வெள்ளி, 18 நவம்பர், 2016

அறிவுக்குப் பொருத்தமற்ற இந்த தீபாவளியை அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கொண்டாட வைத்த பார்ப்பனக் கும்பல் தமிழர்கள் அனைவரும் கொண்டாடக்கூடிய பொங்கல் திருநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்யாதது ஏன்?



வங்காளத்தில் பிதான் சந்த்ர ராய் என்பவர் மருத்துவம் படிக்க இலண்டன் சென்றார். ஒரு பிராமணர் வெளிநாடு செல்வது அதுவும் கடல் தாண்டிச் செல்வது பாவம் என்று அந்த ஊரிலுள்ள அவர்களது உறவினர்கள் அவரைத் தங்கள் ஜாதியிலிருந்து விலக்கி வைத்து விட்டனர்.

அந்த பி.சி.ராய் 1948 முதல்1962 வரை மே.வங்க முதல்வராகப் பதவி வகித்தார். இப்படி பிராமணர் யாரும் கடல்தாண்டிப் போகக் கூடாது என்று இருந்த விதி இன்று என்ன ஆனது? எந்தப் பார்ப்பான் வெளிநாட்டுக்குப் போவதை விரும்பாமல் இருக்கிறான்? அவன் இல்லாத நாடு இன்று உலகில் உண்டா? யாரையாவது எந்த அக்கிரஹாரத்திலாவது விலக்கி வைத்திருக்கிறார்களா?

வெளிநாடு அதாவது சீனாவுக்குச் செல்ல இருந்த சங்கராச்சாரியாரை வேத சாஸ்திர சம்பிரதாயப்படி செல்லக் கூடாது என்று சொன்னதினால்தானே சங்கராச்சாரி காஞ்சி சங்கரராமனை பட்டப்பகலில் போட்டுத் தள்ளினார்?
வேதத்தின்படி பார்ப்பானே போகக் கூடாது என்று வேதம் சொல்லுகின்றபொழுது வேதத்தையே இன்று கடல்தாண்டி எடுத்துச் சென்று விட்டார்களே! அது எப்படி? முற்காலமாக இருந்தால் ஒரு அசுரன்; வேதத்தைத் திருடிக்கொண்டு கடலுக்குள் ஒளிந்துகொண்டான். பகவான் அவனைக் கொன்று வேதத்தை மீட்டெடுத்தார் என்று கதை விடலாம். அறிவியல் வளர்ச்சியில் இன்று அதற்கும் வழியில்லை. பகவான் இன்று வருவதற்கு வழியேயில்லை.

அப்படிப்பட்ட வேதம் மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் தின்னக்கூடிய மக்கள் நிறைந்த அமெரிக்க செனட்டில் முழங்கப்படுவது எப்படி? இந்து முன்னணியே! விளக்குவாயா? இந்தியாவிலுள்ள மக்களை முட்டாளாக்கியது போதாதென்று அமெரிக்காக்காரனையும் முட்டாளாக்கி பிழைப்பு நடத்த வேண்டுமா? அவனிடத்தில் வேதத்தின் பொருளை அவனது மொழியில் மொழிபெயர்த்துச் சொன்னாயா?

தமிழன் வீட்டுத் திருமணத்தில் தமிழ்ப்பெண்களை சோமன்; வைத்திருந்தான்@ கந்தர்வன்; வைத்திருந்தான் என்று கதை விடுகின்றாய். அதையே நீ தமிழில் சொன்னால் உனக்கு என்ன கிடைக்கும் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதால்தான் அதனை செத்தபாஷையில் சொல்லிப் பிழைப்பு நடத்துகிறாய்!

அப்படி இருக்க அமெரிக்காக்காரனிடம் வேத மந்திரத்தை அவனுடைய மொழியில் எடுத்துச் சொல்ல உன்னால் முடியுமா? முடியுமென்றால் கீழ்க்காணும் மந்திரத்தை ஆங்கிலத்தில் சொல்லி இதுதான் வேதம் என்று சொன்னால் அமெரிக்காக்காரன் ஏற்றுக் கொள்வானா?

இதோ ரிக் வேதத்திலுள்ள ஒரு சுலோகம்:

தெய்வாதீனம் ஜகத் சர்வம்:                                                                         மந்திராதீனம் துதைவதம்:                                                                              தந்மந்த்ரம் பிராமணா தீனம்:                                                                       பிராமணா மமதேவதாஹா!

~உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது@ கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணருக்குக் கட்டுப்பட்டது எனவேää இவ்வுலகில் பிராமணரே அனைவரும் வணங்கத்தக்க தெய்வம்| என்பதுதான் அதன் பொருள்.

இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களைக் கல்வி அறிவில்லாமல் செய்து வேதத்தைப் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்று மிரட்டி வைத்து நீ கடவுiளை நேரடியாக வணங்கக் கூடாது. எங்களைத்தான் சாமி என்று வணங்க வேண்டும் என்று ஏமாற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பிழைப்பு நடத்தி வந்தாய்.

இதனை அமெரிக்காக்காரனிடம் சொல்லி நீ என்னைத்தான் சாமி என்று வணங்க வேண்டும் என்று சொல்லிப் பார் வேதமந்திரம் செனட்டில் முழங்குகிறதா? அல்லது அவன் விடும் அறையில் உன் செவியில் முழங்குகிறதா? என்று தெரியும். அதேபோல் அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டிய கதைதான் தீபாவளி என்று உண்மையைச் சொல். அவன் வாயால் சிரிப்பானா? பின்புறத்தில்; சிரிப்பானா? என்பதும் தெரியும்!

அறிவுக்குப் பொருத்தமற்ற இந்த தீபாவளியை அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கொண்டாட வைத்த பார்ப்பனக் கும்பல் தமிழர்கள் அனைவரும் கொண்டாடக்கூடிய பொங்கல் திருநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்யாதது ஏன்? குறைந்தபட்சம்  ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கம் பொங்கல் வாழ்த்துக்கூடத் தெரிவிக்காததது ஏன்? தமிழுக்கும் தமிழருக்கும் நீங்கள் விரோதிகளா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக