செவ்வாய், 29 நவம்பர், 2016

பிள்ளையார் விடுமுறையை ரத்து செய்து அனைவருக்கும் பயன்படக் கூடிய விருப்ப விடுப்புக் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்


National & Festival holidays for the year 2016 


S.NO
FESTIVAL NAME
DATE
DAY
1
PONGAL
15.01.2016
FRIDAY
2
THIRUVALLUVAR DAY
16.01.2016
SATURDAY
3
REPUBLIC DAY
26.01.2016
TUESDAY
4
GOOD FRIDAY
25.03.2016
FRIDAY
5
TAMIL NEW YEAR DAY
14.04.2016
THURSDAY
6
INDEPENDENCE DAY
15.08.2016
MONDAY
7
VINAYAKAR CHATHURTHI
05.09.2016
MONDAY
8
BAKRID
13.09.2016
TUESDAY
9
AYUDHA POOJA
10.10.2016
MONDAY
10
DEEPAVALI
29.10.2016
SATURDAY

NOTE: In addition, TWO (2) Optional Holidays may be availed by the employees after obtaining prior permission of the Competent authority.

National & Festival holidays for the year 2017 


S.NO
FESTIVAL NAME
DATE
DAY
1
PONGAL
14.01.2017
SATURDAY
2
REPUBLIC DAY
26.01.2017
THURSDAY
3
TAMIL NEW YEAR DAY
14.04.2017
FRIDAY
4
MAY DAY
01.05.2017
MONDAY
5
INDEPENDENCE DAY
15.08.2017
TUESDAY
6
VINAYAKAR CHATHURTHI
25.08.2017
FRIDAY
7
BAKRID
02.09.2017
SATURDAY
8
AYUDHA POOJA
29.09.2017
FRIDAY
9
GANDHIJAYANTHI
02.10.2017
MONDAY
10
DEEPAVALI
18.10.2017
WEDNESDAY
11
CHRISTMAS
25.12.2017
MONDAY

NOTE: In addition, ONE (01) Optional Holidays may be availed by the employees after obtaining prior permission of the Competent authority.

2014ம் ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால் என்ன விளைவுகள் வரும் என்பதை எடுத்துச்சொல்லி திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் கொடுத்து நேரிலும் பேசினோம். நாம் எடுத்துக் கூறிய காரணத்தின் நியாயத்தை உணர்ந்துகொண்ட அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களும் 2015ம் ஆண்டில் விடுமுறைப் பட்டியலில் இருந்து விநாயகர் சதுர்த்தியை நீக்கி விட்டார்கள். நமது சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தோம்.

ஆனால் 2016ம் ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியலில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அறிவித்திருந்தார்கள். அப்பொழுது கேட்டதற்கு வழக்கமாக விடப்படும் விடுமுறைகள் எல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதால் இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்திக்கு விடுமுறை அறிவித்துள்ளோம். அடுத்த ஆண்டு இதனை மாற்றி விடுகிறோம் என்றார்கள். ஆனால் தற்பொழுதும் 2017ம் ஆண்டு விடுமுறைப் பட்டியலிலும் அதே பிள்ளையார் சதுர்த்தி இடம் பெற்றிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக, அண்ணா திமுக, ஐஎன்டியுசி சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இடம் பெறும் பணிக்குழுவில் பிள்ளையாருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது தொடர வேண்டுமா? நிறுவனம் ஆரம்பித்ததிலிருந்து இடம் பெறாத பிள்ளையார் இப்பொழுது மட்டும் தொடர்ச்சியாக இடம் பெறுவது நியாயமா?

2014ல் கேட்டபொழுது 4 விருப்ப விடுப்பு வருகிறது. அதனால்தான் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றார்கள். 2015ல் அதை நீக்கியவர்கள் மீண்டும் 2016ல் காரணமில்லாமல் சேர்த்தார்கள். இந்த ஆண்டு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 11 நாட்கள் விடுமுறை எதற்காக? 10 நாள் மட்டுமே விடுமுறை இருந்தால் 2 விருப்ப விடுப்பு கிடைக்கும் அல்லவா?

விருப்ப விடுப்புக்கள் இருந்தால் எவ்வளவு நன்மை என்பதனை அனைத்து ஊழியர்களும் அறிவார்கள். தொடர்ச்சியான ஈட்டிய விடுப்பு அல்லது தொகுப்பு விடுப்பு எடுக்கப்படும்போது விருப்ப விடுப்பு இருந்தால் ஈட்டிய விடுப்பும் தொகுப்பு விடுப்பும் பாதுகாக்கப்படும். அவை இரண்டும் நமக்கு ஒரு சேமிப்பு. பணி ஓய்வின்போது பணமாகக் கிடைக்கும்போது  எவ்வளவு கூடுதல் தொகை கிடைக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

தெரிந்திருந்தும் Holiday Work கிடைக்கும் என்பதால் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு ஒத்துக்கொண்டோம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத சப்பைக்கட்டு.  Holiday Work எத்தனை பேருக்குக் கிடைக்கும்? 2000 பேருக்குக் Holiday Work  கிடைக்காது. ஆனால் விருப்ப விடுப்பு தொழிலாளி அதிகாரி என அனைத்துப் பணியாளர்களுக்கும் கிடைக்கும்.

எல்லோருக்கும் பயனுள்ள விருப்ப விடுப்பை ஒழித்து விட்டு ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படக் கூடிய விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பது மதவெறியர்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாமே தவிர மற்றவர்களுக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை. எனவேää இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. பணிக்குழு உறுப்பினர்கள் மீண்டும் கலந்து பேசி அதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உங்களுக்கு பக்தி என்பதுகூட இருக்கலாம். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் பிள்ளையார் என்பது இன்றைக்கு அரசியலுக்குப் பயன்படக்கூடிய ஒரு கருவியே தவிர அதனைப் பயன்படுத்துபவர்கள் யாரும் பக்திக்காகப் பயன்படுத்துவதில்லை. தமிழர்களுக்கோ தமிழர் பண்பாட்டிற்கோ சிறிதும் தொடர்பில்லாத வடநாட்டிலிருந்து தமிழர்மீது திணிக்கப்பட்ட பண்பாட்டுத் திணிப்பின் ஒரு வடிவம்தான் பிள்ளையார். பிள்ளையாரைப் பற்றிப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் கதைகளெல்லாம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் சம்மந்தமில்லாதது என்றாலும் அதனைப் பற்றிச் சொல்லப்படும் ஒரே ஒரு கருத்தைப் பதிவு செய்வது அனைவருக்கும் பயனளிக்கும் என்று கருதுகிறோம்.

பிள்ளையாரை புராணங்கள் முருகனின் அண்ணன் என்கிறது. அண்ணனான பிள்ளையாருக்கு தமிழ்நாட்டில் கோயில்கள் இருக்கிறது. ஊர்வலம் நடக்கிறது. கணபதிää கணேசன் என்றெல்லாம் நம் தமிழர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் தம்பியான முருகனுக்கு வடநாட்டில் எங்காவது கோயில் உண்டா? திருவிழா உண்டா? குறைந்தபட்சம் தமிழர்கள் கணபதிää கணேசன் என பெயர் வைத்திருப்பதைப் போல வடநாட்டான் யாருக்காவது முருகன்ää வேலன்ää பழனி என்கின்ற பெயர்கள் இருக்கிறதா?

இதிலிருந்தே இந்தப் பிள்ளையார் என்பது தமிழர்களுக்கு சம்மந்தமில்லாத கடவுள் என்பதும் வடநாட்டிலிருந்து தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதும் புரியவில்லையா?

தமிழனுடைய மொழி வடநாட்டானால் அழிக்கப்படுகிறது. தமிழனுடைய கலாச்சாரம் வடநாட்டானால் ஒழிக்கப்படுகிறது. பக்தியில்கூட தமிழனின் வழிபாடு அழிக்கப்பட்டு வடநாட்டானுடைய கடவுள்களைத் தமிழன் தலையில் கட்டி தமிழனை மேலும் வடநாட்டானுக்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு பணிக்குழு உறுப்பினர்கள் பலியாவதோடு அனைத்துத் தொழிலாளர்களையும் பலிகடாவாக்க வேண்டுமா? என்பதைச் சிந்தித்து இந்தப் பிள்ளையார் விடுமுறையை ரத்து செய்து அனைவருக்கும் பயன்படக் கூடிய விருப்ப விடுப்புக் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று பணிக்குழு உறுப்பினர்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக