திங்கள், 14 நவம்பர், 2016

டில்லி சட்;டமன்றத் தேர்தல் முடிவுகள்





டில்லி சட்;டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற; ஜனநாயக சக்திகளுக்கு ஒரு உந்து சக்தியாகவும் சகிப்புத் தன்மையற்ற மதவெறி பாசிச அரசியலுக்கு  ஆப்பாகவும் அமைந்துள்ளது. ஆர்எஸ்எஸ் பாஜக பரிவாரத்தை மண்ணைக் கவ்வச் செய்து 70க்கு 67 இடங்களில் வெற்றிவாகை சூடிய “ஆம் ஆத்மி” கட்சிக்கும் அதன் தலைவர் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துக்கள்!

2013 சட்டமன்றத் தேர்தலில் பிஜேபிக்கு 31 இடங்களும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 60 இடங்களில் முன்னிலை தந்த டில்லி மக்கள் 2015 தேர்தலில் வெறும் மூன்றை மட்டுமே தந்து முகத்தில் கரியைப் ப10சியது.

உலகமய தாராளமயப் பாதையில் காங்கிரசைவிட வேகமாக நாட்டை சீரழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் பிஜேபிக்கு 5 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு இன்றைய காங்கிரசின் கதியே ஏற்படும்.
~மோடி அலை| என்ற ஒன்று இல்லவே இல்லை.

பிஜேபி தலைவர் அமித்ஷாவின் கிரிமினல் உத்தி டில்லியில் ஊத்திக்கிச்சு! டில்லி திரிலோக்புரி வசந்த் விஹார் உட்பட 6 இடங்களில் இந்து முஸ்லிம் கலவரம். 5 சர்ச்சுகள் தாக்கப்பட்டன. இந்த மதமோதல் பிஜேபி வெற்றி பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டது. இப்படி மதவெறியைத் தூண்டி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைத்த பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளனர்.

டில்லி தேர்தல் வெற்றிக்காக ஊழலை எதிர்க்கும் அன்னா ஹசாரேயோடு இருந்த IPS அதிகாரியான அம்மையார் கிரண்பேடியைக் கொண்டு வந்து டில்லி முதல்வர் வேட்பாளராக களம் இறக்கியது பிஜேபி. அத்தோடு பிஜெபியின் வெற்றிக்காக 8 மாநில முதல்வர்கள் 25 காபினட் அமைச்சர்கள் 120 பிஜேபி MPக்கள் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் பணமூட்டையோடு களம் இறங்கி கம்பு சுற்றினார்கள். மார்ச்சில் தாக்கலாகும் பட்ஜெட் தயாரிப்பு வேலைகளையெல்லாம் புறந்தள்ளிää அருண் ஜேட்லி டில்லி சட்டமன்றத் வெற்றிக்காக கண் துஞ்சாது உழைத்ததற்கு பத்மப10ஷண் விருதே தரலாம்!

நீங்கள் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள்? சிறீராமனின் பிள்ளைகளுக்கா?
இல்லை முறை தவறிப் பிறந்தவர்களுக்கா?

இது மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதியின் டில்லி தேர்தல் கூட்டத்தில் பேசியது. இப்பேச்சு பாராளுமன்றத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவருக்கும் மேலாக .. கேஜ்ரிவாலை எதிர்த்து டில்லியில் போட்டியிட்ட – தன்னை மோடியின் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்கிற - இந்துமகாசபையின் முக்கியத் தலைவர் சுவாமி ஓம்ஜி “ரியல் நியூஸ் ஆ.ப் இந்தியா” என்ற தொலைக் காட்சியில் அளித்த மிரட்டல் பேட்டி..

“ தேசத்துரோகியான காந்தியை சுட்டுக் கொன்றதுபோல் கெஜ்ரிவாலையும் படுகொலை செய்வோம். நான் போட்டியிட்டதே பாஜக வின் வெற்றிக்காகத்தான்” என்றார் தெனாவட்டாய்.
இதற்கெல்லாம் மோடியின் பதில் மவுனம்! மோடி முதல் அமித்ஷா வரை மாறி மாறிப் பிரச்சாரம் செய்தும் மாற்றத்தை விரும்பிய டில்லி மக்கள் துடைப்பத்தால் பெருக்கி பிஜேபி யை குப்பையில் வீசியுள்ளனர். அதோடு கார்ப்பரேட்டுக்களுக்கு நிலங்களைத் தாரை வார்க்கும் அயோக்கியத் தனமான நிலச்சட்டத் திருத்தம் விவசாயிகளை கோபப்படுத்தியுள்ளது. இதன் விளைவாய் என்றும் பிஜேபிக்கு ஆதரவான டில்லிக்கு வெளியில் வாழும் விவசாய மக்களும் பிஜேபியை நிராகரித்து ஆம் ஆத்மியை வெற்றி பெறச் செய்தனர்.

துடைப்பத்தைக் கையில் பிடித்துக் கூட்டுவதுபோல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த மோடியின் “கிளீன் இந்தியா” திட்டத்தை டில்லி மக்கள் கச்சிதமாய்ப் புரிந்துகொண்டு சகிப்புத் தன்மையற்ற மதவெறி ரத்தவெறி பாசிச குணம் கொண்ட RSS,BJPநாசகாரக் கூட்டத்தை தேசத்திலிருந்தே துடைத்தெறிய – வாய்ப்பை பயன்படுத்தித் துவக்கி வைத்துள்ளார்கள். வாருங்கள் டில்லி மக்கள் உணர்வோடு நாமும் கை கோர்ப்போம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக