திங்கள், 14 நவம்பர், 2016

துளசிதாசர் அயோத்தியிலிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இராமர் கோயிலை பாபர் இடித்தார் என்று எங்கும் குறிப்பிடவில்லை.



இராமன் இங்கேதான் பிறந்தான், அவன் பிறந்த இடத்தில் கோயில் இருந்ததுஅதனை இடித்து விட்டு மசூதி கட்டினான் என்று பாபர் மஸ்ஜித்தை இடித்து நாட்டில் மிகப் பெரிய மதக் கலவரத்தைத் தூண்டி பல்லாயிரக் கணக்கானோரின் சாவுக்குக் காரணமாக இருந்த RSS கூட்டம் அந்த நாளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து துண்டறிக்கை போட்டு மீண்டும் மதக்கலவரம் நடத்தத் துடிக்கிறது.

அவ்வாறு அவர்கள் முயல்வது எவ்வளவ பெரிய மோசடி என்பதைத் தோலுறிக்க வேண்டியது உண்மையான மனிதநேய மிக்கவர்களின் கடமை என்ற அடிப்படையில் இராமன் எப்படிப் பிறந்தான்? என்று கேட்டால் உண்மையிலேயே பிறந்திருந்தால் இப்படித்தான் பிறந்தான் என்று சொல்ல வேண்டியதுதானே!

இராமன் என்பவன் ஒரு கற்பனைக் கதாபாத்திரம். இராமன் உண்மையில் பிறந்தவன் அல்ல. இதிகாசத்தில் சொல்லப்பட்டிருக்கிற இராமன் பிறப்புக்கான கதைகள் அறிவுக்குப் பொருத்தமற்றவை என்பதை எந்த இராமாயணத்தை வைத்து மக்களை ஏமாற்றுகிறார்களோ அதே இராமாயணத்தை வைத்து அதன் பித்தலாட்டத்தைத் தோலுறித்தால் அதை மறுக்க வக்கற்ற ஆர்எஸ்எஸ் கூட்டம் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகக் கூறுகிறது.

மனது இவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா? இவர்கள் மனம்தான் புண்படுமா? வரலாற்றில் வாழ்ந்த மனிதராகிய பாபர் கட்டிய மஸ்ஜித்தை கற்பனைக் கதாபாத்திரத்தின் பெயரால் இந்திய அரசியல் சட்டத்தையும் நீதியையும் நீதிமன்றத்தையும் இறையாண்மையையும் ஏமாற்றி இலட்சக்கணக்கானவர்கள் சேர்ந்து பட்டப்பகலில் இடித்துத் தள்ளினார்களே! அப்பொழுது அவர்கள் மனது புண்படாதா? அவர்களும் மனிதர்கள்தானே! மதவெறி மனிதநேயத்தை சாகடிக்கலாமா?

கிட்டத்தட்ட உலகில் 50 இராமாயணங்களுக்கு மேல் இருக்கின்றன. வடமொழியில் வால்மீகி எழுதிய கதையை அடிப்படையாக வைத்து தமிழில் கம்பன் எழுதினான். இந்தியில் துளிசிதாஸ் எழுதினான். இந்த இருவரும்தான் வால்மீகியால் வெறும் அரசகுமாரனாக சித்தரிக்கப்பட்ட இராமனை கடவுள் அவதாரமாக்கி மக்கள் வழிபடக் காரணமாக இருந்தவர்கள்;.

அந்த துளசிதாசர் வாழ்ந்த காலத்தில்தான் பாபர் இராமன் கோயிலை இடித்து விட்டு மசூதியைக் கட்டினான் என்று சங்பரிவார் கும்பல் கதைவிடுகிறது. பாபர் மசூதி கட்டியபோது துளசிதாசருக்கு வயது முப்பது. பாபர் காலத்தில்தான் துளசிதாசர் இராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார்.

பாபர் இராமன் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டியிருந்தால் அதனைக் கண்டும் காணாமல் துளசிதாசரால் இருந்திருக்க முடியாது. ஒருவேளை பாபருக்கு அஞ்சி அவர் இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் என சிலர் வாதிடக் கூடும். ஆனால் பாபருக்குப் பின்னால் ஹமாயூன் அதன் பின்னர் அக்பரின் ஆட்சிக்காலம் வரை வாழ்கிறார் துளசிதாசர்.  இந்து மதத்தையும் இந்துக்களையும் நேசித்த அக்பரின் ஆட்சியின்போது அவரது ஆதரவோடுதான் இராமாயணத்தை எழுதி முடிக்கிறார்.

அவர் அயோத்தியிலிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இராமர் கோயிலை பாபர் இடித்தார் என்று எங்கும் குறிப்பிடவில்லை.

அதேபோல பாபர் ஆட்சி செய்தபோது பாபரை கொடுங்கோலன் என்று அழைக்கும் மன வலிமை பெற்றவர் சீக்கிய மத நிறுவனர் குருநானக். பாபரின் செயல்களை உன்னிப்பாகக் கவனித்து அதனைக் கடுமையாக விமர்சித்த குருநானக்ää பாபர் எந்த ஒரு இந்துக் கோவிலையும் இடித்தார் என்று குறிப்பிடவே இல்லை. அயோத்திக்கு வருகை தந்து அங்கு பாபர் கட்டிய மஸ்ஜித்தையும் பார்வையிடுகிறார்.

அந்த மஸ்ஜித்இராமர் கோயிலை இடித்து விட்டுக்; கட்டப்பட்டிருந்தால் அவரது சீடர்கள் அதனைப்பற்றி தங்கள் குருவான குருநானக்கிடம் கூறியிருப்பார்கள். அவரும் இவ்வாய்ப்பை நழுவ விடாது பாபரை நிந்தித்து எழுதியிருப்பார். அத்தகைய வரிகளை அவரது எழுத்துக்களில் காண முடியவில்லை. குருநானக் பாபருக்கு அஞ்சியவரன்று.

 பாபர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழித்தே அவரும் இயற்கை எய்துகிறார். பாபரின் மறைவுக்குப் பிறகுகூட பாபர் இந்துக் கோயில்களை இடித்தான் என்று எங்கும் கூறவில்லை.

இக்கருத்துக்களை நமது குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதா கிருஷ்ணனின் மகனும் வரலாற்றுப் பேராசிரியருமான டாக்டர் கோபாலும் மேலும் 24 வரலாற்று ஆசிரியர்களும் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

இவ்வறிக்கையை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்று ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ளது. (சுநக : வுhந Pழடவைiஉயட யுடிரளந ழக ர்ளைவழசல- டீயடியச ஆயளதனை- சுயஅயதயnஅய டீழழஅi னுiளிரவந Pயபந 1இ2ரூ3  Pரடிடiளாநன டில ஊநவெசந கழச ர்ளைவழசiஉயட ளுவரனநைளஇ துயறயாயசடயட நோசர ருniஎநசளவைல  ) இத்தகைய வரலாற்று ஆதாரங்கள் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை. எங்களுக்குத் தேவையெல்லாம் மதவெறி! மதவெறி!! மதவெறியே!!! என்கின்ற கூட்டம்தான் நாட்டை சீர்குலைக்கும் செயல்களில் இறங்கியிருக்கிறது. அத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மனிதநேயத்தோடு கேட்டுக் கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக