செவ்வாய், 29 நவம்பர், 2016

தீண்டாமை என்ற சொல்லில் தீமை இருக்கிறது



தீண்டாமை என்ற சொல்லில் தீமை இருக்கிறது. இந்தத் தீண்டாமை உலகத்தில் வேறு எங்குமே இல்லாதது. எந்த மதத்திலும் இல்லாதது. இந்து மதத்தில்மட்டுமே உள்ளது. கிறிஸ்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தால் கைகுலுக்கிக் கொள்வார்கள். முஸ்லிம்கள் ஒருவருடன் ஒருவர் சகோதரனே என்று சொல்லி ஆரத்தழுவிக்கொள்வார்கள். இந்துக்கள் நமஸ்காரம் என்றோää கும்புடுறேங்க என்றோ கைகூப்புவது ஏன் தெரியுமா? தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என்ற தீண்டாமை உணர்வால்தான்.

அதனால்தான் ~வணக்கம் என்பது நம்மை அந்நியப்படுத்தும். கைகுலுக்குவோம்| என்றார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.

அந்தத் தீண்டாமை சேமகரமானது என்றார் செத்துப்போன காஞ்சிபுரத்து சாமிநாத சங்கராச்சாரி. உலகத்தில் உயர்ந்த சோப்புப் போட்டுக் குளித்தாலும் உடம்பில் உள்ள அழுக்கு மட்டும்தான் போகும். பிறிவியிலுள்ள அழுக்குப் போகாது என்றார் பூரி சங்கராச்சாரி.

இந்த சங்கராச்சாரிகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதனால் அவர்கள் எங்கள் பிரதிநிதிகள் அல்ல என்றார்கள் பிஎம்எஸ் காரர்கள். அந்த பிஎம்எஸ்ஸின் குருநாதர் ~லோகமான்ய| பாலகங்காதர திலகர். அவரை பிஎம்எஸ் காரர்கள் மறுக்க மாட்டார்கள் என்று நம்புவோம். அந்தத் திலகர் பெருமான் அரசியலில் நுழைவதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளில் மாநாடு முடிந்த அடுத்த நாள் சமூக சீர்திருத்த மாநாடு நடத்துவார்கள். அதில் விதவைத்திருமணம் குழந்தைத்திருமணம் உடன்கட்டை ஏறுதல் தீண்டாமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்று பேசுவார்கள்.

இது திலகர் பெருமானுக்குப் பிடிக்கவில்லை. நம்ம விவேகானந்தருக்கும் பிடிக்கவில்லை. இதுமாதிரி சீர்திருத்தம் பேசுபவர்களோடு சேராதீர் என்றார் விவேகானந்தர். திலகர் பெருமான் காங்கிரஸ் மாநாட்டிற்குப்பிறகு சீர்திருத்த மாநாடு நடத்தினால் மாநாட்டுப் பந்தலையே தீ வைத்துக் கொளுத்தி விடுவோம் என்று மிரட்டினார். 1895ல் பூனாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைய தீண்டத்தகாதவர்களை திலகருடைய ஆட்கள் அனுமதிக்காததால் தீண்டத்தகாதவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அது மட்டுமல்ல. காஞ்சி சுப்பிரமணிய சங்கராச்சாரி கொலை, கற்பழிப்பு கேசில் ஜெயிலுக்குப் போனபோது ஒரு பிராமணன் சமைச்சாத்தான் சாப்பிடுவேன் என்று சொன்னதை ஏற்று ஜெயில் நிர்வாகம் ஒரு பிராமண போலீஸ்காரரை விட்டு சமைக்கச் சொன்னது. அதே மாதிரி ஏன் அதையும் தாண்டி கல்கத்தா செல்லும்போது. அங்கே உள்ள பிராமணர் சமைத்ததையே சாப்பிட மறுத்து தன்னுடைய ஊரிலிருந்து ~சித்பவன்| பிராமண சமையல்காரரை உடன் அழைத்துச் செல்வாராம் திலகர். அவ்வளவு தீண்டாமை வெறி!

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு பெற்றுக் கொடுத்த தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித் தொகுதி முறையை முதலில் ஆதரித்த அன்றைய தாழ்த்தப்பட்ட தலைவரான எம்சி.இராசா என்பவர் டாக்டர் மூஞ்சே அவர்களின் தூண்டுதலால் பின்னர் எதிர்த்தார். அந்த மூஞ்சே யாரென்றால் 1925ல் நாகபுரியில் அய்ந்துபேர் கூடித் துவக்கப்பட்டதே ஆர்எஸ்எஸ், அந்த அய்வரில் ஒருவர்தான் டாக்டர் மூஞ்சே. 1991ல் வி.பி.சிங் அமுல்படுத்திய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து அவரது ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் பிஜேபியினர்.

இப்படி பச்சையாக தீண்டாமை வெறிபிடித்த தலைவர்களைக் குருநாதராகக் கொண்டாடும் பிஎம்எஸ்ää இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிஜேபிää ஆர்எஸ்எஸ் ஸின் சங்கமான பிஎம்எஸ்ää தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்புத் தருகிறோம் என்று பிரச்சாரம் செய்வது அந்த மக்களை ஒன்றுமறியாத முட்டாள்கள் என்று கருதிக்கொண்டு அந்தப் பிரச்சாரத்தைச் செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த மக்களுக்கு வரலாற்றைச் சொல்லித் தருவோம். அவர்கள் விரிக்கும் வலையில் விழாமல் தடுப்போம்!

ஏமாற்றாதே! ஏமாற்றாதே!!

ஏமாறாதே! ஏமாறாதே!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக