திங்கள், 14 நவம்பர், 2016

மோடி மோடி என்றார்கள். அவர் வந்தால் வளர்ச்சி வளர்ச்சி என்றார்கள்.



மோடி மோடி என்றார்கள். அவர் வந்தால் வளர்ச்சி வளர்ச்சி என்றார்கள். சீனாவில இருக்கிற சாலையைப் படம் புடிச்சி குஜராத்தில இருக்குற ரோடுன்னு சொன்னாங்க. அதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நம்பாம ஒரே ஒரு தொகுதிய மட்டும் கொடுத்தாங்க. மற்ற மாநிலத்துல உள்ளவன் எல்லாம் ஏமாளி ஆனாங்க!

நாங்க வந்தா நூறே நாளிலே வெளி நாடுகளில் இருக்கிற கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்துருவோம். இங்கே இந்தியாவில இருக்கிற ஒவ்வொருத்தர் அக்கவுண்டிலயும் 15 லட்சம் ரூபாய் போட்டுருவோம் னு சொன்னாங்க. அத நம்பி ரொம்பப் பேரு கடன வாங்கி வச்சிக்கிட்டு ஆவலா அந்தப் பணத்த எதிர் பார்த்துக்கிட்டிருந்தா ~நாங்க எப்ப அது மாதிரி சொன்னோம்| அப்படீன்னுட்டாங்க. இப்ப அமித்ஷா அது வெறும் ஜோக் குன்னு சொல்றாரு!

மன்மோகன் அரசாங்கம் இருந்தப்ப பெட்ரோல் விலை ஏறுதுää ஏறுது ன்னு சொன்னாங்க. நாங்க வந்தா அத ஒடனே கொறச்சுப் புடுவோம்னாங்க. அன்னைக்கி மன்மோகன் ஆட்சியில சர்வதேச சந்தை விலை பேரலுக்கு 147 டாலர் வித்தப்ப லிட்டர் 67 ரூபாய்க்குக் குடுத்தாங்க. ஆனா இப்ப பேரல் 45 டாலர்தான் விக்குது. இப்பவும் அதே 67 ரூபாய்தான். 2002ல 65 டாலர் வித்தப்பவே லிட்டர் 28 ரூபாய்க்கு குடுத்தாங்க. இன்னைக்கு 45 டாலர்தான். அப்ப எத்தனை  ரூபாய்க்கு பெட்ரோலக் குடுக்கலாம்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!
மோடி வந்தா வளர்ச்சி வளர்ச்சி இளைஞர்களுக்கு வளர்ச்சி என்று டமாரம் அடிச்சாங்க. சரி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்புக் கொடுப்பாங்கன்னு பாத்தா அரசுத்துறையை எல்லாம் கார்ப்பரேட் கையில குடுக்கிறாங்க. ஏன் கார்ப்பரேட் கையில குடுக்கிறாங்க தெரியுமா? அங்கேதான் அவாள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இவாளையெல்லாம் பின்னுக்குத் தள்ளலாம் கிறதுதான் இவாளோட நோக்கம்.

சும்மா பேசப்படாது. ஏதாவது ஆதாரம் இருக்கான்னு கேக்குறீங்களா?

EPW என்ற வாரப் பத்திரிகை இன்றைய நிலையில் பிராமணீயம் என்ற கட்டுரையை எழுதியிருக்கு. அதிலே 1000 கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள 9052 போர்டு உறுப்பினர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த 9052 பேரில் பிராமணர்கள் 4037 பேர். இது 44.6 சதவிகிதம். சத்திரியர் 43 பேர் 0.5 சதவிகிதம். வைசியர் 4167 பேர் 46 சதவிகிதம். இதர பிற்படுத்தப்பட்டவர் 137 பேர் . 1.5 சதவிகிதம். தாழ்த்தப்பட்ட மலைவாழ் பிரிவினர் 319 பேர் அது 3.5 சதவிகிதம் பேர்.
இப்பப் புரியுதா மோடி ஏன் எல்லாவற்றையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கத் துடிக்கிறார் என்று?

கடைசியா ஒன்னு சொல்றோமுங்க. இந்த ஆர்எஸ்எஸ் விஹெச்பி ஏபிவிபி பிஜேபி பிஎம்எஸ் இ.முன்னணி சு.ஜா. மஞ்ச் எல்லாம் சுதேசி சுதேசின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க இல்லையா? நம்ம மோடிஜி அதை எப்படி கடைப்பிடிச்சார் தெரியுங்களா?

அமெரிக்க அதிபர் ஒபாமா நம்ம குடியரசு தின நிகழ்ச்சியில கலந்துக்க வந்தப்ப நம்ம மோடிஜி நாலு தடவ டிரெஸ் மாத்தினாரு. ஒவ்வொரு டிரெஸ்சும் என்ன விலை தெரியுமா? அதிகம் இல்லீங்க வெறும் பத்து லட்சம் ரூபாய்தான். அந்த டிரெஸ் மெட்டீரியல் சுத்தமான சுதேசி மில்லுங்க. இங்கிலாந்தில இருந்து வாங்கினதுங்க. அவன் கிறிஸ்தவனுங்க. தச்சுக் குடுத்தவனும் சுதேசி டெய்லர்தாங்க. ஆஸ்திரேலியாக்;காரன். இவனும் கிறிஸ்தவன்தானுங்க. அவரு போட்டிருக்கிற கண்ணாடி இத்தாலித் தயாரிப்புங்க. 2 லட்சம் ரூபாய்தானுங்க. அவரோட கடிகாரம் ஸ்விஸ் தயாரிப்புங்க. 2லட்சத்து 35 ஆயிரமுங்க. அவரோட பேனா ஜெர்மன் தயாரிப்புங்க. அதோட விலை  ஒரு லட்சம் ரூபாய்தாங்க. இந்துக் கடையிலேயே வாங்கனும்@ இந்துத் தயாரிப்புக்களயே வாங்கனும்னு நமக்குச் சொல்லிப்புட்டு அவர் எங்கே வாங்கியிருக்காரு பாத்தீங்களா?

இவருதாங்க நம்ம ஏழை இந்தியாவோட பிரதமர். நம்ம நாட்டோட பெருமய எப்படிப் பறைசாற்றினார் பார்த்தீங்களா? இன்னும் இருக்குதுங்க! இப்போதைக்கு இது போதுங்க! இதையெல்லாம் எங்கே நாம அம்பலப்படுத்pறப் போறோம் என்பதாலதாங்க நம்ம பிஜேபி காரங்க பெரியார் மேல அவதூறு பரப்பி திசை திருப்பிக்கிட்டிருக்கிறாங்க! புரிஞ்சிக்கோங்க!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக