திங்கள், 7 நவம்பர், 2016

கோட்ஷே ஒரு இஸ்லாமியனா?


1996ல் நேரிட்ட ஒரு விபத்து பிஜேபி ஆட்சியிலமர்ந்ததாகும். காங்கிரசின் கையாலாகாத்தனம்ää எதிர்க்கட்சிகளின் இயலாமை இவையெல்லாம் சேர்ந்து பிஜேபிக்கு ஆட்சியிலமரும் வாய்ப்பைத் தந்தன. இராமனுக்குக் கோயில் கட்டுவோம் என்றும்ää பாபர் மசூதியை இடித்தும் மதக்கலவரத்தைத் தூண்டி இதுவரை மற்றவர்களைப் பார்த்தீர்கள்@ ஒருமுறை பிஜேபிக்கு வாய்ப்புத் தாருங்கள் என்று கெஞ்சி ஓட்டுக் கேட்டும் தமிழ்நாட்டிலுள்ள திராவிடக்கட்சிகள்ää ஆந்திர தெலுங்குதேசம் போன்ற 23கட்சிகளின் தோளில் ஏறி ஆட்சிக்கட்டிலில் அம்ர்ந்து கொண்டு நாங்கள் எவ்வளவு உயரம் பார்த்தீர்களா என்று கெக்கலி கொட்டியது.

ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்ததில் ஆர்எஸ்எஸ் இன் கோர முகம் மிகத் தெளிவாகத் தெரியவே ஏற்றியவர்களும் இறக்கி விட்டுவிட்டார்கள். ஓட்டுப்போட்டவர்களும் உதாசீனப்படுத்தி விட்டார்கள். அதனால் மீண்டும் மத்தியில் ஆட்சியைப்பிடிக்க வழியேயில்லாமலும் பழைய பதவி சுகத்தை நினைத்தும் நாக்கில் சப்புக் கொட்டிக்கொண்டும் பிஜேபி அலைகிறது.


இனி இராமனைக் காட்டியோää கிருஷ்ணனைக்காட்டியோ ஏமாற்ற முடியாது என்ற நிலையில் எதை வைத்து அரசியல் செய்யலாம் என்று ஆர்எஸ்எஸ் மூளை யோசித்தது. இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினை ஊழல் மற்றும் கறுப்புப் பணம். அறிவுஜீவிகள்ää இளைஞர்கள் பொதுநல சிந்தனையாளர்கள் எல்லோராலும் பேசக்கூடிய பிரச்சினை இது. இதைத் தானே கையிலெடுத்துப் போராடக்கூடிய துணிவும் யோக்கியதையும் பிஜேபிக்கு கண்டிப்பாகக் கிடையாது.

அதனால் சமூக ஆர்வலர் என்ற முகமூடியை அணிவித்து அன்னா ஹசாரேயைக் களத்தில் இறக்கியது. அடுத்து பாபா ராம்தேவ் என்ற சாமியார். இவர்களின் பின்னணியில் இருப்பது ஆர்எஸ்எஸ் சங் பரிவார்ää பிஜேபி என்பதில் அய்யம் எதுவும் இல்லை. ஆனால் அன்னா ஹசாரேயோää ராம்தேவோ தாங்கள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் என்பதை ஒத்துக் கொள்வதில்லை. அன்னா ஹசாரே சவால் விடுகிறார். நான் ஆர்எஸ்எஸ் காரன் என்பதை நரூபிக்க முடியுமா? என்று. அதேபோல் பெல் நிறுவனத்தில் செயல்படும் பிஎம்எஸ் சங்கமும் தனக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் சம்மந்தமே இல்லை என்று சத்தியம் செய்கிறது.

இதற்கு என்ன காரணம்? ஆர்எஸ்எஸ் என்பது வெகு மக்களுக்கு எதிரான அமைப்பு. பார்ப்பன நலனை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட இயக்கம். ஜாதி வெறியும் மதவெறியுமே அதன் மூலதனம். அதில் உறுப்பினர் என்பதையோ அதனுடைய ஆதரவாளர் என்பதையோ வெளிப்படையாகச் சொல்வதற்கு அதன் ஆதரவாளர்களுக்கே அவமானமாக இருக்கிறது.

சமுதாயத்தில் நல்ல செல்வாக்குள்ள மரியாதைக்குரிய நபர் யாராவது இருந்தால் அவருக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும்கூட ஏதாவது ஒரு விதத்தில் அவருடன் தொடர்புள்ளவர் என்பதை பெருமையாகப் பலரும் கருதுவர். ஆனால் அதே நேரத்தில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டு காவல்துறையால் கைவிலங்கிடப்பட்டு வீதியில் ஒருவர் இழுத்துச் செல்லப்படும்போதுää அதற்கு முதல் நொடிவரை அவருடன் தண்ணியடித்துää தம்மடித்துää பிரியாணி தின்று உறவாடியவர்கூட அவருடைய தொடர்பை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள மாட்டார். அத்துடன் வேறு யாராவது இவரிடம் அவர் உனக்கு வேண்டியவர்தானே என்று கேட்டாலும் இல்லை இல்லை அவருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்றுதான் சொல்வார்.

அதுபோலத்தான் ஆர்எஸ்எஸ் என்பது வெகுமக்களிடம் அம்பலப்பட்டுக்கிடக்கிறது அதனால்தான் யாரும் அதனுடன் உள்ள உறவை பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. அதன் காரணமாகத்தான் அன்னா ஹசாரே நான் ஆர்எஸ்எஸ் இல்லை என்பதை அடித்துச் சொல்கிறார். பாபா ராம்தேவ் பசப்பு வார்த்தை பேசுகிறார்.

காந்தியைக் கொலை செய்த கோட்ஷேää ஆர்எஸ்எஸ் ஸிலேயே பயிற்சி எடுத்திருந்தாலும்ää ஆர்எஸ்எஸ்ää பிஜேபி காரர்கள் கோட்ஷே ஆர்எஸ்எஸ் அல்ல என்கிறார்கள். அவர் ஆர்எஸ்எஸ் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்கிறார்கள். எப்படி இவ்வளவு துணிச்சலாகச் சொல்கிறார்கள் என்றால் ஆர்எஸ்எஸ் ஸில் உறுப்பினர் அட்டை எதுவும் வழங்கப்படுவதில்லை. அதனால் யாரையும் ஆர்எஸ்எஸ் என்று நிரூபிப்பது கடினம்தான்.

கோட்ஷேவின் தம்பி கோபால் கோட்ஷேää தனது அண்ணன் ஆர்எஸ்எஸ் காரர்தான் என்றும் தானும் தனது அண்ணனும் ஆர்எஸ்எஸ் ஸில் பயிற்சி பெற்றதையும் கோட்ஷே ஆர்எஸ்எஸ் அல்ல என்று சொல்பவர்கள் கோழைகள் என்றும் கூறினார். அதற்குப் பிறகும் ஆர்எஸ்எஸ் காரர்கள் கோட்ஷே ஆர்எஸ்எஸ் அல்ல என்று கோழைத்தனமாகக் கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதே வேளையில் காந்தியைக் கொன்ற கோட்ஷேää கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான். அத்துடன் தன்னை ஒரு இஸ்லாமியனாகக் காட்டிக்கொள்ள இஸ்லாமியர்கள் செய்யக்கூடிய சுன்னத் செய்திருந்தான். அவன் ஒரு முஸ்லிம் என்று நிரூபிப்பதற்கு ஆதாரம் இருந்தது. ஆனால் ஆர்எஸ்எஸ் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை அழித்து விட்டான்.

அப்படியானால் கோட்ஷே ஒரு இஸ்லாமியனா? அவன் ஒரு இஸ்லாமியன் என்பதை ஒப்புக்கொண்டால் அவன் ஆர்எஸ்எஸ் இல்லை என்பதையும் ஒது;துக்கொள்ளலாம். ஒரு மராட்டிய சித்பவன் பார்ப்பான் எப்படி ஒரு முஸ்லிமாக இருக்க முடியும்?
அதுபோலத்தான் அன்னா ஹஸாரேயும் ஆர்எஸ்எஸ் இல்லை என்பதுவும். பாபா ராம்தேவுக்கு ஆர்எஸ்எஸ் தொடர்பு இல்லை என்பதும் அதுபோலத்தான். பெல்லில் பிஎம்எஸ் ஆர்எஸ்எஸ் சுடைய தொழற்சங்கம் இல்லை என்பதுவும் அந்த அடிப்படையில்தான்.
எனவேää ஆர்எஸ்எஸ் என்பது ஒரு மக்கள் விரோத அமைப்பு. அதன் கொள்கைகள் வெகுமக்களுக்கு விரோதமானவை. பார்ப்பன நலனை மட்டுமே முன்னிறுத்துபவை. எனவே அதனுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது வெகுமக்கள் நலன் நாடுவோரின் கடமையாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக