திங்கள், 7 நவம்பர், 2016

இடஒதுக்கீட்டில் பெல் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்தவும், தமிழர் அல்லாதார் நியமனத்தைத் தடுத்து நிறுத்தவும் தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அனுப்புதல்ää
ம.ஆறுமுகம்
  தி.தொ.க பேரவை துணைப்பொதுச்செயலாளர்,
பாரத மிகுமின் நிறுவனம்,
திருச்சி -14.

அடைதல்,
மானமிகு தமிழர்தலைவர் அவர்கள்.

அய்யா, வணக்கம்!

திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 17-09-2006 அன்று 250 தொழில் நுட்பப்பணியாளர் நியமனத்துக்கான (அய்.டி.அய் படித்தவர்கள்) எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு அகில இந்திய அளவில் இண்டர்நெட் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் கிட்டத்தட்ட 14000 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இவற்றில் தகுதியற்றவை என்று 6000 விண்ணப்பங்களுக்குமேல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தகுதியுள்ள விண்ணப்பங்களில் பொதுப்போட்டிக்கு 1:15 என்ற அளவிலும் இதரபிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 1:18 என்ற விகிதத்திலும் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாக நிர்வாகம் கூறியது. சுமார் 4000 பேர் மட்டுமே தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதர பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரும் இட ஒதுக்கீட்டின்படி மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார்கள். பொதுப்போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. அப்படி அழைக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச கட்ஆஃப் மதிப்பெண் பழங்குடியினருக்கு மிகமிக அதிகமாகவும் தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அதற்குக் குறைவாகவும்ää பொதுப்போட்டியில் கலந்துகொள்ளத் தேவை என்று அறிவிக்கப்பட்ட மதிப்பெண்ணான அறுபது சதவிகிதத்தைவிடக் குறைவாக 53 சதவிகிதம் எடுத்தவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். (பட்டியல் தனியேஉள்ளது)

விளம்பரத்தில் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள தமிழ் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தேர்வுத்தாள் இந்தியிலும் ஆங்கிலத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றுள்ளது. இதனால் கடந்த காலங்களைப்போலவே இந்த நியமனத்திலும் பிற மாநிலத்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

எப்பொழுதும் எழுத்துத்தேர்வு முடிந்து அதன் முடிவுகள் வரவே பல மாதங்கள் பிடிக்கும். ஆனால்ää இம்முறை தேர்வு நடந்த அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டு மறுநாளே நேர்முகத் தேர்வும் நடைபெற்றுள்ளது. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. நிர்வாகத்திலுள்ள பார்ப்பனர்கள் எப்படியாவது பார்ப்பன முன்னேறிய ஜாதியினரை அதிகபட்சம் சேர்த்துவிடவேண்டும் என்பதிலும் தமிழரல்லாதர்களை ஏராளம் புகுத்தி தமிழர்களை இரண்டாம் தரக்குடிமக்களாக ஆக்கிவிட வேண்டும் என்பதிலே எந்த அளவிற்குக் குறியாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இந்தப்பிரச்சினையில் பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இதற்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில நமது சங்கமும் கலந்துகொண்டது. இடஒதுக்கீட்டில் OC என்பதனை Other Community என்று நடத்தும் நிர்வாகத்தின் சதிச்செயலை முறியடிக்கவும் திருச்சியிலுள்ள பெல் லில் தமிழரல்லாதவர் ஆதிக்கம் தொடர்ந்து ஏற்படுவதைத் தடுக்கவும் திராவிடர் கழகத்தால்தான் முடியும் என்று பலரும் நம்புகிறார்கள். திமுக தொழிற்சங்கம் கூட தமிழக முதல்வர் டாக்டர் கலைஞருக்கு கடிதம் அனுப்பியிருந்தாலும் அது தங்களால்தான் செயலுக்கு வரமுடியும் என்று நம்புகிறார்கள். அந்த நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.

எனவே, அய்யா அவர்கள் இந்தப்பிரச்சினையில் தலையிட்டு இடஒதுக்கீட்டில் பெல் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்தவும், தமிழர் அல்லாதார் நியமனத்தைத் தடுத்து நிறுத்தவும் தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

         இவண்
          தங்கள் உண்மையுள்ள தொண்டன்
நாள் : 21-09-06
திருச்சி-14
                                                                       (ம.ஆறுமுகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக