திங்கள், 21 நவம்பர், 2016

RSS and BHEL Management

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
திருச்சி பெல் நிருவாகத்தில் கடந்த காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. தமிழர் தலைவர் BHEL  என்பது Brahmin Heirarchy Ever Lasting  என்று சொன்னார்கள்.  அந்த ஆதிக்கத் தினை விடுதலை கண்டித்து எழுதியதால், ஓரளவு உயர் பதவிகளில் தமிழர்கள் நியமிக்கப்பட்டார்கள். இருந் தாலும் சில துறைகள் பார்ப்பன ஆதிக்கத்தின் பிடியிலிருந்து அகலவில்லை. மனிதவள மேலாண் மைத்துறை அதற்கு வடிகாலாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ்.அய் ஆதரிக்கக் கூடியவர்களும், மனுதர்ம மனப்பான்மை உள்ள அதிகாரிகளும் அத்துறையில் நிரம்பி வழிந்தனர். அவ்வப்பொழுது பார்ப்பனரல்லாத அதிகாரிகள் தலைமைப் பொறுப்புக்கு வந்தாலும் அங்கு நிரந்தரமாய் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதர வாளர்கள் தங்களது பொய்ப் பிரச்சாரத்தால் அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.
2000 ஆவது ஆண்டில் இந்தியா நாடாளுமன்றக் கூட்டமே நடக்க விடாமல் முடக்கப்பட்டது. காரணம் ஆர்.எஸ்.எஸ். பற்றிய பிரச்சினை. அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.இல் சேரலாம் என குஜராத் அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. இடது சாரிகளும் முற்போக்கு சிந்தனையாளர்களும் அதற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தார்கள். நாடாளுமன்றமே நடத்த முடியாத அளவிற்கு முடங்கியது. அப்பொழுது பெல்லில் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக ஒரு வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைமைக் கழகப் பேச்சாளர் பெரியார் செல்வன் கலந்து கொண்டு, ஆர்.எஸ்.எஸ். இன் தோற்றம், அதன் வரலாறு கொள்கைகள், அதனால் ஏற்பட்ட வகுப்புக் கலவரங்கள், காந்தியார் கொலை, காமராசர் கொலை முயற்சி இவற்றை யெல்லாம் எடுத்துச் சொல்லி அதில் அரசு ஊழியர்கள் சேர்ந்தால் என்னென்ன பிரச்சினைகள் உருவாகும் என்பதை எடுத்துரைத்தார்.
இதைக் கேட்ட ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அதிகாரிகள்  நாம் கூட்டத்தில் பேசாத கருத்தையெல்லாம் பேசிய தாக, அதாவது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கெதிராகப் பேசியதாகவும், தொழிலாளர்களுக்கு தொடர்பில்லா ததைப் பேசியதாகவும் அதனால் தொழில் உறவு பாதிக்கப்படும் என்றும் கூறி இனிமேல் திராவிடர் தொழிலாளர் கழகத்துக்கு வாயிற்கூட்டம் நடத்த அனுமதி தரப்பட மாட்டாது என்று கடிதம் கொடுத்தது. அப் பொழுது அத்துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். அவரிடத்தில் அக்கூட்டம் பற்றி தவறான கருத்தை எடுத்துச் சொல்லி அந்தத் தடையை வழங்கினர். அதற்குப் பிறகு நம்முடைய நிருவாகிகள் அந்த உயர் அதிகாரியை நேரில் சந்தித்து கூட்டத்தில் பேசிய உண்மையான கருத்துக்களை எடுத்துக் கூற பிறகு அத்தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதற்குப் பிறகு நம்முடைய சங்கத்தின் செயல் பாடுகளில் எந்தக் குற்றமும் காண இயலவில்லை. இந்த ஆண்டு மே மாதம் நிறுவனத்திற்கு பங்குபெறும் சங்கத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஆர்.எஸ்.எஸ். சினுடைய தொழிற்சங்கமான பிஎம்எஸ் தோற்றுப்போனது. அதே போல அதற்கு முன்பு 2002 இல் நடந்த தேர்தலிலும், 2007 இல் நடந்த தேர்தலிலும் தோல்வியைத் தழுவியது அந்தச் சங்கம். ஆனால் 1996 இல் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது இங்கே பொய்யான வாக்குறுதியைச் சொல்லி ஒரு முறை வெற்றி பெற்ற பி.எம்.எஸ் அதற்குப் பிறகு மூன்று முறை தோற்றுப் போன பிறகும் தனக்கு வழங்கிய அலுவலகத்தைக் காலி செய்யாமல் அதனை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தது.
அதனை நமது திராவிடர் தொழிலாளர் கழகம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததன் விளைவாக நிர்வாக உயர் அதிகாரிகள் சட்டப்படி அவர்களைக் காலி செய்யச் சொல்லி உத்தரவிட்டனர். அதனால் ஆத்திர முற்ற பிஎம்எஸ் சங்கம் கூட்டம் போட்டு தங்களது அலுவலகத்தைக் காலி செய்யச் சொன்ன அதிகாரி களைத் தரக்குறைவாகப் பேசியது. அதற்குப் பதிலடியாக நமது சங்கத்தின் சார்பாக, வாயிற்கூட்டம் நடத்தி பிஎம்எஸ்.சின் வரலாற்றையும் அதற்கும் ஆர்.எஸ். எஸ்.சுக்கும் பி.ஜே.பி.க்கும் உள்ள தொடர்புகளையும் தொழிலாளர்களுக்கு அவர்கள் செய்து வரும் துரோகங்களையும் பட்டியல் போட்டு அவர்கள் காலி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துப் பேசினோம். ஆர்எஸ்எஸ்.சுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகளின் பட்டியலையும் வெளியிட்டோம். அதனால் அந்த அதிகாரிகளுக்குக் கலக்கம் ஏற்பட்டது. உண்மையான செய்திகள் உயர் அதிகாரிகளுக்குச் சென்று சேரும் முன்னர் நாம் கூட்டத்தில் ஒரு ஜாதிக்கு எதிராகப் பேசியதாகவும் தொழிலாளர்களுக்குத் தொடர்பு இல்லாத வற்றைப் பேசியதாகவும் உயர் அதிகாரிகளிடம் தவறான கருத்தை எடுத்துச் சொல்லி 2000ஆவது ஆண்டு  என்ன காரணத்தைச் சொல்லி நமக்குத் தடை வழங்கப்பட்டதோ, அதே காரணத்தைச் சொல்லி இனிவரும் காலங்களில் உங்களுக்கு வாயிற்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப் படமாட்டாது என்று கடிதம் கொடுத்தார்கள்.
நமது சங்கத்தின் சார்பாக பொதுமேலாளர் மனிதவளம் அவர்களையும் கூடுதல் பொதுமேலாளர் அவர்களையும் சந்தித்து உண்மையை எடுத்துச் சொன்ன பிறகு உண் மையை உணர்ந்த அவர்கள் நமது சங்கத்திற்கு வாயிற் கூட்டம் நடத்த அனுமதி அளித்தார்கள். அதன்படி 22.10.2011 அன்று பெல் முதன்மை வாயிலில் தந்தை பெரியார் பிறந்த நாள் வாயிற்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வ.மாரியப்பன் வரவேற்புரை ஆற்றினார். தி.தொ.க. தலைவர் க.வெ.சுப்பிரமணியம் தலைமை ஏற்றார். தி.தொ.க.பேரவை பொதுச் செயலாளர் ஆறுமும் தொடக்க வுரை நிகழ்த்தினார். தலைமைக் கழகப் பேச்சாளர் வழக்கறிஞர் பூவை.புலிகேசி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் தொண்டினையும், தந்தை பெரியார் இல்லையென்றால் காமராசர் முதல்வராகி இருக்க முடியாது என்பதையும், காமராசர் முதல்வராகாமல் இருந்திருந்தால் ஆந்திராவுக்குச் செல்ல வேண்டிய பெல் திருச்சிக்கு வந்திருக்காது என்றும் தமிழர்கள் எந்தப் பதவிக்கும் சென்றிருக்க முடியாது என்பதையும் 1856 இல் துவக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத் துக்கு 1971 வரை தாழ்த்தப்பட்டவர் யாரும் நீதிபதியாக வர இயலவில்லை என்பதையும், தந்தை பெரியார் குரல் கொடுத்த பிறகுதான் நீதியரசர் வரதராசன் சென்னை உயர்நீதி மன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியானார் என்பதையும், பின்னர் அவரேதான் உச்சநீதிமன்றத்திலும் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்ற வரலாற்றுச் செய்திகளையும் எடுத்துச் சொல்லி அப்படிப்பட்ட தந்தை பெரியாரின் கருத்துகளை எடுத்துச் சொல்ல பெல் நிருவாகம் மறுப்பது அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் பொறுப்பிலே இருக்கும்போது மறுக்கப்படுவது வருத்தத்திற்குரியது என்பதையும் பதிவு செய்து சிறப்பாக உரையாற்றினார். ஏராளமான தொழிலாளர் கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் தமிழ்ச் சுடர், காட்டூர் கிளைக் கழகச் செயலாளர் சிவானந்தம் துவாக்குடி நகரச் செயலாளர் இராமலிங்கம் உட்பட கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
24-10-2011 அன்று பெல் திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பாக தலைமைக் கழகம் வெளியிட்ட தீபாவளி பற்றிய திடுக்கிடும் உண்மைகள் துண்டறிக்கை (சுமார் நான்காயிரம் துண்டறிக்கைகள்) பெல் அனைத்து வாயில்களிலும் வழங்கப்பட்டது. தொழிலாளர்கள், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் அத்துண்டறிக்கையை பெற்று படித்துப் பாராட்டினர்.
- பெல். ம. ஆறுமுகம், திராவிடர் தொழிலாளர் கழக பேரவை, பொதுச் செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக