ஞாயிறு, 20 நவம்பர், 2016

கஜினி முகமது சோமநாதபுரத்தின்மீது படையெடுத்து வந்து கொள்ளையிட இடைத்தரகராய் இருந்து காட்டிக் கொடுத்தவர்கள் பார்ப்பனர்களே


~இந்த நாட்டில் ஏராளமான செல்வங்கள் கொட்டிக்கிடந்தன. முஸலிம்கள் படையெடுத்து வந்து எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். கஜினி முகமது அப்படிப்பட்ட கொள்ளைக்காரன்| என்பதுதான் ஆர்எஸ்எஸ்ää சங்பரிவார்களின் பிரச்சாரமாகும்.

உண்மையில் நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்தவர்கள் பார்ப்பனர்களே!

கஜினி முகமது சோமநாதபுரத்தின்மீது படையெடுத்து வந்து கொள்ளையிட இடைத்தரகராய் இருந்து காட்டிக் கொடுத்தவர்கள் பார்ப்பனர்களே என்பதை வரலாறு சொல்லும்.

கஜினி முகமது  சோமநாதபுரம் மீது பதினேழுமுறை படையெடுத்து வந்தான் பதினேழுமுறையும் அவனால் வெல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு நாலரை லட்சம் படைவீரர்கள் சோமநாதபுரம் மன்னனிடம் இருந்தது.  பதினெட்டாவது முறைதான் அவனால் வெல்ல முடிந்தது. அதற்குக் காரணம் பார்ப்பனர்களே!

அங்கு பார்ப்பனர்கள் பூமிக்கடியில் சிவலிங்கத்தைப் புதைத்து வைத்து திடீரென்று சுயம்புவாய்க் கிளம்பி வந்தான் சிவன் என்று கதைகட்டி மன்னனை நம்பவைத்து கோயில் கட்டி கர்ப்பக்கிரகத்தின் உட்புறம் காந்தக்கல்லால் வேலை செய்து இரும்பால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை நடுவில் வைத்து அது பூமியில் படாமல் அந்தரத்தில் (காந்தக் கவர்ச்சியால்) நிற்க வைத்தனர்.

இதைக்கண்டு அரசன் முதலானோர் அதிசயிக்க ~~இது கைலாயநாதர் தானே லிங்கமாக வந்து எழுந்தருளியது. எனவேதான் பூமியில் படாமல் அந்தரத்தில் நிற்கிறது || என்று பார்ப்பனர்கள் ஏமாற்றினர்.

இதைவைத்து அதிக பொருட்செலவில் கோயில் கட்ட வைத்து பார்ப்பனர்களுக்காக அன்னசத்திரங்கள்ää வேதபாடசாலைகள் எனக்கட்டப்பட்டு பொன்னும் மணிகளும் பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்டன. பதினோறாயிரம் பார்ப்பனர்கள் அங்கு தினமும் விலாபுடைக்கத் தின்று கொழுத்து பார்ப்பனரல்லாதாரை அடிமைப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் பதினெட்டாவது முறை கஜினி முகமது வெறும் இருபத்தையாயிரம் போர் வீரருடன் படையெடுத்து வருகிறான். நாலரை லட்சம் படைவீரர்களைக் கொண்ட சோமநாதபுரம் மன்னன் கஜினி முகமதுவை விரட்டிவிடலாம் என்று தைரியமாக இருந்த நேரத்தில் பார்ப்பனர்கள் நாங்கள் யாகம்ää வேள்வி செய்தே அவர்களை விரட்டி விடுவோம்@ போருக்குச் செலவிடும் தொகையை எங்களுக்குச் செலவிடுங்கள் என்று சொல்லி அத்துடன் அன்னதானம் சொர்ணதானம்ää கன்னிகாதானம் எல்லாவற்றையும் பெற்று பார்ப்பனர் கொழுத்து வந்தனர்.

மன்னன் எதிர்த்துப் போர் செய்ய மாட்டான் என்பதையறிந்த கஜினிமுகமது மகிழ்ச்சியுடன் படையெடுத்து கோயிலை நெருங்கவேää தலைமைப் பார்ப்பான் கஜினியை முத்துப்பல்லக்கில் எதிர்கொண்டு வரவழைத்து அப்பொழுதே அய்ம்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிம்மாசனத்தில் கஜினியை அமர்த்தி  மூன்று கோடி ரூபாய் காணிக்கையாகத் தருகிறோம். இதை எடுத்துக்கொண்டு எங்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் செல்லுங்கள் என்று வேண்டுகிறான்.

கஜினி முகமது ~காபிர் பன்றியே! உங்கள் மன்னனையும்மக்களையும் ஏய்த்து பணத்தையும் மானத்தையும் பறித்து உணவுப் பண்டங்களை அக்கினியில் போட்டு வீணடித்து அவர்களை ஏமாற்றுவதுபோல் என்னையும் ஏமாற்றப் பார்க்கிறாயா? எங்கே பொக்கிசத்தைக் காட்டு என்றவுடன் பார்ப்பனத் தலைவன் எல்லாச் செல்வங்களையும் காட்டினான். கஜினிமுகமது எல்லாப் பொருட்களையும் வாரிக்கொண்டு அந்தரத்தில் நின்ற லிங்கத்தையும் அடிக்க. அது காந்தக் கவர்ச்சியிலிருந்து தரையில் விழுந்தது.

இப்படி கஜினி முகமதுவும். பாபரும் மற்ற முஸ்லிம்களும் இங்கு வர இடைத்தரகராய் இருந்தவர்கள் பார்ப்பனர்களே! இந்தப் பார்ப்பனர்களால்தான் நம்நாட்டுச் செல்வமெல்லாம் வீணடிக்கப்பட்டு கொள்ளையும் போயின.

அவர்கள் மற்றவர்களை இடைத்தரகர் என்ற சொல்வது அயோக்கியத்தனமானது. இவர்கள் தம்மை தேசப் பற்றாளர்களாகக் காட்டிக்கொண்டு பார்ப்பனரல்லாத மக்களை ஏய்ப்பதை  வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தேசம்ää தேசியம்ää தேசப்பற்று என்று சொல்வதெல்லாம் பார்ப்பன நலனை முன்னிறுத்தித்தானே தவிர. பார்ப்பனரல்லாத மக்களுக்கு இவர்களால் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை.
எனவே. ஆர்எஸ்எஸின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பாதீர்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக