ஞாயிறு, 13 நவம்பர், 2016

அண்ணல் அம்பேத்கர் கீதையை பைத்தியக்காரனின் உளறல் என்றார்





சாதியை ஒழிக்க சரியான வழிகளைச் சொன்னவர்கள் அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும்தான். அண்ணல் அம்பேத்கர் கீதையை பைத்தியக்காரனின் உளறல் என்றார். ஏனெனில் கிருஷ்ணன் கீதையில்

“நான்கு வருணங்கள்  என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது” அதாவது அதனைப் படைத்தது நானாக இருந்தாலும் அந்த ஜாதிகளை என்னாலேயே ஒழிக்க முடியாது என்று கூறுகிறான்.  (கீதை அத்தியாயம் 4 சுலோகம் 13)

இன்று பிஜேபி அரசாங்கம் பகவத் கீதையை புனித நூலாக அறிவிப்பதன் நோக்கம்; என்ன?

அண்ணல் அம்பேத்கர் வால்மீகி இராமாயணத்தை ஆய்வு செய்து ~இராமன் கிருஷ்ணன் பற்றிய புதிர்| என்ற புத்தகத்தில் இராமன் ஒரு குடிகாரன் என்பதையும் இராமனுக்கு ஒரு நாளின் முற்பகுதி மது அருந்தி அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் குலாவுவதாகவும் மற்றொரு பகுதி அரண்மனைக் கோமாளிகளின் கேலிப் பேச்சில் மூழ்கித் திளைப்பதாகவும் இருந்தது. தனது களியாட்டங்களில் அவ்வப்பொழுது சீதையையும் இராமன் கலந்துகொள்ளச் செய்தான் என்று வால்மீகி இராமாயணத்தில் உள்ளதாகக் கூறும் அம்பேத்கர்ää சாதாரணமாக மன்னர்கள் மக்களின் குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைக்கும் பணியைக்கூடச் செய்யவில்லை. அப்படி மக்கள் குறைகேட்டுத் தீர்த்து வைத்ததாக ஒரே ஒரு நிகழ்வு மட்டும் இராமாயணத்தில் உள்ளதாகக் கூறும் அம்பேத்கர் அதுதான் சம்பூகனின் வதைப்படலம் என்பதையும் குறிப்பிடுகிறார்.
சூத்திரனான சம்புகன் கடவுளை நோக்கி தவம் இருந்தது தவறு என்றும் பார்ப்பனரல்லாதார் அனைவரும் பார்ப்பானையே கடவுளாக வணங்க வேண்டுமே அல்லாது நேரடியாகக் கடவுளை வணங்கக் கூடாது என்பதும்தான் அதன் தத்துவம்.

( ஆதாரம் : இந்திய அரசின் சமூகநலத்துறை வெளியிட்ட அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி

இவ்வளவு தெளிவாக இராமனையும் கிருஷ்ணனையும் அம்பேத்கர் நார் நாராகக் கிழித்திருக்க அந்த இரு கடவுள்களையும் பிஜேபி அரசாங்கம் தூக்கிப் பிடிப்பதுதான் அம்பேத்கருக்குக் காட்டும் மரியாதையா?

பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் பார்ப்பானையே கடவுளாக வணங்க வேண்டும் என்பதற்காகத்தான் இராமனுக்குக் கோயில் கட்டப் போகிறீர்களா? கீதையைப் புனித நூலாக அறிவிக்கிறீர்களா?










பிஜேபி - பிஎம்எஸ் சின் நோக்கம் சிண்டு முடிவதே! எனவே அவர்களை நம்பாதீர்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக