திங்கள், 28 நவம்பர், 2016

அவன்; திருடுகிறான், அதனால் நானும் திருடுகிறேன் என்பது ஒழுக்கமுள்ளவன் பேச்சா?

அய்யய்யோ! ஒழுக்கமாக இருக்கச் சொல்கிறார்களே!

பிஎம்எஸ் என்றால் புருடா மன்னர்கள் சங்கம் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்பொழுது புலம்பல் மன்னர்கள் சங்கமாக மாறியிருக்கிறது. நிர்வாகத்தின் எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து வாயிற்கூட்டமாம். எது எதேச்சாதிகாரம்? 2002ல் தோற்றுப்போனாய். அப்பொழுது விட்டுவைத்தது நிர்வாகம். 2007ல் தோற்றுப் போனாய். அப்பொழுதும் விட்டுவைத்தது. 2011லும் தோற்றுப்போனபிறகும் விட்டுவைக்கவில்லை என்றால் அது எதேச்சாதிகாரமா? சட்டப்படி நடந்துகொள்ளச் சொன்னால் அது எதேச்சாதிகாரம் என்றால் நீ நடப்பது ஒழுக்கக் கேடு அல்லவா?

மற்ற யூனிட்களில் அய்என்டியூசியும் சிஅய்டீயூவும் காலி செய்யவில்லையாம். அதனால் இவர்கள் காலி செய்ய மாட்டார்களாம். நீங்கள்தான் அவர்களை ஒழுக்கமில்லாதவர்கள் நாணயமில்லாதவர்கள் என்று கூறுகிறீர்களே! நீங்கள் மட்டுமே அக்மார்க் ஒழுக்கசீலர்கள் என்று பேசுகிறீர்களே! அவர்கள் செய்யாததை செய்து காட்டி நீங்கள் மட்டுமே ஒழுக்கசீலர்கள் என்று நிரூபிக்க வேண்டியதுதானே! ஒரு திருடனிடம் போய் திருடாதே என்று சொன்னால் அவன்; திருடுகிறான், அதனால் நானும் திருடுகிறேன் என்பது ஒழுக்கமுள்ளவன் பேச்சா?

இவர்கள் மட்டும்தான் தொழிற்சங்கப் பணியும் தேசியப்பணியும் செய்கிறார்களாம். ஆர்எஸ்எஸ்ஸை வளர்ப்பதுதான் தேசியப்பணியா? காந்தியைக் கொன்றதுபோல் இன்னும் யாரைக் கொல்லப் பயிற்சி கொடுக்கிறீர்கள்? பாபர் மசூதியை இடித்ததுபோல் இன்னும் எந்த மசூதியை இடிக்கக் கற்றுக் கொடுக்கிறீர்கள்? இதற்கு உங்களுக்கு அலுவலகம் வேண்டுமா? வேறு எங்காவது சொந்தமாகக் கட்டிக்கொண்டு அதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே?

இங்கே இருக்கக் கூடிய அதிகாரிகளுக்கு அதிகாரமில்லையாம். கார்ப்பரேட் நிர்வாகம்தான் எல்லாவற்றுக்கும் அத்தாரிட்டியாம். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. கார்ப்பரேட் என்பது பூணூல் வட்டம். அவர்களுடைய ஆசையெல்லாம் மனுதர்மப்படி நடக்கவேண்டும் என்பதுதான். அதனால்தானே மேற்பார்வையாளரும்ää பொறியாளரும் நிரந்தரமாக எடுத்துவிட்டு பிளடி ஒர்க்கரை மட்டும் தற்காலிகமாக எடுக்கிறார்கள். இங்கே இருப்பவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும்தானே மனிதவளத்துறை அதிகாரிகள்?

 அதனால் அவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டீர்களோ? பார்ப்பான் சொன்னால் இனிக்கும் சூத்திரன் சொன்னால் கசக்குமோ? இதுதான் உங்கள் பண்பாடோ? அதனால்தான் தேர்தலைக்கூட இவர்கள் நடத்துவதற்கு தகுதி இல்லை என்றீர்களோ? தேர்தல் கமிஷன் என்றால் பூணூல் கமிஷன். அவாளுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கிறதோ? மற்றவாளுக்குத் தகுதி இல்லையோ? அதனால் இவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டீர்களோ?
கேட்டால் அதிகாரிகள் ஊழல் செய்கிறார்களாம். ஊழலை மறைக்கத்தான் இவர்கள் அலுவலகத்தைக் காலி செய்யச் சொல்கிறார்களாம். அரிய கண்டுபிடிப்பு!

உங்கள் அலுவலகத்தைக்காலி செய்யச் சொன்னபிறகுதான் ஊழல் உங்கள் கண்ணுக்குத் தெரிந்ததோ? நீங்கள் அலுவலகத்தைக் காலி செய்யாமல் இருப்பது ஊழல் இல்லையோ?

எனவேää நிர்வாகமே! சட்டப்படி நீங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு தொழிலாளர்கள் என்றும் துணை நிற்பார்கள். எவருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் சட்டத்தை நிலை நாட்டுங்கள். பிஎம்எஸ்ஸே! நீ செய்வது ஆர்எஸ்எஸை வளர்க்கும் வேலையே தவிர தொழிற்சங்கப்பணியே அல்ல என்பது இங்கே இருக்கக் கூடிய அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தெரியும் மானம்ää வெட்கம்ää சூடுää சொரணையிருந்தால் அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு அதற்குப்பிறகு பேசு! இவண்:  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக