புதன், 30 நவம்பர், 2016

BMS கூட்டுக் குழுவுக்கு கன்வீனர் பொறுப்புக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டது



1996ல் தேர்தல் நடப்பதற்கு முன் பங்குபெறும் சங்கமாக இருந்தவர்களை கையாலாகாத சங்கங்கள், கையாலாகாத சங்கங்கள் என்றே கேலி பேசி வந்தது BMS. எங்களுக்கு ஒரே ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள். நாங்கள் வந்தால் வானத்தை வில்லாய் வளைக்கிறோம். மணலைக் கயிறாய்த் திரிக்கிறோம் என்று சவடால் விட்டார்கள்.

அப்பொழுது மத்தியில் BJPஆட்சி நடந்ததால் மக்களிடம் நாங்கள்தான் ஆட்சியில் இருக்கிறோம். எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். வந்த உடன் நடப்பதைப் பாருங்கள் என்று ரீல் விட்டார்கள். தொழிலாளர்களும் நம்பி ஓட்டுப் போட்டார்கள்.
மத்தியில் எங்கள்  ஆட்சிதான் நடக்கிறது என்று கூறி  1997ல் நடந்த ஊதிய உயர்வு கூட்டுக் குழுவுக்கு கன்வீனர் பொறுப்புக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

அதற்காக நடந்த கூட்டுக்குழுக் கூட்டத்தை BMS அலுவலகத்தில் கூட்டினார்கள். அப்பொழுது திராவிடர் தொழிலாளர் கழகம்தான் “நீங்கதான் அரசியல் சார்பற்ற சங்கம்னு சொல்லிக்கிறீங்களே! உங்களுக்கும் BJPக்கும் எந்த சம்மந்தமும் இல்லேன்னும் சொல்லிக்கிறீங்களே! இப்ப நாங்கதான் மத்தியில ஆளுறோம். அதனால எங்களுக்கு கன்வீனர் பொறுப்பு வேணுமின்னு எப்படி விரும்புறீங்க?” என்று கேட்ட உடன் உப்புக் கண்டம் பறிகொடுத்து பழைய பாப்பாத்தி மாதிரி விழிக்க ஆரம்பிச்சாங்க.

அதையே மற்ற சங்கங்களும் வழிமொழிய ஆரம்பிச்சாங்க. அதனால உடும்பு வேண்டாம். கையை விட்டாப் போதும்னு ஓடி ஒளிஞ்சிக்கி;ட்டாங்க. அன்றைக்கு முதன்மைச் சங்கமா இருந்த அம்பேத்கர் சங்கம் தலைமை தாங்கனும். இல்லேன்னா அடுத்த இடத்தில் இருக்கிற தொமுச தலைமை தாங்கனும்னு கோரிக்கை வைத்தோம். ஏற்கனவே பல போராட்டங்களில் தலைமையேற்று வெற்றி பெற்ற தொமுச வே தலைமை தாங்கலாம் என்று எல்லோரும் முடிவெடுத்தாங்க. அதன்பிறகு தொமுச பொதுச் செயலாளர் முத்துக் கருப்பன் கன்வீனரானார்.

கையாலாகாத சங்கங்கள் என்று BMS ஆல் வர்ணி;க்கப்பட்ட சங்கங்கள் இருந்தபோது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றும் அடுத்து அய்ந்து ஆண்டுக்கு ஒரு முறை என்றும் ஊதிய மாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டு வந்தது. BMS  பங்குபெறும் சங்கமாக ஆனபிறகு அப்பொழுது நடந்த BJP அரசாங்கத்தின் கொள்கையாலதான் அதுவரை 5 ஆண்டாக இருந்த ஊதிய மாற்றம் பத்து வருடத்திற்கு என்று முடிவானது. ஆக அய்ந்து வருடத்தை பத்து வருடமாக ஆக்கியதுதான் BMS ன் ஒரே சாதனை. BJPஅரசாங்கத்தின் சாதனை.

இப்பொழுதும் தொழிலாளர்கள் மத்தியில் அதுபோன்ற பிரச்சாரம் நடக்கிறது. அதாவது மத்தியில BMS க்கு நெருக்கமான மோடி தலைமையிலான BJPஅரசாங்கம் நடக்கிறதால BMS க்கு ஓட்டுப் போட்டீங்கன்னா நாங்க மறுபடியும் வானத்த வில்லா வளைப்போம் மணலைக் கயிறாத் திரிப்போம்னு கதை விடுறாங்க.
பழைய தொழிலாளர்கள்தான் அப்போ அதை நம்பி ஏமாந்தாங்க! இப்போ புதிய தொழிலாளர்களாகிய நீங்களும் நம்பி ஏமாறப் போறீங்களா? சிந்தியுங்கள்.!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக