திங்கள், 28 நவம்பர், 2016

நாட்டை ஆள்வதைப் பெருமைக்குரிய விஷயமாக செருப்புத் தைக்கிறவர்களுக்குச் சொல்லாமல் செருப்புத் தைப்பதைப் பெருமைக்குரிய விஷயமாகச் சொல்வது ஏன்?

 
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்  திறமுமின்றி வஞ்சகத்தையே நெஞ்சில் தேக்கி வைத்திருக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது என்றால் அது பிஎம்எஸ்தான். கடந்த ஆண்டு விவேகானந்தர் ஜெயந்தி(?)யைக் கொண்டாடியது. நிர்வாகமும் ~பாரதமே உயிர்த்தெழு| என்ற பெயரில் நூல் வழங்கியது. அதனை விமர்சனம் செய்து நாம் கூட்டம் நடத்தி துண்டறிக்கைகள் வெளியிட்டோம். அதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நிர்வாகமும் பிஎம்எஸ்சும்தான்.

ஆனால் பாரத தொழிலாளர் கழகம், விவேகானந்தர் நல உரிமைச்சங்கம் ஆகிய பெயர்களில் மோடியையும் விவேகானந்தரையும் உயர்த்;தியும்; பாராட்டியும் பெரியார் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தியும் துண்டறிக்கை வந்தது.

விவேகானந்தர் புத்தகத்திலுள்ள கருத்துக்களுக்கு அறிவுநாணயமான பதிலோ மறுப்போ வரவில்லையே ஏன்? இந்த பா.தொ.கää வி.ந.உ எல்லாம் யாரு? எங்கே ஒளிஞ்சிருந்தாங்க? ஜெயலலிதாவுடைய ளயசநந க்குப் பின்னால் ஒளிஞ்சிக்கிட்டு தமிழக அரசும் விவேகானந்தர் விழாக் கொண்டாடுகிறது என்று சொன்னது ஏன்? அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இந்த ஆண்டும் விவேகானந்தர் ஜெயந்தி என்பது பித்தலாட்டமா? இல்லையா?

எதற்காக இந்த நாடகம்?

சாதாரணமாக எங்கள் விமர்சனத்துக்குப் பதில் சொல்லக்கூட வக்கற்று பல முகமூடிகளை அணியும் நீங்கள், காந்தியைக் கொன்ற கோட்ஷேவை உங்கள் ஆள் என்று எப்படிச் சொல்வீர்கள்?
தாய்ää தந்தை மற்றும் சகோதரர், சகோதரியுடன் உள்ள உறவை வெளியிடத் தயங்குவோர் பிறப்பில் ஒழுக்கம் இருக்குமோ? தான் சார்ந்திருக்கும் சங்கத்தின் பெயரை மறைத்து வேறு பெயரில் ஒளிந்துகொண்டிருப்பவர் செயலில் நேர்மை இருக்குமோ?
அந்த நேர்மையும் அறிவுநாணயமுமற்ற பிஎம்எஸ் இந்த ஆண்டு விவேகானந்தர் விழாக் கொண்டாட அருகதையுண்டோ? அப்படி அருகதை இருப்பதாக நீ கருதினால் கடந்த ஆண்டு கேட்ட வினாவுக்குக் கூட விளக்கம் வேண்டாம். தற்பொழுது அதன் தொடர்ச்சியாகத் தொடுக்கும் வினாவுக்கு விடை சொல்:

~பாரதமே உயிர்த்தெழு| நூலில் பக்கம் 155ல் ~நீங்கள் ஒரு நாட்டை ஆள்பவராக இருக்கலாம். நான் ஒரு ஜோடி பழைய செருப்பைத் தைக்கலாம். அதற்காக நீங்கள் உயர்ந்த ஜாதியாகிவிட மாட்டீர்கள். உங்களால் எனது செருப்பைத் தைக்க முடியுமா? என்னால்தான் நாட்டை ஆள முடியுமா? நான் செருப்புத் தைப்பதில் வல்லவனாயிருக்கலாம். நீங்கள் வேதம் படிப்பதில் நிபுணனாக இருக்கலாம். அதற்காக என் மீது ஏறி மிதிக்க வேண்டுமா?| என்று கேட்கிறாரேää அதன் பொருள் என்ன? ஜாதி நல்லது. ஜாதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதானே?

நாட்டை ஆள்வதைப் பெருமைக்குரிய விஷயமாக செருப்புத் தைக்கிறவர்களுக்குச் சொல்லாமல் செருப்புத் தைப்பதைப் பெருமைக்குரிய விஷயமாகச் சொல்வது ஏன்? இதுநாள்வரை செருப்புத் தைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாட்டை ஆளும் பொறுப்பைக் கொடுத்து விட்டு நாட்டை ஆள்பவர்களை செருப்புத்; தைக்கச் சொல்லலாமே! ஏன் அதனைச் சொல்லவில்லை?

உங்கள் குருநாதர் திலகர் சொன்னதுபோல இந்த நாட்டுக்கு மனுதர்மத்தைச் சட்டமாக்கி பிராமணர்களை நாட்டை ஆளச் செய்து விட்டு அல்லது மோடி போன்ற பிராமண தாசர்களை பிராமணர்களின் ஆலோசனைப்படி ஆளச்செய்து ää செக்காட்டுபவனும்ää துணி வெளுப்பவனும்ää முடி திருத்துபவனும்ää செருப்புத் தைப்பவனும்ää சாக்கடை அள்ளியவனும்ää விவசாயியும்ää மீனவனும்ää குயவனும்ää கொல்லனும்ää ஆசாரியும்ää கள்ளனும்ää கவுண்டனும்ää வன்னியனும்ää நாடானும்ää பள்ளனும்ää பறையனும் அவனவன் குலத்தொழிலையே செய்து செத்து மடிய வேண்டும் நாட்டை ஆள ஆசைப்படக் கூடாது என்பதுதானே அதில் உள்ளடங்கி இருக்கிறது?

பிஎம்எஸ்ஸே! இப்பொழுதும் அறிவுநாணயம் இருப்பதாக நீங்கள் சொல்வீர்களானால் இந்தக் கேள்விக்கு திருடனைப் போல் முகமூடி அணியாமல் நீயே நேரடியாக பதில் அளித்து விட்டு விவேகானந்தர் 151வது பிறந்தநாள் என்ன? 1500வது பிறந்தநாள்கூடக் கொண்டாடு! இல்லையேல் வாலைச் சுருட்டிக் கொண்டு வடநாட்டுக்கு ஓடு!            மோடி முகமூடியும் நீ அணியும் பாதொகää விநஉ முகமூடியும் ஒன்றுதான். அனைத்து முகமூடிகளையும்; பெரியார் தந்த அறிவாயுதத்தால் கிழித்தெறிவோம்! எச்சரிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக