புதன், 30 நவம்பர், 2016

இருவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்த நிர்வாகம் இவருக்கு ஏன் வழங்கவில்லை?


1992ல் 400 ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை இடித்த நாளைத் தேசிய எழுச்சி தினம் என்று நோட்டீஸ் ஒட்டியது பிஎம்எஸ். 1992க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 என்றாலே யாருமே நிம்மதியாக வீட்டை விட்டு வெளிவரவே முடியாது. அவ்வளவு பிரச்சினைக்குரிய செயலை ஆதரித்து நோட்டீஸ் ஒட்டுவது என்பது நம் நிறுவன தொழில் அமைதியைப் பாதிக்கக் கூடிய செயல்.

பல மதத்தவர்களும் இனத்தவர்களும் பணியாற்றும் இந்நிறுவனத்தில் சிறுபான்மை மக்களை அச்சத்திலாழ்த்தும் செயல் இது என்பதால் அந்த நோட்டீஸ் ஒட்டியவர் மீது நடவடிக்கை எடு என்று திதொக கோரிக்கை வைத்த உடன் பிஎம்எஸ், எங்களுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி இருக்க வேண்டும்.

அல்லது தைரியமாக நாங்கள்தான் அதனை ஒட்டினோம்@ ஆனதைப் பாருங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். அத்தகைய வீரத்தை அவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு என்று சொல்லும் வகையில் உங்கள் சங்க செயலாளர் வெல்டர்ஸ் அசோசியேசன் பொதுக்குழுவில் பேசினார். அதற்கு ஏன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு ஆட்காட்டி வேலை செய்கிறது.
எங்கள் செயலாளர் அந்தக் கூட்டத்தில் பேசியது உண்மைதான். அது ஒன்றும் இரகசியக் கூட்டம் அல்ல. அனைவருக்கும் அழைப்பு விடுத்து பொதுவான மண்டபத்தில் ஒலிபெருக்கி வைத்து அனைவருக்கும் கேட்கும் வண்ணம் நடைபெற்ற அக்கூட்டத்தில் வெளிப்படையாக அவர் பேசினார்.

 அவருடைய பேச்சு அனைத்துத் தொழிலாளர்களாலும் வரவேற்கப்பட்டது. அதற்கு முதல் நாள் எங்கள் சங்கத்தின் பெயர் போட்டு போராட்டத்திற்கு ஆதரவாகவும் வெல்டர்ஸ் அசோசியேசன் இல்லாமல் பேச்சுவார்த்தை என்பது நோயாளியை அழைத்துச் செல்லாமல் மருத்துவரிடம் அவருக்கு வேண்டியவர் சென்று மருந்து கேட்பது போலத்தான் முடியுமே தவிர நோய் தீர வழியேற்படாது என்றும் வெல்டர்ஸ் அசோசியேசனையும் வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் இப்பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்றும் நிர்வாகத்துக்கும் பங்குபெறும் சங்கங்களுக்கும் வேண்டுகோள் வைத்து துண்டறிக்கை வெளியிட்டோம்.

அது அனைத்து வெல்டர்களாலும் குறிப்பாக இளம் வெல்டர்களால் வரவேற்கப்பட்டு ஒருவருக்கொருவர் அது குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. பொதுக்குழுவில் பேசுகின்றபொழுது முதல் நாள் அந்தத் துண்டறிக்கை வெளியிட்டது தங்கள் சங்கம்தான் என்றோää தான் அந்த சங்கத்தின் செயலாளர் என்றோ வெளிப்படுத்தி பிஎம்எஸ் சைப்போல நாங்கள் மட்டுமே உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம். எங்கள் சங்கத்திற்கு ஆதரவு தாருங்கள் என்றோ ஓட்டுப்போடுங்கள் என்றோ நன்கொடை தாருங்கள் என்றோ பொருள்படும்படிப் பந்தலிலே பாகற்காய் என்ற பாணியில் பேசவுமில்லை. ஆதாயம் தேடவுமில்லை. இது தவறான செயலா? தொழிலாளர்களை இது பாதிக்கச் செய்ததா? பங்குபெறாத சங்கமாக இருக்கும்போதே இதற்காக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் சங்கம் பங்குபெறும் சங்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எத்தகைய பாதகத்தைச் செய்வார்கள் என்பதைத் தொழிலாளர்களே! புரிந்துகொள்வீர்!
இதுபோல துணிச்சலாக பாபர் மசூதி இடித்த தினத்தை தேசிய எழுச்சிநாள் என்று துண்டறிக்கை ஒட்டியது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளத் தயாரா?

அக்கூட்டத்தில் பேசிய இருவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்த நிர்வாகம் இவருக்கு ஏன் வழங்கவில்லை? இவருக்கும் நிர்வாகத்துக்கும் என்ன தொடர்பு? என்று ஏதோ புலன் விசாரணை செய்து மர்மக்கதை எழுதுகிறது. 21-08-2011 அன்று வெல்டர்ஸ் அசோசியேசன் கூட்டம் நடைபெற்றது. 13-08-2011 தேதியிட்டு எங்கள் சங்கத்துக்கு எதிர்காலத்தில் எப்பொழுதுமே வாயிற்கூட்டம் நடத்த அனுமதியில்லை என்று நிர்வாகம் கடிதம் வழங்கியது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை தவறு என்பதை நிரூபித்துத்தான் மீண்டும் எங்கள் சங்கத்துக்கு வாயிற்கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டது. இதுதான் எங்களுக்கும் நிர்வாகத்துக்கும் உள்ள தொடர்பு. இதனையும் மீறி நிர்வாகத்துடன் எங்களுக்கு என்ன உறவு என்று பிஎம்எஸ் சொல்கிறதோ புரியவில்லை. எனவே தொழிலாளர்களே! புரிந்துகொள்வீர் பிஎம்எஸ்ஸை!  இவண் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக