புதன், 30 நவம்பர், 2016

ஐ.நா.சபை 2012 அய் சர்வதேச கூட்டுறவு ஆண்டாக அறிவித்து அந்தமாநாட்டை ஸஹகார் பாரதி என்ற அமைப்பிடம் ஒப்படைத்துள்ளதாம்




   ஐ.நா.சபை 2012 அய் சர்வதேச கூட்டுறவு ஆண்டாக அறிவித்து அந்தமாநாட்டை ஸஹகார் பாரதி என்ற அமைப்பிடம் ஒப்படைத்துள்ளதாம். அந்தஅமைப்பு பாரத்மாதாகீஜெய் என்று கோஷம் எழுப்பும் அமைப்புத்தான் என்றுமிகவும் பெருமை பொங்க அறிவித்துள்ளது பிஎம்எஸ். அதுஎன்னபாரத் மாதாகீ ஜெய் என்றுகோஷம்  எழுப்பும் அமைப்பு? ஆர்எஸ்எஸ்ஸின் ஒரு பிரிவு என்று வெளிப்படையாகச் சொல்ல வெட்கம் ஏன்? ஆர்எஸ்எஸ் என்பது மரம். அதிலிருந்து பலகிளைகள் தோன்றியுள்ளன. முதலில் வந்த கிளை பிஎம்எஸ். கடைசியாக வந்த கிளை இந்த ஸஹகார் பாரதி என்ற அமைப்பு.

   சிலநாட்களுக் குமுன் ஸம்ஸ்க்ருத பாரதி என்ற அமைப்பைப் பற்றியும் பிஎம்எஸ் நோட்டீஸ் ஒட்டினாலும் அப்பொழுது இதுபோல் தாங்கள்தான் அதனை ஒட்டினோம் என்று போடவில்லை. ஏனென்றால் ஒருகாலத்தில் ஸம்ஸ்க்ருதம் ப்ராம்ணர்கள் மட்டுமே பேசியமொழி. தேவபாஷை என்று சொல்லப்பட்ட பாஷை. முப்பத்திமுக்கோடி தேவர்களும் பேசியபாஷை. நம்முடைய ஆட்கள் அதைக் கற்றுக்கொள்ள முயன்றபொழுது சூத்திராளுக்கெல்லாம் சொல்லித்தரமாட்டோம் என்று மறுக்கப்பட்டபாஷை. இன்று பேசுவதற்கு நாதியில்லாத செத்த மொழியான பாஷை. முப்பத்தி முக்கோடி தேவர்களும் செத்துப் போயிட்டா போலிருக்கு.

அதனால அந்த பாஷையை சாகவிடாமல் தடுப்பதற்காக சூத்திராளுக்கும் பஞ்சமாளுக்கும் இலவசமாச் சொல்லித் தாரோம்னுட்டு ஏகத்துக்கும் விளம்பரம் பண்ணியும் சீந்துவாரில்லாமல் போயிடுத்து.

   அந்த ஸம்ஸ்க்கிருத பாரதியும் பாரத் மாதாகீ ஜெய் னுட்டுகோஷம் போடற அமைப்புத்தான். அதே மாதிரி பாரதீய ஜனதாங்கிற கட்சியும் கூட  பாரத் மாதாகீ ஜெய் னுட்டுகோஷம் போடற அமைப்புத்தானே தவிர பாரத் பிதாகீ ஜெய்னுட்டு கோஷம் போடறஅமைப்பு இல்லை! இதையெல்லாம் ஏன் பிஎம்எஸ் பெருமையாச் சொல்றதில்லை? அதான் இப்பக்கூட நாறிப்போய்க்கிடக்கிறதே!

    கர்நாடகத்தில் ஸிந்தகிவட்டத்தில் ஆர்எஸ்எஸ் காரர்களே அதாவதுபாரத் மாதாகீ ஜெய் னுட்டுகோஷம் போடற அமைப்புக்களில்  ஒன்று பாக்கிஸ்தான் கொடியேற்றிவிட்டு முஸ்லிம்கள் மேல் பழியைப் போட்ட விவகாரம் பற்றி சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்து கொண்டிருந்தபோது பிஜேபியின் மூன்றுஅமைச்சர்கள் சுவாரஸ்யமாக செல்போனில் பலான படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். சட்டசபை நிகழ்சிகளையெல்லாம் டிவியில நேரடியாக் காட்டுவாங்க என்கிற சொரணைகூட இருந்ததாகத் தெரியவில்லை. இதனை அந்த கடன்கார டிவிக்காரன் ஸ_ம் பண்ணிக்காட்டிபுட்டான்.

அதைக்கண்டு புடுச்சிக் கேட்டா தென்னமரத்துல தேங்காதிருடப் போனவன் மாட்டிக்கிட்டவுடனே கன்னுக்குட்டிக்குப் புல்லுப் பறிக்கவந்தேன்னு சொல்றமாதிரிää வெளிநாட்டுக்காரன் ஒரு பொண்ணைரேப் பண்ற மெஸேஜ் எஸ்எம்எஸ்ல வந்தது. அதத்தான் பாத்துக்கிட்டிருந்தோம்னுட்டு அசடுவழிஞ்சா அந்த மூணு பேரும். யப்பா! நீங்க பாத்ததுரேப் சீனா இருந்தா ஆம்பளதான் பொம்பள டிரஸ்ஸ அவுத்துப்போடுவான். இதுல பொம்பளயே ஒவ்வொருடிரஸ்ஸா அவுத்துப்போட்டுட்டு ஆடுறாளே! இதுவாரேப் சீனு? னுட்டு எக்குத்தப்பாக் கேட்ட உடனே அந்த மூணுபேரும் ராஜினாமா பண்ணிட்டா. இவாளும் பாரத் மாதாகீ ஜெய்ன்னு கோஷம் போடறவாதானே?

   இதையெல்லாம் இந்தபிஎம்எஸ் ஏன் பெருமையாச் சொல்லலை?
சொன்னால் முக்காடு போட்டுக்கொண்டு அவாளோட உறவு வச்சிண்டு யாராவது கேட்டா நான் அவனில்லை@ அவனுக்கும் நேக்கும் எந்தத் தொடர்பும் இல்லைன்னு சொல்ற பித்தலாட்டம் வெளியில வந்துடுமோல்லியோ?

ஒருமரத்திற்குப் பலகிளைகள் இருந்தாலும் எந்தக் கிளையில்  பழம் பழத்தாலும் எல்லாவற்றுக்கும் ஒரே ருஷிதான் இருக்குமே தவிர ஒவ்வொரு கிளையிலும் பல்வேறு ருசியுள்ள கனிகள் காய்ப்பதில்லை என்பது இயற்கை நியதி. அதே மாதிரி ஆர்எஸ்எஸ் என்கிற மரத்தின் பல்வேறு கிளைகளுள் பிஎம்எஸ். ஒருகிளை. பிஜேபி இன்னொரு கிளை. அதற்கு உள்ள பவுதிக குணங்கள் அனைத்தும் இதற்கும் இருக்கும்.

எனவே, பிஎம்எஸ்ஸே! முக்காடு போட்டுக்கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றாதே! முக்காட்டை விலக்கி உன் உண்மைக் கோர முகத்தைக் காட்டு! இல்லையேல் தொழிலாளர்களே உன் முகத்திரையைக் கிழிப்பார்கள்!

அதுசரி! ஐ.நா சபை அறிவித்த சர்வதேச கூட்டுறவு ஆண்டைக் கொண்டாடச் சொல்கிறாயே!  ஆனால் சர்வதேச தொழிலாளர் தினமான மேதினத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாயே! இது என்ன இரட்டைவேடம்?                     28-04-2012
 :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக