திங்கள், 7 நவம்பர், 2016

OC என்பது Open Competition என்பதற்குப்பதிலாக Other Community என்று நிர்வாகம் எடுத்தது


2006 ல் இருநூற்றைம்பதுபேர் ஆர்டிசான் தேர்வு செய்ததில் இட ஒதுக்கீட்டுச்சட்டத்தின்படி OC என்பது Open Competition என்பதற்குப்பதிலாக Other Community  என்று நிர்வாகம் எடுத்ததை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நீதிமன்றம் சென்றதனால் மீண்டும் தேர்வு நடைபெற்று 213 பேர் தேர்வுசெய்யப் பட்டுள்ளார்கள். (இதில் 9பேர் ஊனமுற்றோர்.) மீதி 204 பேரில் 108 பேர் திறந்தபோட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதில் 64 பேர் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர்வாகி உள்ளனர். தங்களுக்கு மட்டுமே தகுதி -திறமை இருக்கிறது என்று மார்தட்டிவரும் பார்ப்பன மேல்சாதியினர் வெறும் 44 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். அதிலும் 27 வயதுக்குமேல் வயதுவரம்பு தளர்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களும் கலந்துகொள்ள அனுமதியளித்திருந்தால் இன்னும் கூடுதலாகவே திறந்தபோட்டியில் நமது பிள்ளைகள் தேர்வாகி இருக்க வாய்ப்புள்ளது.

எது எப்படி இருந்தாலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்குக் கிடைத்திருக்க வேண்டிய இந்த 64 இடங்களையும் தட்டிப்பறித்து மேல்சாதி மேல்வர்க்கம் அனுபவிக்க நினைத்தது எவ்வளவு பெரிய மோசடி என்பது இப்பொழுது நிரூபணம் ஆகியுள்ளது. இதைப்பற்றியெல்லாம் anajthi Faith அமைப்பு என்ற பினாமி அமைப்பு கவலைப்படாது. அதனுடைய கவலையெல்லாம். தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடடையக் கூடாது. ஜாதி மோதல்களும் மத மோதல்களும் நடக்க வேண்டும். அதில் இரத்தம் குடிக்க வேண்டும் என்கிற ஓநாய்த்தனம்தான் மேலோங்கியுள்ளது.

ஏற்கனவே இட ஒதுக்கீட்டுமுறையைப் பின்பற்றாமல் 227 பேர் எடுக்கப்பட்டதில் கிட்டத்தட்ட நாற்பது பேர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். இப்பொழுது 204 பேர் எடுக்கப்பட்டதில் கிட்டத்தட்ட முப்பதுபேர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வாகியுள்ளனர்.

முல்லைப் பெரியார் அணையில் நமக்குள்ள உரிமையை மறுக்கும் கேரளத்தவர்களும்ää காவிரியில் நமது உரிமையை மறுக்கும் கர்நாடகத்தவர்களும்ää பாலாற்றின் குறுக்கே அணைகட்டி நம்முடன் வம்பிழுக்கும் ஆந்திராக்காரர்களுமே அனைத்துப் பணி நியமனங்களிலும் ஆதிக்கம் பெறுகின்றார்கள்.

பொறியாளர் நியமனம் முழுக்க பிற மாநிலத்தவர் ஆதிக்கம்தான். மேற்பார்வையாளர் நியமனத்தில 60 சதவிகிதம்பேர் பிற மாநிலத்தவர். நான்காம் நிலைப்பணியான ஆர்டிசான் நியமனத்திலும் இதே நிலைமை என்றால் தமிழன் என்ன இளித்தவாயனா?

மேலும் 350 பேர் எடுக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. அதுவும் இன்டர் நெட்டில்தான் விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. தேசியம் என்ற பெயரில் நம் சங்கங்களும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கப் போகின்றன. நமது வேலைகளெல்லாம் இப்படி அந்நியர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு தமிழன் அவனிடம் எடுபிடியாகத்தான் இருக்க வேண்டுமா?

இங்கே முப்பது ஆண்டு, நாற்பது ஆண்டு என்று உழைத்துப்போட்டு இந்நிறுவனம் உயரக் காரணமாக இருக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் (வாரிசுகளுக்கு) எந்த வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. திறந்த போட்டியில் கலந்துகொண்டு தேர்வாகி வரலாம் என்று அப்பிள்ளைகள் கனவு கண்டாலும் பிற மாநிலத்தவர் அதனைத் தட்டிப்பறித்துச் சென்று விடுகின்றனர்.

இந்தநிலையை எவ்வளவு காலத்திற்கு அனுமதிப்பது? வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதன் வாசல்படியில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் தமிழன் வீட்டுப்பிள்ளைகள் வாழ்வு மலரப் போவது எப்போது?

அந்தப் பிள்ளைகள்மீது அக்கறையோடு தாயுள்ளத்துடன் உதவித்தொகை வழங்கிவரும் டாக்டர் கலைஞர் அவர்கள்தான் இதற்குத் தீர்வு காண வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்தவர்களை மட்டுமே அழைத்துத் தேர்வு நடத்தி நமது நிறுவனத்தில் பணிநியமனம் நடைபெற வேண்டும் என்று கலைஞர் அவர்கள் பிறப்பித்த  அரசு ஆணைக்குப் புத்துயிர் கொடுத்து மீண்டும் அதனை செயல்படுத்த தொழிற்சங்கங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று அனைவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
திராவிடர் தொழிலாளர் கழகம் இந்தப் பிரச்சினையை திராவிடர் கழகத்தலைவர் தமிழர்தலைவர் மானமிகு வீரமணி அவர்களிடம்; எடுத்துச் சென்றிருக்கிறது.

மற்றவர்களும் அதில் முயற்சிக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து நம் தமிழர் உரிமையை மீட்டெடுப்போம்.
ஒன்றுபடுவோம்! நம் உரிமையை வென்றிடுவோம்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக