திங்கள், 28 நவம்பர், 2016

எஜமான விசுவாசத்தைக் காட்டும். BMS



BMS ன் பித்தலாட்டத்தை உணர்ந்த மூத்த ஊழியர்கள் 1996க்குப் பிறகு அதனை அடித்து விரட்டினார்கள். இளைய ஊழியர்களுக்கு இவர்களின் பித்தலாட்டம் தெரியாது என்று கருதி;க்கொண்டு பழைய புராணக் குப்பைகளைக் கிளறி வயிறு வளர்க்கும் பிரசங்கிபோல பித்தலாட்ட வேலையில் இறங்கியுள்ளது BMS

.  BJP ஆட்சியில் இ;ல்லாதபோது வீராவேசமாக சண்டப்பிரசண்டம் செய்வதும் BJP ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தகிடுதத்த வேலை செய்த அந்த ஆட்சியைக் காப்பாற்ற எந்தத் தில்லுமுல்லு வேலை செய்தும் தன் எஜமான விசுவாசத்தைக் காட்டும். உதாரணத்திற்கு கடந்த ஆண்டு நடந்த செப்டம்பர் 2 வேலைநிறுத்தம். எல்லா சங்கங்களும் ஒன்றுசேர்ந்து போராடினால் அதில் கலந்துகொள்ளாமல் நான் தனியாகப் போராடுகிறேன் என்பார்கள்.
வருங்கால வைப்புநிதியில் கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து பெங்களுரு நகரமே கொதித்ழுந்து போராடியபோது BMS ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது.

இதுபோல BHEL ல் நடைபெறும் எஜமான விசுவாசங்களில் சில. BHEL க்கு எதிராக இவர்கள் மட்டுமே சட்டப்போராட்டம் நடத்துவதுபோலவும் மற்றவர்களுக்கெல்லாம் சட்ட அறிவே இல்லை என்பதுபோலவும் புருடாக்களை அவிழ்த்து விடுகிறது BMS. எத்தனையோ சங்கங்கள் வழக்குப் போட்டு பல வழக்குகளில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு2nd BATCH வழக்கு. அதனால் அந்த 2nd BATCH ஊழியர் மட்டுமல்லாது எதிர்கால தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களும் பயன்பெற்று வருகின்றனர்.

ஆனால் இந்த புருடா மன்னர்கள் போடுகின்ற வழக்கில் தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதைவிட நாங்கள் வழக்குப் போட்டுள்ளோம் என்று சொல்லி ஓட்டுக் கேட்க மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் போட்ட வழக்குகளால் இதுவரை யாருக்காவது எந்தப் பலனாவது கிடைத்திருக்கிறதா?

எந்த வழக்கிலும் வெற்றி பெறுவதுபோல் இருந்தாலும் அது நிர்வாகத்தை எந்த விதத்திலும் பாதி;க்காத வகையில்தான் இருக்குமே தவிர தொழிலாளி யாருக்கும் எந்த நன்மையும் ஏற்பட்டிருக்காது. இவர்கள் போட்ட அனாமலி வழக்கில் எத்தனை பேருக்கு லாபம்? அதே மாதிரி சர்வீஸ் வெயிட்டேஜ் வழக்கால் பலன் அடைந்தவர் யார்?

CONSOLIDATED WAGE வழக்கையும் 2.5 இன்கிரிமென்ட் வழக்கு இரண்டையும் ஒரே வழக்காக இணைத்துப் போட வேண்டிய அவசியம் என்ன? இது தோற்றுவிடும் என்று தெரியும். நிர்வாகமே இவர்களுக்கு வழியைச் சொல்லிக் கொடுத்து இவர்களை வழி நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. வழக்குப் போட்டிருக்கிறேன் வழக்குப் போட்டிருக்கிறேன் என்று சொல்லி பிரச்சாரம் செய்து ஒரு நல்ல தொகையையும் வசூல் செய்த பிறகு வழக்கு தோற்று விட்டது என்று கூறுவதற்குப் பதிலாக சாதகமாக தீர்ப்பு இல்லை என்கிறது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

எனவே, இதனால் எந்தத் தொழிலாளிக்கும் பலனில்லை. வடிவேலு பாணியில் நாங்களும் கேஸ் போட்டிருக்கிறோம், நாங்களும் கேஸ் போட்டிருக்கிறோம் என்ற பிரச்சாரத்துக்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர வேறு ஒன்றும் ஆகப் போவதில்லை.

கடந்த 1997 WAGE REVISION போது பங்குபெறும் சங்கமாக இருந்தது BMS அன்று ஆட்சியில் இருந்ததும் BJPஅதனால் 5 ஆண்டு ஊதிய ஒப்பந்தமானது பத்து ஆண்டாக ஆனது. அதேபோல இப்பொழுதும் மத்தியில் BJPஇருக்கிறது. இந்த நேரத்தில் BMS ஜெயிக்குமானால் 10 ஆண்டு என்பது 15 ஆண்டாகவும் ஆகலாம். இருபது ஆண்டாகவும் ஆகலாம். எனவே, வரும் தேர்தலில் BMS அய் ஓரங்கட்டுவதன் மூலமே நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக