ஞாயிறு, 13 நவம்பர், 2016

அந்தக் கர்ணன் பிறப்பு மரபணு மாற்றம் என்றால் இப்ப இவ்வளவுபேர் இப்படி இப்படிப் பிறந்திருக்கிறார்களே! அதுக்கெல்லாம் என்ன என்ன டெக்னாலஜி



பாரதக் கலாச்சாரத்தைப் புனிதமாகப் போற்றும் அம்பி காளை இல்லாமல் பசு கன்று ஈனுமா என்று கேட்டிருக்கிறது. உங்க புராணங்களில வரும் கவுதம முனிவர் மாட்டுக்கும் மனுஷனுக்கும் பொறந்திருக்கிறார்.

மனுஷனுக்கே பசுமாடு பிள்ளையைப் பெற்றிருக்கும்போது காளையில்லாமல் கன்று போடுவது அதிசயமா?  இப்பொழுது உள்ள மாடுகளெல்லாம் காளையில்லாமலேயே கன்று போடுவது அம்பிக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. ஊசி போட்டாலே பசு கன்று போடும். கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மாடு மேய்க்க வந்த கூட்டம் அந்த ஆடு மாடுகளை தமிழனை மேய்க்க விட்டு விட்டு கருவறைக்குள் கர்ப்பதானம் செய்து கொண்டிருப்பதால் அம்பிக்கு உண்மை தெரியவில்லை போலும்.

பசுமாடு காளையில்லாமல் கன்று போடுவது இருக்கட்டும்.
உங்க மகாபாரதத்திலே ஒரு கன்னிப் பொண்ணான குந்திதேவி எப்படி கர்ணனைப்; பெற்றாள்?

வயசுக்கு வராத மச்சகந்தி மகாபாரதம் எழுதிய வியாசரை எப்படிப் பெற்றெடுத்தாள்?
புருஷன் செத்துப்போன பிறகு அம்பாவும் அம்பாலிகாவும் எப்படி பாண்டவர்களின் அப்பன் பாண்டுவையும் கவுரவர்களின் அப்பன் திருதராஷ்டிரனையும் பெற்றார்கள்?

ஆம்பளை இல்லாட்டியும் பிள்ளை பெற பொம்பளை வேணும். ஆனா உங்க துரோணாச்சாரி பொம்பளை இல்லாமலேயே பொறந்தானாமே! அதுவும் யோனியில்லாமலேயே! அது எப்படீ? உனக்குத் தெரியும். ஆனா சொல்ல மாட்டே! நாங்க சொல்றோம்.
கங்கை பிறக்கும் இடத்திற்கு அருகில் பரத்வாஜ முனிவர் வாழ்ந்து வந்தார். ஒரு முறை அவர் கங்கையில் நீராடிக் கொண்டிருந்த க்ருதாசி என்ற தேவ கன்னிகையைக் கண்டு காமுற்றார். உடனே அவருடைய வீரியம் வெளிப்பட்டது. அதனை அந்த முனிவர் துரோணம் என்ற பாத்திரத்தில் பிடித்து வைத்தார். அதிலிருந்து பிறந்தவர்தான் துரோணாச்சாரி. அவர் அயோனிஜர் யோனி க்கு எதிர்ப்பதம் அயோனி. பெண்ணில்லாமல் பிறந்ததோடு யோனியில்லாமலே பிறந்திருக்கிறார். இந்த துரோணாச்சாரிதான் பின்னாளில் தன்னிடம் வில்வித்தை கற்றுக் கொள்ள வந்த ஏகலைவனுக்கு சூத்திரன் என்பதால் கற்றுத் தர மறுத்தார். அவர் பெயரில்தான் இன்று அரசாங்கம் துரோணாச்சாரி விருது தருகிறது. பாப்பாத்திக்குப் பொறக்காம பாத்திரத்துக்குப் பொறந்தவன் பிராமணனாம்.

எப்படி? எப்படி? அவர் பிறந்தது எப்படி?
பசுமாட்டுக்குப் பிறந்த கவுதம முனிவருடைய பிள்ளை சாலவான் என்ற முனிவர் ஜாலவதி என்ற தேவ கன்னிகையைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து விட்டதால் அவனுடைய வீரியம் வெளிப்பட அதனை நாணல் புல்லில் விட அதிலிருந்து கிருபாச்சாரி என்கிற முனிவரும் கிருபி என்கிற பெண்ணுமாக இரட்டைப் பிள்ளையாகப் பிறக்கிறது. ஃபுல்லிலே பிள்ளை பெக்கலாம். ஆனா இவன் புல்லிலேயே பிள்ளை பெத்திருக்கான்.

அந்தக் கிருபி என்பவள் துரோணாச்சாரிக்கு மனைவி. அவளது கற்பைச் சோதிக்க ருத்திரன் அவளிடம் நிர்வாணப் பிச்சை கேட்டானாம். அவளும் அப்படியே வந்து பிச்சையிட அவளது அழகில் மயங்கி வீரியத்தை வெளியிட அதனை அவள் தட்டிலிட அதனை துரோணாச்சாரியின் குதிரை சாப்பிட்டது. உடனே குதிரை கர்ப்பமாகி அதன் முதுகைக் கிழித்துக்கொண்டு அஸ்வத்தாமன் பிறக்கிறான். அவனை துரோணர் தன்னுடைய மகனாக ஏற்றுக் கொள்கிறார். குதிரைக்குப் பொறந்திருக்கான்.

சீச்சீ! குமட்டுகிறது. முற்றும் துறந்ததாகச் சொல்லப்படும் முனிவர்களின் யோக்கியதை எப்படி இருக்கிறது. ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் வீரியம் வெளிப்படக் கூடிய அளவிற்கு அவர்கள் காமக்கிறுக்கர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த ரிஷிகளும் முனிவர்களும்தான் நம்முடைய சாஸ்திரங்களையெல்லாம் எழுதினார்களாம். அந்த சாஸ்திரங்களின்படிதான் நாம் ஆளப்பட வேண்டுமாம். இந்த அம்பிகள் சொல்கிறார்கள்!

இந்த மாதிரி குந்தி தேவிக்கும் சூரியனுக்கும் பிறந்த கர்ணனின் பிறப்பைப் பற்றிப் பேசும்போதுதான் நம்ம மோடிஜி அந்தக் காலத்திலேயே நம்ம நாட்டில் மரபணு மாற்றம் இருந்ததுன்னு சொன்னார்.

அந்தக் கர்ணன் பிறப்பு மரபணு மாற்றம் என்றால் இப்ப இவ்வளவுபேர் இப்படி இப்படிப் பிறந்திருக்கிறார்களே! அதுக்கெல்லாம் என்ன என்ன டெக்னாலஜின்னு மோடிஜிக்கிட்டெ கேட்டுச்சொல்லுங்க சீரங்கத்து அம்பி! ப்ளீஸ்! ப்ளீஸ்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக