திங்கள், 28 நவம்பர், 2016

மனுதர்மத்தை அமுல்படுத்த பல்வேறு பெயர்களில் ஆர்எஸ்எஸ் ஸால் உருவாக்கப்பட்ட சங்பரிவார் அமைப்புக்களான பிஜேபியும் பிஎம்எஸ் சும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளவை.


பிஎம்எஸ் துவக்கப்பட்ட காலத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் சுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் பிஜேபிக்கும் தங்களுக்கும் உறவே இல்லையென்றும் அப்பட்டமான பொய்யினை அவிழ்த்துக்கொட்டி வருகிறது. அந்தப்பித்தலாட்டத்தை பலமுறை ஆதாரங்களுடன் முறியடித்தும் மீண்டும் மீண்டும் அதே பொய்யைச் சொல்லி வருகிறது.

10-08-2011 அன்று வாயிற்கூட்டத்தில் எமது சங்கம் பிஜேபி, பிஎம்எஸ் இரண்டும் ஆர்எஸ்எஸ் ஸின் பரிவார் அமைப்புக்கள் என்பதனையும் இரண்டையும் இயக்குவது ஆர்எஸ்எஸ்தான் என்பதையும் இரண்டுக்கும் உள்ள தொடர்புகளையும் ஆதாரத்துடன் விளக்கிப் பேசினோம்.

அதனை அறிவுப்பூர்வமாக மறுக்க வக்கில்லாமல் குறுக்குச்சால் ஓட்டுகிறது பிஜேபி என்ற பெயரில். அப்படியானால் இங்கே பிஜேபி என்கிற அமைப்பு செயல்படுகிறதா? அவர்கள் எந்தச்சங்கத்தில் இருக்கிறார்கள்? பங்குபெறும் சங்கத் தேர்தலில் எந்த சங்கத்துக்கு ஓட்டுப்போட்டார்கள்?

பிஎம்எஸ் காரர்கள் பங்குபெறும் சங்கத் தேர்தல் நடைபெற்றபோது ப்ளீஸ் இதப்படிக்காதீங்க என்ற தலைப்பில் நோட்டீஸ் போட்டார்கள். அதன் பொருள் என்ன? எல்லோரும் இதைப் படிக்க வேண்டும் என்பதுதானே? அவர்கள் எதைச்சொன்னாலும் நாம் அதற்கு நேர் மாறாக பொருள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். அதில் அவர்களாகவே ஒரு கேள்வி கேட்டு அவர்களாகNவு பதில் சொல்லியிருந்தார்கள்.

என்னவென்றால் பிஎம்எஸ் பிஜேபியினுடைய தொழிற்சங்கம் என்று சொல்கிறார்களே,அது உண்iமையா? என்று. அதற்கு அவர்கள் அதில் தெரிவித்த விளக்கம் என்ன தெரியுமா? பிஜேபி துவக்கப்பட்டது 1982ல். பிஎம்எஸ் துவக்கப்பட்டது 1955ல். அப்படியிருக்கும்பொழுது பிஎம்எஸ் எப்படி பிஜேபியின் சங்கமாக இருக்க முடியும்? என்று சொல்லியிருந்தார்கள்.

ஆனால் உண்மை என்ன? பிஜேபி என்ற பெயர்தான் 1982ல் வந்ததே தவிர அதற்கு முன்பு அவர்கள் ஜனசங்கம் என்ற பெயரில் செயல்பட்டார்கள். ஆர்எஸ்எஸ் என்பது 1925ல் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களால் இந்தியாவில் இந்து ராஜ்யத்தை உருவாக்கி பார்ப்பனர்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கி பார்ப்பனர்கள் அரசர்களையும் விட உயர்வானவர்கள் என்றும் அதற்கும் ஒருபடி மேலே சென்று பார்ப்பனர்கள் கடவுளையும்விட மேலானவர்கள் என்ற தத்துவத்தையும் கொண்ட மனுநீதியை சட்டமாக்க வேண்டும் என்று சொல்லுகின்ற அமைப்பு.

அந்த ஆர்எஸ்எஸினுடைய உறவை இப்பொழுது மெல்ல மெல்ல ஒத்துக்கொள்ளும் பிஎம்எஸ் பிஜேபியினுடைய உறவை மட்டும் ஒத்துக்கொள்ள மறுப்பது ஏன்? மனுதர்மம் எங்கே இருக்கிறது? வருணாசிரமம் எங்கே இருக்கிறது? அதையெல்லாம் இப்பொழுது யார் பேசுகிறார்கள்? என்று கேட்டுவிட்டு வருணாசிரமம் சமுதாயத்தை வழிநடத்த செய்யப்பட்ட ஏற்பாடு என்று அதற்கு வக்காலத்து வாங்குகிறது பிஎம்எஸ். மனுதர்மத்தை தன்னுடைய ஊர்வலங்களில் அலங்கரித்து எடுத்துச்செல்பவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள்.

அந்த மனுதர்மத்தை அமுல்படுத்த பல்வேறு பெயர்களில் ஆர்எஸ்எஸ் ஸால் உருவாக்கப்பட்ட சங்பரிவார் அமைப்புக்களான பிஜேபியும் பிஎம்எஸ் சும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளவை. அவர்கள் அதை மறைப்பதிலிருந்தே அவர்கள் நேர்மையானவர்கள் அல்ல என்பது புரிகிறதா இல்லையா?

எனவே, இப்பொழுது மீண்டும் கேட்கிறோம். பிஜேபிக்கும் பிஎம்எஸ் சுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? அப்படி இருந்தால் அதை மறைப்பது ஏன்? இதற்கு பதில் சொன்னால் உன்னுடைய துண்டறிக்கையில் உள்ள அனைத்துக்கும் ஆதாரபூர்வமாகப் பதிலளிக்கிறோம்.                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக