக் குட்டிகளும் யாருக்கு ஓட்டுப் போட்டிருப்பார்கள் என்று தெரிந்திருக்கும். உள்ளே போய் சுகம் அனுபவித்து விட்டு வந்து வெளியிலே வந்து சிணுங்கிக் கொண்டேää அந்தக் குட்டிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்று சத்தம் போடுகிறது.

இந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் நின்றவர் கேப்டன் கட்சிக்காரர் என்பதால் இப்படி ஒரு நடிப்பு. இ.வா. திராவிடக்கட்சி சங்கத்தின் பேரில் கேட் மீட்டிங் புக் பண்ணித் தேர்தல் பிரச்சாரம் பண்ணியது. அதே நேரத்தில் பிஜேபி குட்டியே நின்றிருந்தால் அந்தக் குட்டியோடு எந்த சம்மந்தமுமில்லை என்று மூச்சு விட்டிருக்குமா? அப்படி மூச்சு விட்டிருந்தால் ஆர்எஸ்எஸ் பாம்புதான் சும்மா விட்டிருக்குமா?

அந்த பிஜேபி குட்டியை விபரம் புரியாமல் வீட்டுக்குள் விட்டதால் (நாட்டுக்குள் விட்டதால்) ஏராளமான விஷத்தைக் கக்கி எல்லாவற்றையும் கபளீகரம் செய்யப் பார்க்கிறது. அதனை நியாயப் படுத்த முடியாது என்பதால் கும்பலில் ஒரு திருடன் மாட்டிக் கொண்டால் மாட்டிக் கொள்ளாத திருடனும் திருடன்! திருடன்! என்று சத்தம் போட்டுத் தப்பித்து ஓடுவது போல பிஜேபி குட்டியின் தவறுகளை எதிர்ப்போம் என்று நாடகமாடி மீதியுள்ள பொருட்களையும் நயவஞ்சகமாகக் கவரத் துடிக்கும் திருடன் போல பிஎம்எஸ் குட்டி நடிக்கிறது.

இந்த அனைத்துக் குட்டிகளுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொழிலாளர்களை எச்சரிக்கிறோம். இப்பொழுது கடிக்கவில்லை என்றாலும் படுக்கையில் இருக்கும் பாம்பு நம்மைக் கடிக்காமல் விடாதுää சட்டையைக் கழற்றி விட்டால் பாம்பு பல்லியாக மாறிவிடாதுää பாம்பு பாம்புதான். அதன் பல்லிலுள்ள விஷம் கொடியதுதான். அதனை நம்ப வேண்டாம் என்று தொழிலாளர்களை குறிப்பாக இளம் தொழிலாளர்களை எச்சரிக்கிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக