புதன், 30 நவம்பர், 2016

பகவத் கீதையையும் பகவான் கண்ணனையும் நம்புவதாகச் சொல்லிக்கொண்டு


இப்பொழுது சாமியார்களும் ஆர்எஸ்எஸ் காரர்களும் ஊழல்ää கறுப்புப்பணம் என்று சொல்லி உத்தம வேடம் பூண்டுகொண்டு உண்ணாவிரதம்ää போராட்டம் என்று சண்டித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே பிஎம்எஸ் காரர்களும் போராட்டம் அது இது என்று பாவ்லா செய்து வருகிறார்கள். இவர்கள் எல்லோருமே பகவத் கீதையையும் பகவான் கண்ணனையும் நம்புவதாகச் சொல்லிக்கொண்டு அதனைப் பரப்புவதைப் பிறவிக்கடனாகக் கொண்டு நடப்பவர்கள்.  

கீதையில் கண்ணன் என்ன சொல்கிறார்?

~~எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும். எதைக் கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு? எது இன்று உன்னுடையதாக இருக்கிறதோ, அது நாளை வேறொருவருடையதாக இருக்கிறது. எது வேறொருவருடையதாக இருக்கிறதோ, அது நாளை உன்னுடையதாக இருக்கும்|| என்று பகவான் சொல்வதாக அச்சடித்து அதுதான் கீதையின் சாரம் என்று அலுவலகம், கடை, வீடு எல்லா இடத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எல்லாமே நன்றாக இருக்கிறது என்று கண்ணனே கூறிவிட்ட பிறகு இவர்கள் எதற்காகக் கூச்சல் போட வேண்டும்? கீதையையும் கண்ணனையும் இவர்கள் நம்பவில்லை  என்பதைத்தானே இது காட்டுகிறது? அத்துடன் கண்ணன் மேலும் கூறுகிறார்:

~எங்கு தர்மம் அழிந்து, அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கு நான் அவதரித்து தர்மத்தைக் காப்பேன்| என்று சொல்கிறார்.
புராணங்களில் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குவதாகச் சொல்லப்படும் போதெல்லாம் தேவர்கள் கடவுளிடம் சென்று முறையிடுவார்கள். உடனே பகவான் இப்பூமியில் அவதரித்து தர்மத்துக்கு எதிரானவர்களை ஒழித்து அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்தக் காவிக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதை நம்பக்கூடியவர்கள்தானே? இவர்கள் என்ன செய்ய வேண்டும்? பகவானிடம் சென்று பஜனை செய்து இப்பூமியில் தர்மம் அழிந்து விட்டது. அதர்மம் தலைதூக்கிவிட்டது. உடனே இங்கு அவதரித்து இந்த ஊழல், கறுப்புப்பணம் எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டு பகவானே! என்று முறையிட வேண்டியதுதானே?

அதைச்செய்யாமல் உண்ணாவிரதம், போராட்டம் என்று நடத்தினால் என்ன பொருள்? அவர்களே இதை நம்பவில்லை என்பதுதானே? இவர்கள் நம்பாத பகவத் கீதையைத்தான் எல்லோரும் நம்பவேண்டும் என்கிறார்கள். அந்த பகவத் கீதை மீது சத்தியம் செய்துதான் நீதிமன்றத்திலேயே சாட்சி சொல்ல வேண்டுமாம்.

எந்தக் காலத்திலும் பகவான் அவதாரம் எடுத்ததும் கிடையாது, இனி எடுக்கப் போவதும் கிடையாது. முன்பு அவதாரம் எடுத்ததாகச் சொல்வதெல்லாம் வெறும் ஏமாற்று. இவர்களுக்குப் பிடிக்காதவர்களை சூழ்ச்சி செய்து இவர்களே ஒழித்து விட்டு பாமர மக்களை ஏமாற்ற பகவானே அவதாரம் எடுத்து வந்து ஒழித்து விட்டார் என்று கதை கட்டி விடுவார்கள்.

இப்பொழுது அது மாதிரியெல்லாம் செய்ய முடியாது. ஏனெனில் தந்தை பெரியார் இந்த மண்ணில் தோன்றி இந்த அவதாரங்களின் பித்தலாட்டத்தையெல்லாம் தோலுறித்துக் காட்டிவிட்டார். அவர் தோற்றுவித்த இயக்கம் இருக்கிறது. அவர் ஊட்டிய உணர்வு இருக்கிறது. அவை இருக்கும்வரை பகவானும் அவதரிக்க முடியாது. பார்ப்பனப் பம்மாத்தும் இனிப் பலிக்காது. அவதாரம் எடுத்தது பகவானா? பார்ப்பானா என்று சோதித்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். எனவே  தமிழர்களே! இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!!
இவண் :        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக