செவ்வாய், 29 நவம்பர், 2016

பிள்ளையார் பிறந்தநாளுக்கு விடுமுறையாம்



பிள்ளையார் பிறந்தநாளுக்கு விடுமுறையாம்.

இது என்ன காலத்தின் கொடுமை. 2014ம் ஆண்டுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால் என்ன விளைவுகள் வரும் என்பதை எடுத்துச்சொல்லி திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் கொடுத்து நேரிலும் பேசினோம். நாம் எடுத்துக் கூறிய காரணத்தின் நியாயத்தை உணர்ந்துகொண்ட அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களும் 2015ம் ஆண்டில் விடுமுறைப் பட்டியலில் இருந்து விநாயகர் சதுர்த்தியை நீக்கி விட்டார்கள். நமது சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தோம்.

ஆனால் தற்பொழுது 2016ம் ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியலில் விநாயகர் சதுர்த்தியை இணைத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இது உண்மையா? என்பது தெரியவில்லை. உண்மையாக இருக்குமானால் இது மிகவும் வருத்தத்திற்குரியது.

மதப் பண்டிகைகளிலேயே மற்ற பண்டிகைகளுக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மற்ற பண்டிகைகளை மதநம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே தங்கள் வீடுகளிலோ வழிபாட்டுத் தலங்களிலோ யாருக்கும் எந்த இடைய10றும் இல்லாமல் கொண்டாடுவார்கள்.

ஆனால் இந்த பிள்ளையார் சதுர்த்தி மட்டும் மதவெறியர்கள் கைகளில் சிக்குண்டு அது மதவெறியைத் தூண்டுவதற்கான கருவியாகப் பயன்படுகிறது. உண்மையான பக்தர்கள் மிகச்சிறிய பிள்ளையார் பொம்மையை களிமண்ணால் செய்து தங்கள் வீட்டு கிணற்றிலோ குளங்களிலோ கரைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவுதான்.

ஆனால் இப்பொழுது மதவாதிகள் அதைக் கையிலெடுத்து 50 அடி 60 அடி என்று பிள்ளையார் பொம்மைகளைச் செய்து வீதிக்கு வீதி மூலைக்கு மூலை சந்துக்கு சந்து என்று நான்கு நாள் அய்ந்து நாள் என்று வைத்து ஊர்வலம் செல்வதாகப் பெயர்பண்ணி எங்கெல்லாம் மசூதி இருக்கிறதோ எங்கெல்லாம் இஸ்லாமியர் அதிகம் குடியிருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊர்வலமாகச் சென்று இஸ்லாமியருக்கு எதிராக முழக்கமிட்டு மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள். அவர்களிடம் பக்தி என்பது எதுவும் கிடையாது. அவர்களிடம் இருப்பது மதவெறியே!

இந்த விநாயருக்கு விடுமுறை விடுவது என்பது அத்தகைய மதவெறியர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமையுமே தவிர இதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. விருப்ப விடுப்பு நான்கு நாள் வருவதால் தொழிலாளர்களுக்கு அதனால் இலாபம்தான். ஏற்கனவே நான்கு நாட்கள் விருப்ப விடுப்பு விடப்பட்டதற்கான ஆதாரங்களும் நம்மிடம் இருக்கின்றது. கடந்த 2011ம் ஆண்டு நமக்கு நான்கு நாட்கள் விருப்ப விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த விருப்ப விடுப்பு இருந்தால் எத்தனையோ ஈட்டிய விடுப்புக்களும் மருத்துவ விடுப்புக்களும் தொழிலாளர்களுக்கு மீதம் ஆகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.

தனக்குத் தேவையான நாட்களில் ஊழியர்கள் விருப்ப விடுப்பினை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அதைவிடுத்து ஏன் மதப் பண்டிகைக்கு விட வேண்டும். ஏதாவது ஒரு விடுமுறை விட்டுத்தான் ஆக வேண்டும் என்றால் இந்நிறுவனம் இங்கு அமைவதற்குக் காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளுக்கு விடலாமே!
நாட்டில் இன்னும் மதவாத செயல்கள் தலைவிரித்தாடுகின்றதே. சகிப்பின்மை பற்றி பாராளுமன்றமே முடங்கும் அளவுக்கு நாட்டில் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதுபோல் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை விடத்தான் வேண்டுமா?

அனைத்து உறுப்பினர்களும் இதனை ஒத்துக் கொள்ளாமல் ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் என்கிறபோது பெரும்பான்மை என்று கூறி இதனை அமுல்படுத்துவது சரியாக இருக்குமா என்பதை பணிக்குழு உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் நிர்வாகம் கொடுக்கும் நெருக்கடிக்கு இடம் தர வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக திராவிட இயக்கத்தைச் சார்ந்த பணிக்குழு உறுப்பினர்கள் இதனைப் பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டு;கொள்கிறோம்.



உயர்திரு நா.சக்திநாகலிங்;கம் அவர்கள்                      14.12.2013                 பணிக்குழு உறுப்பினர்;                                                                                    
  பெல் அய்என்டியுசி                                          
  பாரத மிகுமின் நிறுவனம்ää                                                          
  திருச்சி -14.

மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம்!
தொழிலாளர்களின் அமோக ஆதரவுடன் பணிக்குழுவில் தாங்கள் ஆற்றி வரும் பணியினை வெகுவாகப் பாராட்டுகிறோம். தொழிலாளர் நலனில் அக்கறையுடன் தாங்கள் செய்துவரும் பணிகளுக்கு என்றென்றும் எங்கள் ஆதரவு உண்டு.

இவ்வாண்டு (2014) நமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறைபற்றி எங்களது ஆலோசனைகளைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம் நமது திருச்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வழங்கப்பட்ட விடுமுறையில் விநாயகர் சதுர்த்தி இதுவரை இடம் பெற்றதில்லை. இவ்வாண்டு எப்படியோ அது இடம் பெற்றுள்ளது. அது தொழிலாளர் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எனவே, அது குறித்து எங்கள் கருத்தினை தாங்கள் பரிசீலிக்குமாறு வேண்டுகிறோம். விநாயகர் சதுர்த்தியினை நமது ஊழியர்களில் குறிப்பாக இந்துக்களேகூட அதிகம் கொண்டாடுவதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் அன்று வழங்கப்படும் விடுமுறை எல்லோருக்கும் பயனுடையதாக இருக்காது.

அத்துடன் இந்தக் காலக்கட்டத்தில் விநாயகரை வைத்து மதவாதிகள் நாடெங்கிலும் மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள். இதனால் சமூக நல்லிணக்கம் கெடுவதுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் நாட்டில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை விடுவது அத்தகைய மதவாதிகளுக்கும் மதவெறியைத் தூண்டிக் குளிர்காய நினைப்பவர்களுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி விடும்.

அத்துடன் விடுமுறைப்பணி (ர்ழடனையல றுழசம) சிலருக்குக் கிடைக்கும் என்றாலும் அது எல்லோருக்கும் கிடைப்பதற்கான வழிமுறைகள் இல்லை. உற்பத்திப்பிரிவில் பணியாற்றக்கூடிய ஒருசிலர் மட்டுமே அதனால் பயனடைவர். அலுவலகஙகளிலும் மற்ற பல துறைகளிலும் பணியாற்றக்கூடிய எந்த ஊழியருக்கும் அதனால் பயனில்லை. உற்பத்தித்துறையிலும்  நிர்வாகம் நினைத்தால் மட்டுமே அனைவருக்கும் விடுமுறைப்பணி கிடைக்கும்.

ஆனால் அதற்குப் பதிலாக ஒரு விருப்ப விடுப்பு வழங்கப்படுமேயானால் ஊழியர்கள் எப்பொழுது தங்களுக்கு விடுப்புத் தேவையோ அப்பொழுது எடுத்துக்கொள்ளலாம். கடைநிலை ஊழியர் முதல் நிர்வாக இயக்குனர் வரை அனைவருக்கும் அது பயன்படும். அனைத்து விடுப்புக்களுடனும் இணைந்து எடுக்கக் கூடியது விருப்ப விடுப்பு மற்றும் அரைநாள் சாதாரண விடுப்பு   (1/2 DAY CL) அத்துடன் ஈட்டிய விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு, தொகுப்பு விடுப்பு ஆகியவை எடுக்கும்போது சனி மற்றும் திங்கள் கிழமைகளின் இடையில் வரும் ஞாயிற்;றுக் கிழமையும் அதனால் அடிபடும். விருப்ப விடுப்பு இருந்தால் அதில் ஒரு விடுப்பு பாதுகாக்கப்படும்.

எனவேää இவ்வளவு பயனுள்ள விருப்ப விடுப்பினை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே அனைத்து ஊழியர்களுக்கும் நன்மை தரும் என்பதால் இவ்வாண்டு அறிவிக்கப்பட்டுள்ள விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ரத்து செய்து விட்டு அனைவருக்கும் பயனுள்ள விருப்ப விடுப்பினை வழங்கவும் பழைய நடைமுறையே தொடரவும் நடவடிக்கை எடுத்தால் அனைத்து ஊழியர்களும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஆலோசனையை முன்வைக்கிறோம்

அதற்கு ஆவன செய்யுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி!
           இப்படிக்கு

ம.ஆறுமுகம்
தலைவர்

செ.பா.செல்வம்
பொதுச்செயலாளர்

நகல் :
1) அனைத்து பணிக்குழு உறுப்பினர்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக