செவ்வாய், 8 நவம்பர், 2016

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள்


“புத்துலக தீர்க்கதரிசி,தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ்சீ ர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை,அர்த்தமற்ற சம்பிரதாயம்ä,இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” தந்தை பெரியார்  அவர்களின் நினைவு நாள் இன்று. அவர் மட்டும் பிறவாமல் இருந்திருந்தால்?

அய்ந்து வயதுப் பார்ப்பனச் சிறுவன் அய்ம்பது வயது பார்ப்பனரல்லாத ஜமீன்தாரைக்கூட  “டேய் சதாசிவம்” என்று அழைத்தான். பார்ப்பனரல்லாத உயர்ஜாதி சிறுவன் அய்ம்பது வயது தாழ்த்தப்பட்டவனை “டேய் கருப்பா” என்று அழைத்தான். பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டவர்களை சூத்திரன் என்று அழைத்தான் பார்ப்பான். தாழ்த்தப்பட்டவர்களை பஞ்சமன் என்று அழைத்தான்.

பிற்படுத்தப்பட்டவனைப் பார்ப்பான் தொட மாட்டான். தாழ்த்தப்பட்டவனை பிற்படுத்தப்பட்டவன் தொட மாட்டான். உலகில் வேறு எங்குமே இல்லாத கொடுமையான தொட்டால் தீட்டுää பார்த்தால் பாவம்ää நிழல் பட்டால் தோஷம் என்ற கொடுமை இந்தப் புண்ணிய பூமியில் நிலவியது.

படைப்புக் கடவுளான பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் பார்ப்பான்@ தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று மனுதர்மத்தில் எழுதி வைத்தான். சூத்திரன் என்றால் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்றும் மனுதர்மத்தில் எழுதி வைத்து இந்நாட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களை இழிவு படுத்தினான்.

பெரியார்தான் கேட்டார், முகத்தில் பிறப்பாருண்டோ முட்டாளேää தோளில் பிறப்பாருண்டோ தொழும்பனே, இடையில் பிறப்பாருண்டோ எருமையேää காலில் பிறப்பாருண்டோ கழுதையே, நான்முகன் ஒருவன் உண்டோ நாயே, புளுகடா புகன்றதனைத்தும் போக்கிலியே! எனப் பொட்டிலறைந்தாற்போல் கேட்டார்.

நாங்கள் சொல்லவில்லை, எல்லாம் சாஸ்திரத்தில் இருக்கிறது என்றான், சாஸ்திரத்தைக் கொளுத்து என்றார் பெரியார். புராண இதிகாசங்களில் இருக்கிறது என்றான். புராண- இதிகாசங்களைப் பொசுக்கு என்றார். எல்லாம் கடவுள் படைப்பு என்றான். கடவுளைத் தூக்கிப் போட்டு உடை என்றார். அரசியல் சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொண்டான். சட்டத்தை எரித்து சிறையேகினார் தன் தொண்டர்களுடன் பெரியார்.

பெரியார் அடித்த அடியில் ஆரியத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றது மனுதர்மம். அந்த மனுதர்மத்தைக் கொளுத்தினார்

பெரியார். வெள்ளைக்காரன் கொடுத்த கல்வியையும் தட்டிப்பறித்தது ஆரியம். இராஜகோபாலாச்சாரி என்கின்ற ஆரிய நச்சரவம் தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் இரண்டுமுறை  ஏறி பார்ப்பனரல்லாதாரின் கல்வியைப் பறிக்க பள்ளிகளை மூடி  குலக்கல்வித திட்டத்தைக் கொண்டு வந்தார்.

பெரியாரின் போராட்டத்தால் இராஜாஜி பதவியை விட்டு ஓடினார். காமராஜர் ஆட்சிக்கு வந்து கல்விக்கண் திறந்தார். இன்று தாழ்த்தப்பட்டவனும் பிற்படுத்தப்பட்டவனும் பெற்றிருக்கும் கல்வி தந்தை பெரியாரால் கிடைத்தது. பெரியார் இல்லையென்றால் தமிழனுக்குப் படிப்பு ஏது? பட்டம் ஏது? பதவிதான் ஏது?

அவர் காண விரும்பியது சாதியற்ற சமத்துவ சமுதாயம். சாதியை ஏற்றுக் கொள்பவன் மானமற்றவன். தீண்டாமையைக் கடைப்பிடிப்பவன் மனிதனே அல்ல என்பது பெரியார் கருத்து. நாம் மானத்தோடு வாழ்வோம் மனிதனாக வாழ்வோம்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக