புதன், 30 நவம்பர், 2016

சங்கராச்சாரி சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத யாராவது பார்த்து விட்டால் தோஷம்


அண்ணல் அம்பேத்கரின் சமூக மறுமலர்ச்சி சிந்தனைää சுவாமி விவேகானந்தரின் ஆன்மபலம்ää நேதாஜியின் தேசபக்திää காந்தியின் சுதேசி பொருளாதாரம்ää ஹெட்கேவரின் தேசிய விழிப்புணர்ச்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சக்தியாக பிஎம்எஸ் அய் தெங்கடி உருவாக்கினார் என்று பிஎம்எஸ் சங்கமடல் மார்ச் 1997ல் எழுதினார்கள் பிஎம்எஸ் காரர்கள்.

  அம்பேத்கர் கேட்டார் ~சங்கரமடத்துக்குத் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்டவனை நியமித்து அனைத்துப் பார்ப்பனர்களும் அவர் காலில் விழுந்து வணங்கத் தயாரா?| என்று. அதனைத்தான் பிஎம்எஸ்ஸை நோக்கி நாங்கள் கேட்டோம். சங்கராச்சாரியாகக் கூட அல்ல சங்கர மடத்தில் ஒரு சமையல் காரனாகக்கூட ஒரு தாழ்த்தப்பட்டவனை ஆக்க முடியாது. தாழ்த்தப்பட்டவன் மட்டுமல்ல ஒரு உயர்ந்த ஜாதி என்கிற ஜாதி இந்துவைக்கூட நியமிக்க முடியாது. ஏனெனில் சங்கராச்சாரி சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத யாராவது பார்த்து விட்டால் தோஷம் என்று அந்த சாப்பாட்டை குழிக்குள் போட்டுப்புதைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

அம்பேத்கரின் இந்தக் கேள்வியைத்தான் நாங்கள் கேட்டோம். இதற்கு பதில் சொல்ல வக்கில்லை பிஎம்எஸ்ஸ_க்கு. இவர்கள்தான் அம்பேத்கரின் சமூக மறுமலர்ச்சி சிந்தனையை ஏற்றுக்கொண்டவர்களாம். இக்கேள்வியை நாங்கள் கேட்டதுபோல பிஎம்எஸ் உளறுகிறது. இன்னும் இதுபோல எங்கள் கேள்விகள் பல இருக்கின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்ல பிஎம்எஸ்ஸால் மட்டுமல்ல அதன் அப்பன் பாட்டனாலும் முடியாது. இதுபோன்ற பதில் சொல்லமுடியாத வினாக்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஆர்எஸ்எஸ் சங்பரிவாக் கூட்டத்தின் தந்திரங்கள். பதில் சொன்னால் அவர்கள் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்பது அனைவருக்கும் மட்டுமல்ல அவர்களுக்கும் தெரியும்.

அதனால் இப்பொழுது பிஜேபி என்ற பெயராலும் இந்துமுன்னணி என்ற பெயராலும் பெரியார் மணியம்மை திருமணத்தைப்பற்றி எழுதி ஏதோ திகவுக்கு பதில் சொல்லிவிட்டதுபோலவும் எதிர்த்து மடக்கிவிட்டதுபோலவும் தனக்குத்தானே திருப்தி அடைந்துகொண்டிருக்கிறது பிஎம்எஸ். இந்த இந்துமுன்னணியும்ää பிஜேபியும் எந்த சந்துபொந்துக்குள் நுழைந்துள்ளது? ஏன் பிஎம்எஸ் நேரடியாக பதில் சொல்லாமல் இப்படி குறுக்கு வழிகளைக் கையாள வேண்டும்? அதுதான் ஆர்எஸ்எஸின் தந்திரம்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உன் அப்பன் பாட்டன் காலத்திலேயே பதில் சொல்லி விட்டோம். வாந்தியெடுத்ததை மீண்டும் சாப்பிட்டு மீண்டும் மீண்டும் வாந்தியெடுக்கும் ஜந்துபோல நூறு தடவைக்குமேல் நாங்கள் பதில் சொன்ன விஷயத்தையே மீண்டும் கேட்காதே. பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது உடல் சுகத்துக்காகவோ, பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையினாலோ நடந்தது அல்ல. மணியம்மையும் பெரியாரின் சொத்துக்காகவோ அவரிடம் சுகம் காண வேண்டும் என்பதற்காகவோ அவரிடம் வந்து சேர்ந்தவர் அல்ல.

அண்ணாவும் திமுகவினரும் முதலில் பெரியார் மணியம்மை திருமணத்தை எதிர்த்திருந்தாலும் அண்ணா வெற்றி பெற்று முதல்வரானவுடன் அந்த ஆட்சியையே பெரியாருக்குக் காணிக்கை என்று ஆக்கி அவரது கொள்கைகளையெல்லாம் சட்டமாக்கினார். அவர் வழி வந்த கலைஞரும் பெரியாரின் கொள்கைளையே சட்டமாக நடைமுறைப்படுத்தினார்.

திகவும் திமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வரும் காலத்தில் இதுபோன்ற சிண்டுமுடியும் கேள்விகள் கேட்பது உன்னுடைய பேடித்தனத்தையே காட்டுகிறது. நாங்கள் கேட்ட கேள்விகள் பதில் சொல்ல முடியாமல் ஏராளம் இருக்கின்றன. அதற்கெல்லாம் பதில் சொல். நீங்கள் எந்தக் கேள்வி கேட்டாலும் பெரியார் வழிவந்த நாங்கள் அவரைப்போலவே உன் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றுவோம். எனவே பிஎம்எஸ்ஸே! முகமூடி அணிந்து குறுக்குச்சால் ஓட்டாதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக