ஞாயிறு, 13 நவம்பர், 2016

டாக்டர் அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக மட்டுமே பார்க்கிற தொனி இன்றும் நிலவுகிறது. Ve.Mathimaran

அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தை எழுதியிருக்கிறார். அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் பல உரிமைகளைப் போராடி சட்டமாக்கியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினமா செய்திருக்கிறார். உலகம் வியக்கும் அறிஞராக பல விஷயங்களில் ஆழ்ந்த கருத்து தெரிவித்திருக்கிறார்.
அண்ணல் அம்பேத்கர் பேசிய எழுதிய கருத்துக்கள்தான் இன்று மத்திய அரசு பதவிகளிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற உதவியாக இருந்தது.

இந்து மதத்தில் பிறவியின் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்டது பிற்படுத்தப்பட்ட மக்களான சூத்திரர்கள்தான். அந்த சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னது மனுதர்மம். மனுவுக்குப் பிறகு வந்த காத்யாயனர் போன்றவர்கள் எழுதிய ஸ்மிருதிகளில் வேதத்தைக் காதால் கேட்ட சூத்திரனது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். அவன் நெஞ்சில் அதைப் பதிய வைத்திருந்தால் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று இருந்த விதியை அம்பலப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.

அந்த சூத்திரர்கள் செல்வம் சேர்க்கவும்ää நல்ல உணவு உண்ணவும் நல்ல பெயர்கள் வைத்துக்கொள்ளவும் மனுவால் தடுக்கப்பட்டார்கள். அவர்களது ஒரே பணி பிராமணää சத்திரியää வைசிய ஜாதியினருக்கு எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றித் தொண்டு செய்வது மட்டுமே என்று மனு கூறிய விதிகளை அமுல்படுத்தவே இராமாயணத்தில் சம்பூகன் என்ற சூத்திரன் இராமனால் கொல்லப்பட்டான் என்பதையும்ää மகாபாரதத்தில் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டினர் என்பதையும் ஆணித்தரமாக எழுதியவர் அம்பேத்கர்.

பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை ஆராய அமைக்கப்பட்ட மண்டல் குழு அறிக்கையில் அண்ணல் அம்பேத்கர் கூறிய இந்த உதாரணங்களையெல்லாம் எடுத்துச் சொல்லித்தான் மண்டல் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் வழங்க வேண்டும் என்ற அறிக்கையினை மத்திய அரசுக்கு வழங்கினார். இன்று பிற்படுத்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் இட ஒதுக்கீட்டிற்குக் காரணமானவர் அண்ணல் அம்பேத்கர் என்றால் அது மிகையாகாது.

ஆனாலும் டாக்டர் அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக மட்டுமே பார்க்கிற தொனி இன்றும் நிலவுகிறது.

அப்படிப் பார்ப்பதுகூட பிரச்சினையில்லைஇ அவரை பிற்படுத்தப்பட்டவர்களின் எதிரியாக சித்தரிப்பது திட்டமிட்ட சதியாகஇ பேராபத்து நிறைந்ததாக இருக்கிறது. அதன் பொருட்டேஇ அவரின் சிலை சேதப்படுத்தப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வியைஇ வேலைவாய்ப்பை எதிர்த்தஇ மறுத்த – குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜி மீது வராத கோபம்இ காழ்ப்புணர்ச்சி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கிட்டை சட்டமாக்கிய டாக்டர் அம்பேத்கர் மீது வருகிறது என்றால்இ அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தார் என்பதினால்தான். “அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.” என்று அம்பேத்கர் சொன்னது எவ்வளவு சரி.

ஒரு தாழ்த்தப்பட்டவர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கிறார். அவரின் கட்டுப்பாட்டில் அந்த மாவட்டமே இருக்கிறது. காவல் துறை அதிகாரிகளில் இருந்துஇ தாசில்தார்கள் வரை அவர் உத்தரவுக்காக காத்திருக்கிறர்கள். ஆனால்இ அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்றால்இ சேரியில்தான் புழங்கவேண்டும். ஊரில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு முட்டாள் அல்லது கிரிமினல் ஜாதி இந்துகூட அவரை தன்னை விட தாழ்ந்தவராகஇ தான் அவரை விட உயர்ந்தவராக நினைப்பான். இதுதான் ஜாதிய மனோபாவம்.
இந்த மனோபாவம்இ முட்டாள் ஜாதி இந்துவிடம் மட்டுமல்லஇ நன்கு படித்த ஜாதி இந்துவிடமும் இருக்கிறது. இந்த எண்ணமும்இ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையும் இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. இந்திய தேசியத்தின் ஒரே அடையாளமாக இந்த தலித் விரோதம்இ இந்துக்கள் இருக்கும் இடமெல்லாம் நீக்கமறஇ பரவி இருக்கிறது.

தன் மீது ஆதிக்கம் செலுத்துகிறஇ தன்னை சூத்திரன் என்று அவமானப்படுத்துகிற பார்ப்பனர்;களைப் பார்த்து வராத கோபம் தன்மீது எந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்தாதஇ தன்னைவிட மட்டமானவர்களாக நினைக்காதஇ தாழ்த்தப்பட்டவர்கள் மீதே கோபம் கொள்கிற மனோபாவத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். இந்த மனோபாவம் மாறாத வரையில் ஜாதி ஒழியாது. ஜாதி மட்டுமல்லஇ ஜாதிய ஏற்றத்தாழ்வுகள்கூட ஒழியாது.

ஏனென்றால் ஜாதிய அமைப்பு முறை ‘உயர்ந்தவன்-தாழ்ந்தவன்‘ என்ற இரண்டே வேறுபாட்டில் இல்லை. அப்படி இருந்திருந்தால்இ அது எப்போதோ ஒழிந்திருக்கும்இ அல்லது அந்த நிலையில் மாற்றம் வந்திருக்கும். ஆனால் இந்து சாதிய அமைப்பின்இ ஏற்றத் தாழ்வுகள் படிநிலை நிறைந்ததாக உள்ளது. அதனால் தான் வேறொருவனுக்கு அடிமையாக இருப்பதை பற்றிய கவலையில்லாமல்இ தனக்கு கீழ் ஒரு அடிமை இருப்பதில் மகிழ்ச்சியும்இ அந்த அடிமை தன்னை மீறி போகும்போது ஆத்திரம்இ காழ்ப்புணர்ச்சியும் கொண்டு வன்முறையில் இறங்க வைக்கிறது.

2000 ஆண்டுகளாகியும் ஜாதி அமைப்பு முறையை ஒழிக்க முடியாததற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் பார்ப்பனர்கள் எல்லா சாதிக்காரர்களையும் மட்டமானவர்களாக கருதினாலும் அல்லது எல்லோரையும் விட நாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தோடு நடந்து கொண்டாலும்இ அவர்களிடம் எந்த சாதிக்காரர்களும் சண்டைக்குப் போவதில்லை. எந்த ஜாதிய தகராறுகளிலும் பாதிக்கப்படாமல்இ ஜாதி ரீதியாக மரியாதையோடும் வாழ்கிறார்கள். இதுதான் ஜாதியின் இயக்கம். இதுதான் ஜாதிய உணர்வு.

இந்த உணர்வு கொண்ட ஜாதி இந்துக்கள் மனம் திருந்த வேண்டும். ‘தீண்டாமையை பொறுத்தவரையில் அதில் திருந்த வேண்டியவர்களும்இ மாற வேண்டியவர்களும் ஜாதி இந்துக்கள்தான். தாழ்த்தப்பட்ட மக்களிடம் எந்த தவறும் இல்லை.’ என்று டாக்டர் அம்பேத்கர் சொல்வார். ஆகையால் தீண்டாமைக்கு எதிராக சாதி இந்துக்களிடம் தீவிரமாக பிரச்சாரம் செய்யவேண்டியதுஇ சமூக அக்கறை உள்ளவர்களின் கடமை. அதனால்தான் தந்தை பெரியாரும் ஜாதிக்கு எதிராகஇ இந்து மதத்திற்கு எதிராகஇ தீண்டாமைக்கு எதிராக ஜாதி இந்துக்களிடமே அதிகம் பேசினார். பிராமணனுக்குச் சமமாக வரவேண்டும் என்று போராடும் நீங்கள் தாழ்த்தப்பட்டவர்களை உங்களுக்குச் சமமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.

பறையன் பட்டம் போகாமல் உங்களது சூத்திரப்பட்டம் போகாது என்று சொன்னவர் தந்தை பெரியார். அதனால்தான் இந்திய அளவில் மிகச் சிறந்த தலைவராக டாக்டர் அம்பேத்கரை போல் , தந்தை பெரியாரும் விளங்குகிறார்.

உலக மாந்தர் அனைவரும் ஒன்று என்ற தத்துவத்தை முன்னெடுத்துச் சென்ற தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபடவில்லை, அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தலைவர் என்றும்ää சுதந்திரம்ää சமத்துவம்ää சகோதரத்துவத்துக்காகப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆதர்ஷ புருஷரே தவிர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தலைவரல்ல என்ற பிரச்சாரமும் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இருபெரும் தலைவர்களது கருத்தும் ஒன்றுதான். இருவருமே ஜாதி ஒழிப்புக்காகப் பாடுபட்ட தலைவர்களாவர். ஜாதி ஒழிப்பு குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறியதை எடுத்துப் போட்டு கீழே பெரியார் என்று போட்டாலும்ää தந்தை பெரியார் கூறிய கருத்துக்களுக்கு அடியில் அண்ணல் அம்பேத்கர் என்று போட்டாலும் சரியாகவே இருக்கும். அவர்களது ஜாதி ஒழிப்புக் கருத்துக்கள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுடைய முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. அவற்றை அமுல்படுத்தும்பொழுது பார்ப்பனியம் ஆட்டம் கண்டுபோகும். அதனால் அந்த இருபெரும் தலைவர்களையும் ஒன்றிணைக்கக் கூடாது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து விடக்கூடாது என்று கருதக்கூடியவர்கள்தான் இருவரையும் மக்கள் மத்தியில் தவறாகச் சித்தரிக்க முயல்கிறார்கள்.

தீண்டாமை ஒழிய வேண்டுமானால் ஜாதி ஒழிய வேண்டும். ஜாதி ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டுமானால் கடவுள்ää பார்ப்பான்ää கோயில்ää பூசைää புனஸ்காரங்கள்ää சடங்குகள்ää சம்பிரதாயங்கள்ää வேதää புராண- இதிகாசங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் பெரியார். அதே கருத்துக்களைத்தான் ஜாதி ஒழிப்பு என்ற நூலில் அண்ணல் அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஜாதியைக் கடைப்பிடிக்கிறான் என்றால் அது அவனுடைய தவறு கிடையாது. ஜாதி புனிதமானது என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கும் சாஸ்திரங்களும் சடங்குகளும் சம்பிரதாயங்களுமே அதற்குக் காரணம். ஜாதி புனிதமானது என்று கூறுகின்ற மதமே அதற்குக் காரணம் என்று கூறி அந்த மதம் ஒழிந்தாலொழிய ஜாதியும் தீண்டாமையும் ஒழியாது என்று சொன்னவர் அண்ணல் அம்பேத்கர்.

இந்த ஜாதி ஒழிப்புக் கொள்கையில் இருவரும் ஒத்த கருத்துடன் இருந்த காரணத்தால்தான் தந்தை பெரியார் அவர்கள் அம்பேத்கரின் ஜாதியை ஒழிக்க வழி என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். தமிழில் முதன் முதலாக வெளிவந்த அம்பேத்கரின் புத்தகமும் இதுதான். அப்படிப்பட்ட தந்தை பெரியாரை தலித் விரோதியாகக் காட்ட முயற்சிக்கும் போக்கும் முறியடிக்கப்பட வேண்டும். ஜாதி ஒழிக்கப்பட்டால் அதனுடைய முழுப்பலனும் சென்றடைவது தாழ்த்தப்பட்ட மக்களுக்குத்தான். ஜாதி ஒழிக்கப்படக் கூடாது என்று கருதக்கூடியவர்கள்தான் பெரியாரைக் குறை சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபடவில்லை என்ற கூற்று விசமத்தனமானது. இந்திய அரசியல் சட்டத்திருத்தம் முதன்முதலாகத் திருத்தப்பட்டது எப்படி? யாரால்? சென்னை மாகாணத்தில் வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கிடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்ததையடுத்து பெரியார் செய்த கிளர்ச்சியின் காரணமாகத்தான் இந்திய அரசின் முதல் சட்டத்திருத்தமே வந்தது.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சராகவும் ஜவஹர்லால் நேரு பிரதமராகவும் இருந்த காரணத்தால் அந்த சட்டத்திருத்தம் சுலபமாக நிறைவேறியது. அந்தச்சட்டத்திருத்தம் வரவில்லையானால் கல்வியில் தாழ்த்தப்பட்டவனுக்கும் இட ஒதுக்கீடு இல்லை. பிற்படுத்தப்பட்டவனுக்கும் கிடையாது.
ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து அவரவர் அப்பன் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை பெரியார் எதிர்த்து ஒழித்திராவிட்டால் இன்று தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட எவருமே பட்டதாரிகளாகää அரசு அலுவலர்களாக, ஆசிரியர்களாகää டாக்டர்களாகää பொறியாளராக ஆகியிருக்க முடியாது. இதையெல்லாம் அறியாதவர்கள்தான் பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

சமூகத்தில் ஜாதிய வேறுபாட்டை எதிர்க்கஇ சாதிரீதியான காழ்ப்புணர்ச்சியை குறைக்கஇ முற்றிலும் விலக்க அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளை பிற்படுத்தப்பட்டவர்களிடமும் கொண்டு சேர்க்கவேண்டும். பெரியாருடைய கருத்துக்களைத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி சேர்ப்பதின் மூலம் சமூகம் ஜாதி வேறுபாடற்ற சமூகமாக மாறும். பிற்படுத்தப்பட்ட மக்கள்இ அம்பேத்கரை அனைத்து மக்களுக்கும் பாடுபட்ட தலைவராக ஒத்துக் கொண்டால்இ அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சகோதரர்களாக பாவிக்கிறார்கள் என்று அர்த்தப்படும். தாழ்த்தப்பட்ட ஒருவர் பஞ்சாயத்து தலைவராக வருவதை எதிர்த்து இயங்குகிற மனநிலையை அது மாற்றும். முற்போக்காளர்கள் – பிற்படுத்தப்பட்டவர்களிடம் டாக்டர் அம்பேத்கர் கொள்கைகளைஇ அவர் உருவத்தை கொண்டுபோய் சேர்ப்பது தங்களின் தலையாய கடமை என்று இயங்கவேண்டும்.

அதன் ஒரு நிலையாக யாருமே அணியாத டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட டிசர்ட் அணிந்துஇ அதை சேகுவேராஇ பெரியார் டிசர்ட்டை போன்று பிரபலமாக்க வேண்டும். அம்பேத்கர் டி சர்ட் பிரபலமானால்இ டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கான பொதுத்தலைவர்இ என்கிற நிலை உருவாகும். அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்த வேணடும் என்கிற உணர்வு மாறும். அவர் சிலையை கூண்டுக்குள் வைத்து அவமானப்படுத்துகிற நிலை மாறும்.

தாழ்த்தப்பட்டவர்களின் மீது நடக்கிற வன்கொடுமைகள் அகலும் அல்லது நிச்சயம் குறையும்.
ஆகவே, அண்ணலின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று உறுதி ஏற்பதோடு அவரின் படம் போட்ட டி சர்ட் அணிவோம். மிகப் பரவலாக தலித் அல்லாதவர்களையும் அணிய வைப்போம்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் ஒற்றுமைஇ பல புதிய உரிமைகளை மீட்கட்டும். பிற்படுத்தப் பட்டவர்களுக்காகவும் தாழ்த்தப் பட்டவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் பல உரிமைகளை பெற்றுத்தந்த அண்ணல் அம்பேத்கர; தந்தை பெரியார் ஆகியோரது புகழ் ஓங்கட்டும். ஜாதி வேறுபாடு அற்ற சமூகம் உருவாகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக