செவ்வாய், 8 நவம்பர், 2016

. இந்துமதப் புராணங்களைப் படித்துத்தான் மேல்நாட்டு விஞ்ஞானிகளே அறிவியல் கருவிகளைக் கண்டு பிடித்தார்கள் என்று கதை


இந்துமதத்தில் இல்லாததே கிடையாது. இந்துமதப் புராணங்களைப் படித்துத்தான் மேல்நாட்டு விஞ்ஞானிகளே அறிவியல் கருவிகளைக் கண்டு பிடித்தார்கள் என்று கதை விடுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். எந்த விஞ்ஞானி தனது  கண்டுபிடிப்பை இந்தப் புராணத்தைப் படித்துக் கண்டு பிடித்ததாகச் சொன்னான் என்று கேட்டால் காத தூரம் ஓடுவார்கள்.

இன்று சூரிய கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையி;ல் சந்திரன் நேர்கோட்டில் வருவதால் சூரியகிரகணம் ஏற்படுவதாக அறிவியல் சொல்கிறது.

ஆனால் புராணங்கள் என்ன கூறுகின்றன? சூரியனையும், சந்திரனையும்  ராகு,கேது என்கின்ற பாம்புகள் விழுங்குவதால் சூரியகிரகணமும், சந்திரகிரகணமும்  ஏற்படுகிறது என்கின்றன. அதற்கு ஒரு கதையையும் கட்டியுள்ளார்கள்.

இமயமலையை மத்தாகவும்ää ஆதிசேசன் என்கின்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு அந்தப் பாம்பின் விசமுள்ள தலைப்பகுதியைக் கோழைகளான அசுரர்கள் பிடித்துக்கொள்ளää         வீராதிவீரர்களான(?) தேவர்கள் வால்பகுதியைப் பிடித்துக்கொண்டு பால்கடலைக் கடைந்தார்களாம்.  அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது, கர்ப்பக விருட்ஷம், வெள்ளைக்குதிரை, அய்ராவதம் என்ற யானை, லட்சுமி எல்லாம் தோன்றினவாம். அமிர்தம் தோன்றியபோது அதை தலைப்பக்கம் நின்ற அசுரர்கள் பறித்துக்கொண்டு ஓடினார்களாம். மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி அமிர்தத்தை தேவர்களுக்கே பறிமாறினாளா(னா)ம். அசுரர்களுக்கு அதில் பங்கு தர மறுத்துவிட்டார்களாம். இரண்டு அசுரர்கள் மட்டும் தேவர்களைப்போல மாறுவேடம் போட்டுக்கொண்டு அமிர்தம் சாப்பிட பந்தியில் அமர்ந்து விட்டார்களாம். அவர்கள்தான் இராகுää கேது என்பவர்களாம். அதனை சூரியனும் சந்திரனும் கண்டுபிடித்துக் காட்டிக் கொடுத்து விட்டார்களாம். அமிர்தம் கிடைக்காத கோபத்தில் தங்களைக் காட்டிக்கொடுத்த சூரியனையம் சந்திரனையும் விழுங்குவார்களாம் அந்த இராகுவும் கேதுவும். அதுதான் சூரிய, சந்திர கிரகணங்களாம்.

இதுதான் புராணங்கள் கூறும் அறிவியல்(?) உண்மை. இதிலே என்ன அறிவியல் இருக்கிறது?

பாற்கடல் எங்கே இருக்கிறது? திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா என்று படித்த பக்(த)ர்களும் பாடுகிறார்களே! அந்தப் பாற்கடல் உலக வரைபடத்தில் தற்பொழுது எங்கே இருக்கிறது என்று காட்ட முடியுமா? முன்பு இருந்ததுஇப்பொழுது இல்லை என்று கூறுவார்களேயானால் அது எந்த இடத்தில் இருந்தது என்றாவது கூற முடியுமா?

பாற்கடல் இருந்தால், தயிர்க்கடல் மோர்க்கடல், வெண்ணெய்க்கடல், நெய்க்கடல் எல்லாம் இருக்க வேண்டுமே! அவையெல்லாம் எங்கே? அந்தப் பாற்கடலில் ஆயிரம் தலையுள்ள பாம்புப்படுக்கையில் உறங்குவதுபோல இன்னும் சீரங்கத்தில் அரங்கநாதர் உறங்கிக் கொண்டிருக்கிறாரே! அவரை எழுப்பியாவது கேட்டுச் சொல்வார்களா பக்தர்கள்?

இந்த லட்சணத்தில் இன்னமும் ராகு காலம் என்றும் நல்ல நேரம் என்றும் மனித நேரத்தை வீணடிக்கும் கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?

இந்த ராகு சூரியனை விழுங்குகின்ற கிரகண நேரத்தில் வெளியே வரக்கூடாது, சாப்பிடக்கூடாது என்று எவ்வளவு மூடநம்பிக்கைகள்? பூகம்பம் ஏற்படும், சுனாமி உண்டாகும் என்று எவ்வளவு பித்தலாட்டங்கள்?

இவையெல்லாம் பொய் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளதே! கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்க சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகிலும் திருவான்மியூர் கடற்கரையிலும் சிறப்பு விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்களே!

இன்னும் அந்தப் புராணங்களைத் தீயிட்டுப் பொசுக்காமல் புராணப்புளுகுகளை நம்பி ஜோதிடம், சாதகம் என்று மனித வாழ்வை வீணடிக்கலாமா?

இவற்றில் அறிவியல் உண்மைகள் இருப்பதாக இல்லாததை இருப்பதாகக்hட்டி வயிறு வளர்க்கும் பார்ப்பன மோசடிக்குத் துணைபோகலாமா?
சிந்திப்பீர்! மானமும் அறிவும் பெறுவீர்!!
  இவண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக