திங்கள், 28 நவம்பர், 2016

ஒலகத்திலேயே நாங்கதான் ஒழுக்கமுள்ளவங்கன்னு தம்பட்டம் அடிச்சாங்க BMS




இப்பொழுது தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி காங்கிரஸ்தான் என்றால் யாராவது நம்புவீங்களா? 1962ல் காங்கிரஸ் ஜெயிச்சது. 67ல் தோத்துடிச்சு. 72ல் தோத்துடிச்சு. 77லயும் தோத்துடிச்சு. இன்னமும் ஜெயிக்க முடியல.

ஆனாலும் அதுதான் ஆளுங்கட்சின்னா நம்புவீங்களா? நம்பித்தான் ஆகனும். அதுக்கு ஒரு ஃபார்முலா இருக்குது. அது நம்ம பிஎம்எஸ்கிட்ட இருக்குது. அத ஃபாலோ பண்ணினா காங்கிரசும் ஆளுங்கட்சிதான். முதலமைச்சர் நாற்காலியில அண்ணன் வாசனும் உட்காரலாம். செட்டிநாட்டு சிதம்பரமும் உட்காரலாம். யார் யாரெல்லாம் முதலமைச்சராக ஆசப்படுறாங்களோ அவங்கள்லாம் உட்காரலாம்.

அந்த ஃபார்முலாவப் பயன்படுத்தி இப்பொழுது பிஎம்எஸ் சங்கம் பங்குபெறும் சங்கம் ஆகிவிட்டது. எப்போ தேர்தல் நடந்தது? எப்போ அது ஜெயிச்சது? எப்படி அது பங்குபெறும் சங்கமானது? என்று ஆச்சரியமாக இருக்கிறதா?

2012ல் நடந்தது தேர்தல். அதில பிஎம்எஸ் ஜெயிக்கல. 2007ல் நடந்தது அப்பவும் ஜெயிக்கல. 2002ல் நடந்தது. அப்பவும் … ஜெயிக்கல. தொழிலாளிங்க அடிஅடிஅடிஅடின்னு அடிச்சுத் தொரத்தினாங்க. ஆனாலும் அது பங்குபெறும் சங்கம்தான்.

இந்த ஃபார்முலாவப் பயன்படுத்தி ஏன் காங்கிரஸ் கட்சியும் முதலமைச்சர் நாற்காலியில உட்காரக் கூடாதுங்கறோம்.
பாஞ்சாலி மாதிரி பத்தினி யாருமே இல்லம்பாங்க. அவளுக்குப் புருஷர்கள் அஞ்சுபேர் இருக்க ஆறாவதா கர்ணனும் நம்ம கொளுந்தனார்தானே! அவனும் இப்ப நம்மளோட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஆசப்பட்டாளே! அவ எப்படிய்யா பத்தினி? அப்டீன்னா அது அப்படித்தான் என்கிறது பாரதம்.

அந்த பாரத கலாச்சாரத்தக் கறைச்சுக்குடிச்சு அதக் காப்பாத்தறதே தங்களோட ஒரே லச்சியம்னுட்டு கச்சி ஆரம்பிச்சு சங்கமும் ஆரம்பிச்சவங்க ஒலகத்திலேயே நாங்கதான் ஒழுக்கமுள்ளவங்கன்னு தம்பட்டம் அடிச்சாங்க! 96லதான் ஜெயிச்சாங்க. அதுக்குப் பொறவு எல்லாத் தேர்தல்லேயும் ஓடஓட விரட்டப்பட்டாங்க.

ஆனா அந்த ஆபீச மட்டும் விடாமப் புடிச்சிக்கிட்டுக் கிடந்தாங்க. ஒரே ஒரு ஜிஎம், நயினாரு சட்டப்படி நீங்க இந்த ஆபீசில இருக்கப்படாது. மொறயா தேர்தல்ல ஜெயிச்சு வந்து எடுத்துக்கோ அப்படீன்னு பூட்டுப் போட்டாரு. இவங்களும் ஜெயிக்கறதுக்கு எவ்வளவோ தகிடுத்தம் ததிங்கிணத்தம் என்றெல்லாம் ஆடிப்பாத்தாங்க. புதுப்பசங்கள ஏமாத்தி ஜெயிச்சுப்புடலாம்னு ஆர்டிசான் டிரெய்னிங்லாம் குடுத்துப் பாத்தாங்க.

பப்பு வேகல.
நயினாரும் போயிட்டாரா? கார்ப்பரேட்டும் இவா கையில. திருச்சியும் இவா கைக்குட்டையில. “அடிக்கறாப்பல அடிக்கறேன். அழுகறாப்பல அழு” என்கிற மாதிரி கேசு போடற மாதிரி போடச்சொல்லி வாதாடற மாதிரி வாதாடி தோக்கற மாதிரி தோத்து ஆபீசக் குடுத்துப்புட்டாங்கய்யா நம்ம ஹெச்ஆர் நிர்வாகம். எத்தனயோ கேசில  யார் யாரோ ஜெயிச்சாலும் அதயெல்லாம் எதிர்த்து ஐகோர்ட்டு சுப்ரீம்கோர்ட்டுன்னு அப்பீல் பண்ற நம்ம ஹெச்ஆர் இதுல மட்டும் எதுவும் செய்யாம தொறந்து உட்டுட்டாங்கய்யா! அம்புட்டுத்தேன்.


இப்பொழுது தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி காங்கிரஸ்தான் என்றால் யாராவது நம்புவீங்களா? 1962ல் காங்கிரஸ் ஜெயிச்சது. 67ல் தோத்துடிச்சு. 72ல் தோத்துடிச்சு. 77லயும் தோத்துடிச்சு. இன்னமும் ஜெயிக்க முடியல. ஆனாலும் அதுதான் ஆளுங்கட்சின்னா நம்புவீங்களா? நம்பித்தான் ஆகனும். அதுக்கு ஒரு ஃபார்முலா இருக்குது. அது நம்ம பிஎம்எஸ்கிட்ட இருக்குது. அத ஃபாலோ பண்ணினா காங்கிரசும் ஆளுங்கட்சிதான். முதலமைச்சர் நாற்காலியில அண்ணன் வாசனும் உட்காரலாம். செட்டிநாட்டு சிதம்பரமும் உட்காரலாம். யார் யாரெல்லாம் முதலமைச்சராக ஆசப்படுறாங்களோ அவங்கள்லாம் உட்காரலாம்.

அந்த ஃபார்முலாவப் பயன்படுத்தி இப்பொழுது பிஎம்எஸ் சங்கம் பங்குபெறும் சங்கம் ஆகிவிட்டது. எப்போ தேர்தல் நடந்தது? எப்போ அது ஜெயிச்சது? எப்படி அது பங்குபெறும் சங்கமானது? என்று ஆச்சரியமாக இருக்கிறதா?

2012ல் நடந்தது தேர்தல். அதில பிஎம்எஸ் ஜெயிக்கல. 2007ல் நடந்தது அப்பவும் ஜெயிக்கல. 2002ல் நடந்தது. அப்பவும் … ஜெயிக்கல. தொழிலாளிங்க அடிஅடிஅடிஅடின்னு அடிச்சுத் தொரத்தினாங்க. ஆனாலும் அது பங்குபெறும் சங்கம்தான்.

இந்த ஃபார்முலாவப் பயன்படுத்தி ஏன் காங்கிரஸ் கட்சியும் முதலமைச்சர் நாற்காலியில உட்காரக் கூடாதுங்கறோம்.
பாஞ்சாலி மாதிரி பத்தினி யாருமே இல்லம்பாங்க. அவளுக்குப் புருஷர்கள் அஞ்சுபேர் இருக்க ஆறாவதா கர்ணனும் நம்ம கொளுந்தனார்தானே! அவனும் இப்ப நம்மளோட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஆசப்பட்டாளே! அவ எப்படிய்யா பத்தினி? அப்டீன்னா அது அப்படித்தான் என்கிறது பாரதம்.

அந்த பாரத கலாச்சாரத்தக் கறைச்சுக்குடிச்சு அதக் காப்பாத்தறதே தங்களோட ஒரே லச்சியம்னுட்டு கச்சி ஆரம்பிச்சு சங்கமும் ஆரம்பிச்சவங்க ஒலகத்திலேயே நாங்கதான் ஒழுக்கமுள்ளவங்கன்னு தம்பட்டம் அடிச்சாங்க! 96லதான் ஜெயிச்சாங்க. அதுக்குப் பொறவு எல்லாத் தேர்தல்லேயும் ஓடஓட விரட்டப்பட்டாங்க. ஆனா அந்த ஆபீச மட்டும் விடாமப் புடிச்சிக்கிட்டுக் கிடந்தாங்க. ஒரே ஒரு ஜிஎம்நயினாரு சட்டப்படி நீங்க இந்த ஆபீசில இருக்கப்படாது. மொறயா தேர்தல்ல ஜெயிச்சு வந்து எடுத்துக்கோ அப்படீன்னு பூட்டுப் போட்டாரு. இவங்களும் ஜெயிக்கறதுக்கு எவ்வளவோ தகிடுத்தம் ததிங்கிணத்தம் என்றெல்லாம் ஆடிப்பாத்தாங்க. புதுப்பசங்கள ஏமாத்தி ஜெயிச்சுப்புடலாம்னு ஆர்டிசான் டிரெய்னிங்லாம் குடுத்துப் பாத்தாங்க.

 பப்பு வேகல.
நயினாரும் போயிட்டாரா? கார்ப்பரேட்டும் இவா கையில. திருச்சியும் இவா கைக்குட்டையில. “அடிக்கறாப்பல அடிக்கறேன். அழுகறாப்பல அழு” என்கிற மாதிரி கேசு போடற மாதிரி போடச்சொல்லி வாதாடற மாதிரி வாதாடி தோக்கற மாதிரி தோத்து ஆபீசக் குடுத்துப்புட்டாங்கய்யா நம்ம ஹெச்ஆர் நிர்வாகம்.

எத்தனயோ கேசில  யார் யாரோ ஜெயிச்சாலும் அதயெல்லாம் எதிர்த்து ஐகோர்ட்டு சுப்ரீம்கோர்ட்டுன்னு அப்பீல் பண்ற நம்ம ஹெச்ஆர் இதுல மட்டும் எதுவும் செய்யாம தொறந்து உட்டுட்டாங்கய்யா! அம்புட்டுத்தேன். இப்போ பிஎம்எஸ் பங்குபெறும் சங்கம் ஆயிட்டுது. வந்த ஒடனே தொழிலாளி பிரச்சினயத் தீக்க விவேகானந்தர் புக்க கொடுக்கச் சொல்லி நெறவேத்திப்புட்டாங்களா இல்லியா?

ஒரு பிட் நோட்டீஸ் கூடப்போடாம ரகஸ்யமா கணபதிஹோமம் பண்ணித் தொறந்துட்டாக ஆபீச. இனிமே தொழிலாளி காட்டுல தேனாறும் பாலாறும் ஓடப்போகுது. எடுத்துக் குடிக்க எல்லாரும் தயாரா இருங்க தொழிலாளிங்களே! டும் .. டும்.. டும்..      

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக