புதன், 30 நவம்பர், 2016

ஆர்எஸ்எஸ்டன் உள்ள உறவை பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்வதில்லை.


சமூக ஆர்வலர் என்ற முகமூடியை அணிந்து அன்னா ஹசாரேயை களத்தில் இறங்கிக் கச்சை கட்டினார். அடுத்து பாபா ராம்தேவ் என்ற சாமியார். இவர்களின் பின்னணியில் இருப்பது ஆர்எஸ்எஸ் சங் பரிவார், பிஜேபி என்பதில் அய்யம் எதுவும் இல்லை. ஆனால் அன்னா ஹசாரேயோ, ராம்தேவோ தாங்கள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் என்பதை ஒத்துக் கொள்வதில்லை. அன்னா ஹசாரே சவால் விட்டார். நான் ஆர்எஸ்எஸ் காரன் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று. அதேபோல் பெல் நிறுவனத்தில் செயல்படும் பிஎம்எஸ் சங்கமும் தனக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் சம்மந்தமே இல்லை என்று சத்தியம் செய்கிறது.

ஆனால் இவர்களது குட்டை ஆர்எஸ்எஸ் மட்டைக்கு இரண்டு கீற்றாகக் கிழித்துப் போட்டுவிட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ராவ் பகவத்ஆ,ர்எஸ்எஸ் சுக்கும் அன்னா ஹசாரேவுக்கும் நீண்டநாள் தொடர்பு உள்ளதாகவும்ää ஆர்எஸ்எஸ்தான் அவரை ஊழலுக்கு எதிராகப் போராடச் சொன்னதாகவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். பிஎம்எஸ் சுக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் உள்ள தொடர்பை பத்து ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் திருவெறும்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தினார். இருந்தாலும் அவர்கள் ஆர்எஸ்எஸ் சுடனான உறவை இன்னும் வெளியில் சொல்ல வெட்கப்படுகிறார்கள். அது ஏன்?

ஆர்எஸ்எஸ் என்பது வெகு மக்களுக்கு எதிரான அமைப்பு. காந்தியைக் கொன்ற கோட்ஷேயை உருவாக்கிய இயக்கம். பார்ப்பன நலனை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட இயக்கம். ஜாதி வெறியும் மதவெறியுமே அதன் மூலதனம். அதில் உறுப்பினர் என்பதையோ அதனுடைய ஆதரவாளர் என்பதையோ வெளிப்படையாகச் சொல்வதற்கு அதன் ஆதரவாளர்களுக்கே அவமானமாக இருக்கிறது.

சமுதாயத்தில் நல்ல செல்வாக்குள்ள மரியாதைக்குரிய நபர் யாராவது இருந்தால் அவருக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும்கூட ஏதாவது ஒரு விதத்தில் அவருடன் தொடர்புள்ளவர் என்பதை பெருமையாகப் பலரும் கருதுவர். ஆனால் அதே நேரத்தில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டு காவல்துறையால் கைவிலங்கிடப்பட்டு வீதியில் ஒருவர் இழுத்துச் செல்லப்படும்போது,அதற்கு முதல் நொடிவரை அவருடன் தண்ணியடித்து, தம்மடித்து பிரியாணி தின்று உறவாடியவர்கூட அவருடைய தொடர்பை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள மாட்டார். அத்துடன் வேறு யாராவது இவரிடம் அவர் உனக்கு வேண்டியவர்தானே என்று கேட்டாலும் இல்லை இல்லை அவருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்றுதான் சொல்வார்.

அதுபோலத்தான் ஆர்எஸ்எஸ் என்பது வெகுமக்களிடம் அம்பலப்பட்டுக்கிடக்கிறது அதனால்தான் யாரும் அதனுடன் உள்ள உறவை பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. அதன் காரணமாகத்தான் அன்னா ஹசாரே நான் ஆர்எஸ்எஸ் இல்லை என்பதை அடித்துச் சொல்கிறார். பாபா ராம்தேவ் பசப்பு வார்த்தை பேசுகிறார்.  பெல்லில் பிஎம்எஸ் ஆர்எஸ்எஸ் சுடைய தொழிற்சங்கம் இல்லை என்பதுவும் அந்த அடிப்படையில்தான்.
வெளிப்படையாக இருப்பவரை நம்பலாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். எனவே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி சமூக சேவை என்று முகமூடி அணிந்து உலாவரும் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது வெகுமக்கள் நலன் நாடுவோரின் கடமையாகும்.               இவண்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக