திங்கள், 7 நவம்பர், 2016

ஆர்டிசான் தேர்வு சட்டப்படியான இட ஒதுக்கீட்டுக்கு மாறாக பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் பொதுப்போட்டியில் கலந்துகொள்ள முடியாத வகையில் பொதுப்போட்டி என்பது இதர பிரிவினர் என்ற அடிப்படையில் நடைபெற்றது.


2006 ஜூன் மாதம் விளம்பரம் செய்யப்பட்டு நடைபெற்ற ஆர்டிசான் தேர்வு சட்டப்படியான இட ஒதுக்கீட்டுக்கு மாறாக பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் பொதுப்போட்டியில் கலந்துகொள்ள முடியாத வகையில் பொதுப்போட்டி என்பது இதர பிரிவினர் என்ற அடிப்படையில் நடைபெற்றது. சட்டவிரோதமான இச்செயலைக்கண்டித்து சிஅய்டியு வும் அம்பேத்கர் சங்கமும் வழக்குத்தொடுத்தன. திராவிடர் தொழிலாளர் கழகமும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டு வாதாட மனுதாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில்  நிர்வாகத்தின் இச்செயல் சட்டவிரோதமானது என்றும் முறையாக மீண்டும் தேர்வு நடத்தி பொதுப்போட்டியில் தகுதியுள்ள அனைவரும் கலந்து கொள்ள வாய்ப்பளித்து தேர்வு நடைபெற வேண்டும் என்ற தீர்ப்பினை நீதிமன்றம் அளித்தது.

அதனைத்தொடர்ந்து  21-01-07 அன்று தேர்வு நடைபெற உள்ளது. சமூகநீதிப்பாதையில் இது ஒரு வெற்றி என்றாலும் இன்னொரு ஆபத்தான கருத்தை நிர்வாகம் பங்குபெறும் சங்கங்களிடம் தெரிவித்திருப்பதாக அறிகிறோம்.

விண்ணப்பம் செய்ய பொதுப்பிரிவினருக்கு 27 வயதும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டு தளர்வு செய்து 30 வயதும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஆண்டு தளர்வு செய்து 32 வயதும் சட்டப்படி வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வயது உச்சவரம்பின்படி 27 வயதுக்கு உட்பட்ட அதிக மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பொதுப்போட்டியிலே கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஆனால் அவர்களில் 27 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும்; அவர்கள் பொதுப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது. அவர்கள் தங்கள் சமூக இட ஒதுக்கீட்டின்படிதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும்; அவ்வாறுதான் நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது 32 வயதுள்ள ஒரு தாழ்த்தப்பட்டவரோ அல்லது 30 வயதுள்ள ஒரு பிற்படுத்தப்பட்டவரோ 95 சதவிகிதம் எடுத்திருந்தாலும் அவரகள்; பொதுப்போட்டியிலே தேர்வு செய்யப்பட மாட்டாரகள்;. ஆனால் 94 சதவிகிதம் எடுத்துள்ள முன்னேறிய ஒருவர் 27 வயதுள்ளவராக இருந்தால் அவர்தான் பொதுப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுவார். 95 சதவிகிதம்பெற்றவரகள்; இட ஒதுக்கீட்டின்படிதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் கூறியுள்ளது.  அதனை சங்கங்களும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.

இது சட்டப்படியும் நியாயப்படியும் தவறானதாகும். பொதுவாக விண்ணப்பம் செய்யத் தகுதியுள்ள அனைவரும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவதுதானே நியாயமானது? எதற்கெடுத்தாலும் தகுதி -திறமை பேசுவோர் இப்படி குறுக்குச்சால் ஓட்டுவதுதான் தகுதி - திறமைக்குக் கொடுக்கும் மரியாதையா?

நீதிமன்றத்தீர்ப்புக்களே அவ்வாறு இருந்தாலும் அது சட்டப்படி தவறானது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் - பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்பை எப்படியாவது பறித்து முன்னேறியவர்களுக்குக் கொடுத்து விடவேண்டும் என்ற சூழ்ச்சிதான் இதில் தெரிகிறதே தவிர வேறொன்றும் இல்லை.
அண்மைக்காலமாகப் பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்பதிலே குறியாக இருக்கிறார்கள். நீதிமன்றங்களில் நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதில்லை. பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கம் அங்கே கொடிகட்டிப் பறக்கிறது. அதன் விளைவுதான் இதுபோன்ற தீர்ப்புகள் என்பது கண்கூடு.
இதனை சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரும் எதிர்க்க முன் வரவேண்டும்.

இவ்வாறு தீர்ப்பு இருப்பது உண்மையானால் அந்தத் தீர்ப்பின் நகலை நிர்வாகம் வெளியிட வேண்டும். இல்லையேல் வயது வரம்பைக் கணக்கில் கொள்ளாமல் தகுதியுள்ள அதிக மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்டவர்கள் பொதுப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அதுதான் உண்மையான தகுதி திறமைக்குக் கொடுக்கக் கூடிய மரியாதை. உண்மையான சமூக நீதியும் அதுதான்.

இவண்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக