ஞாயிறு, 13 நவம்பர், 2016

அட்ஷய திரிதியை என்ற புருடா




 எதைச் சொன்னாலும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்காமல் நம்புவதற்கு மக்கள் இருக்கிறார்கள். மதவாதிகளும் வியாபாரிகளும் அவ்வப்பொழுது எதையாவது புருடாக்களை அவிழ்த்து விட்டு மக்களின் மூளையையும் பர்சையும் காலி செய்துகொண்டே இருப்பார்கள். அப்படி அவிழ்த்து விடப்படும் புதிய புருடாதான் அட்ஷய திரிதியை என்பது.

ஆண்டுதோறும் தங்கம் விற்பனைக்காக நம் நம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மூடநம்பிக்கையை மூலதனமாக்கி அட்ஷய திரிதியை என்று புருடா விட்டு அந்நாளில் நகை வாங்கினால் அது பல மடங்காகப் பெருகும் என்று ஒரு கற்பனை- கட்டுக்கதையைப் பரப்பி வருகின்றனர்.

இதை உண்மை என்று நம்பி பல ஆயிரம் தாய்மார்கள் நகைக் கடைகளுக்குப் படையெடுப்பது இன்னமும் பழைய கருப்பனாகவே அறிவைப் பயன்படுத்தாத – அறியாமைக்குப் பலியாகும் மவுடீகங்களாகவே இருக்கிறார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?
சென்ற ஆண்டு அட்ஷய திரிதியை நாளில் நகைகளை வாங்கியவர்களுக்கு இவ்வாண்டு எவ்வளவு பேருக்கு அது பெருகியிருக்கிறது? குறைந்தபட்சம் அடகுக் கடைக்குப் போகாமலாவது இருக்கிறதா?

வீடுகளில் கொள்ளை – திருட்டு என்பவை தமிழ் நாட்டில் நிகழும் அன்றாட நிகழ்வுகளாகவே ஆகி விட்டனவே! ஒரு நாளேட்டில் இன்று நடந்த கொள்ளைகள் இன்றைய தாலி செயின் பறிப்புகள் என்று நிரந்தரமான தலைப்பில் பத்தி பத்தியாக செய்திகள் இடம் பெற்றுள்ளனவே! அப்படித் திருட்டுää கொள்ளை போகும் நகைகள் அட்ஷய திரிதியை நாளில் வாங்கினால் களவு போகாமல் இருக்குமா?

கடந்த ஆண்டு திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையில் அட்சய திரிதியை நாளில் நகை வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறுவதற்குள்ளாகவே களவு போய்விட்டது. நகையைப் பறிகொடுத்த பெண்மணி புலம்பிய புலம்பல் பேருந்து நிலையத்தில் இருந்தவர் அனைவரது கவனத்தையும் சிதறடித்தது. அட்சய திரிதியை நாளில் வாங்கிய நகையும் போய்ää கொண்டு வந்த பணமும் பறிபோய் பேருந்துக்குக்கூட பணம் இல்லாமல் அந்தப் பெண் தவியாய்த் தவித்தார் என்பதைப் பார்க்கும்போது மக்களின் அறியாமை எத்தகைய விபரீதத்தில் கொண்டுபோய் விடுகிறது என்பதை உணர முடிகிறது.

அட அறியாமைப் பிண்டங்களே! நகைக் கடைக்காரர்களுக்குக் கொள்ளை வருமானம், பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு கொள்ளை விளம்பரங்கள்! இதைத்தவிர வேறு என்ன இதில் மக்களுக்கு இலாபம்? நகைக்கடைக்காரர்கள் விற்பனையைப் பெருக்க இப்படி அட்ஷய திரிதியை போன்ற புருடாக்களை உற்பத்தி செய்து தர புரோகிதர்களும் ரெடி!

அட மண்டூகங்களே! சிந்தனையே உங்களுக்குக் கிடையாதா? படித்தவன்தான் பெண்டாட்டியுடன் நகை;கடையை நோக்கி ஓடுகிறான். இதில் முன்பதிவு வேறு! படிப்புக்கும் அறிவுக்கும் சம்மந்தமே கிடையாதா? இந்த அழுகல் மூளைகளை பெரியாரின் அறிவு ஆயுதம்; கொண்டுதான் சரிப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக