திங்கள், 28 நவம்பர், 2016

பிஎம்எஸ் _ம் நிர்வாகமும் நாணயமாக நடந்துகொள்வார்களா?



1977ல் நடந்த பங்குபெறும் சங்கத் தேர்தலில்  சி.அய்டியு , தொமுச, பாய்லர் பிளான்ட் எம்ளாயீஸ் யூனியன். அண்ணா தொழிலாளர் சங்கம் ஆகியவை வெற்றி பெற்றன. அதற்குப் பிறகு பங்குபெறும் சங்கத் தேர்தலையே நடத்தாமல் நிர்வாகம் காலம் கடத்தி வந்தது.

 அதன் பின்னர் 1995ல் பங்குபெறும் சங்கத் தேர்தல் நடந்தது. அதில் பாய்லர் பிளான்ட் எம்ளாயீஸ் யூனியன், அண்ணா தொழிலாளர் சங்கம் ஆகிய இரு சங்கங்களும் தோல்வி அடைந்தன. புதிதாக அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியனும் பிஎம்எஸ் ஸ_ம் வெற்றி பெற்றன. தோல்வியுற்ற பாய்லர் பிளான்ட் எம்ளாயீஸ் யூனியன், அண்ணா தொழிலாளர் சங்கம் ஆகியவை தொழிலகத்தின் உள்ளேயிருந்த தங்கள் அலுவலகங்களை நிர்வாகத்திடம் ஒப்படைத்தன. வெளியில் உள்ள அலுவலகங்களை ஒப்படைக்கவில்லை.

அதில் பிஎம்எஸ்எஸ_க்கு படுகோபம். அந்த இரண்டு சங்கங்களும் நாணயமில்லாதவர்கள், ஒழுக்கமில்லாதவர்கள் என்ற பாணியில் பிரச்சாரம் செய்தது குடியிருந்தவனுக்கு வீடு சொந்தமா? 17 ஆண்டுகளாய் அனுபவித்துவிட்டால் அலுவலகம் சொந்தமா? டவுன்ஷிப்பில் குடியிருப்பவர்களுக்கெல்லாம் வீடு சொந்தமாகிவிடுமா என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் பில்ஸ் வெளியிட்டது பிஎம்எஸ்.

2001ல் நடந்த பங்குபெறும் சங்கத் தேர்தலில் பிஎம்எஸ் தோற்றுப் போனது. பாய்லர் பிளான்ட் எம்ளாயீஸ் யூனியன், அண்ணா தொழிலாளர் சங்கம் ஆகியவை மீண்டும் வெற்றி பெற்றன தங்கள் அலுவலகத்தை மீண்டும் தக்க வைத்துக்கொண்டன.

ஆனால் அதில் தோற்றுப் போன பிஎம்எஸ் என்ன செய்திருக்க வேண்டும்?  பாய்லர் பிளான்ட் எம்ளாயீஸ் யூனியன், அண்ணா தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் செய்தது தவறு என்று வாதிட்ட பிஎம்எஸ் முறைப்படி அவர்கள் அலுவலகத்தை உடனடியாகக் காலி செய்து நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டுமா இல்லையா?

அப்படிச் செய்யாமல் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனக்குச் சிறிதும் உரிமையில்லாத அலுவலகத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது. ஒழுக்கத்துக்கும் நாணயத்துக்கும் நேர்மைக்கும் தாங்கள் மட்டுமே மொத்த குத்தகைதாரர்கள் போலவும் மற்றவர்கள் எல்லாம் மோசம் என்றும் பேசியவர்களின் யோக்கியதைக்கு இதுவே தக்க சான்று.

இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. யோக்கியமும்ää நாணயமும் ஒழுக்கமும் மருந்துக்கேனும் தங்களிடம் இருந்தால் பிஎம்எஸ் தன்னுடைய அலுவலகத்தை உடனடியாக நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இப்பொழுது நடைபெறும் தேர்தலில் நியாயமாக பிரியாணி, தண்ணி தங்கக்காசு, செல்போன், வெள்ளிக்குத்துவிளக்கு, குங்குமச்சிமிழ் எதுவுமே தொழிலாளிக்குக் கொடுக்காமல் தங்கள் கொள்கைகளையும் சாதனைகளையும் மட்டுமே சொல்லி வெற்றி பெற்று இழந்த தங்கள் அலுவலகத்தை மீண்டும் பெறலாமே!

தாங்கள் மகாமகா யோக்கியர்கள் என்று நிரூபிக்கக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பிஎம்எஸ் பயன்படுத்திக்கொள்ளுமா? பிறர் தம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதே போலத் தாமும் நடப்பதுதானே ஒழுக்கம்?

மற்ற சங்கங்களை ஒழித்துக்கட்ட பிஎம்எஸ் ஸை வளர்த்து விட்டு ஆர்எஸ்எஸ் ஸை வளர்க்கத் துணையாக இருந்த நிர்வாகம்  உடனடியாக பிஎம்எஸ் ஸின் அலுவலகத்தைக் கைப்பற்றி முறையாகத் தேர்தலை நடத்த வேண்டும்.

இல்லையேல் பங்குபெறாத மற்ற சங்கங்களுக்கும் பிஎம்எஸ்எஸ_க்குக் கொடுத்துள்ள அலுவலகம் போல் அலுவலகம் ஒதுக்கித் தரவேண்டும்.
பிஎம்எஸ் ஸ_ம் நிர்வாகமும் நாணயமாக நடந்துகொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இவண்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக