திங்கள், 7 நவம்பர், 2016

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்காமல் யார்யாரையோ தேர்ந்தெடுக்கிறார்கள். தகுதி - திறமை என்று சொல்லித் தமிழர்களை இழிவு செய்கிறார்கள்

 

கடந்த இரண்டாயிரத்திலிருந்து நம் நிறுவனத்தில் நியமிக்கப்பட்ட சுமார் 180 பொறியாளர்களில் கிட்டத்தட்ட நூறு பேருக்குமேல் வேலையை இராஜினாமா செய்துவிட்டு வேறு நிறுவனங்களுக்குச் சென்றுவிட்டார்கள். ஒருசிலர் மட்டும் போபால், ஹைதராபாத் என்று நமது பிற யூனிட்களுக்கு மாறுதலாகிச் சென்றுள்ளார்கள். நமது திருச்சி யூனிட்டில் பணியாற்ற தற்பொழுது போதுமான பொறியாளர்கள் இல்லை.


அதேபோல SA0 கிரேடில் எடுக்கப்பட்ட மேற்பார்வையாளர்களில் கிட்டத்தட்ட 8 பேர் வேலையை இராஜினாமா செய்துள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? இங்கு ஊதியம் குறைவு, தனியார் நிறுவனங்களில் ஊதியம் அதிகம். அதனால் அவர்கள் வெளியேறுகிறார்கள் என்று நிர்வாகத்திலுள்ளோர் கூறக்கூடும்.

ஆனால் காரணம் அதுவல்ல. ஊதியம் குறைவு என்றால் மிகமிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 28 ஆண்டு காலமாக தொடர்ந்து இங்கு பணியாற்றுகின்றார்களே!
அதேபோல நிரந்தரப்பணிக்காக தற்காலிகப்பணியாளர்கள் என்று ஏமாற்றப்பட்டு எடுக்கப்பட்டுள்ள அப்பாவித் தொழிலாளர்கள் யாரும் இராஜினாமா செய்துவிட்டுச் செல்லவில்லையே! ஏன்?

இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (TEA ஒரு சிலரைத்தவிர);. நம் நாட்டின்மீதும் மொழியின்மீதும் இனத்தின்மீதும் நம் நிறுவனத்தின் மீதும் பற்று உள்ளவர்கள். அம்மா அப்பாää மனைவி மக்கள் சொந்த பந்தங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாம் உழைப்பதன் மூலம் நம் நிறுவனம் உயரும். அதன்மூலம் நம் நாடு உயரும். என்றைக்காவது ஒரு நாள் நமக்கு நீதி கிடைக்கும். நாம் நிரந்தரமாவோம் என்ற நம்பிக்கையில் காலத்தைக் கழித்து வருகிறார்கள்.
ஆனால் பொறியாளர்;களோ சூப்பர்வைசர்களோ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்களுக்குத் தமிழ்நாட்டின்மீதோ நம் நிறுவனத்தின் மீதோ சிறிதும் பற்றோ பாசமோ இருக்க வாய்ப்பில்லை.

ஊதியத்திற்காக மட்டுமே இங்கு வந்தவர்கள். இதைவிட அதிக ஊதியம் கிடைக்கக்கூடிய இடங்களுக்குத் தாவிச்செல்லத்தான் செய்வார்கள்.

இதனால் நட்டம் யாருக்கு? நம் நிறுவனத்திற்குத்தானே?
இவர்களை வேலைக்கு எடுக்க விளம்பரம் செய்ய, தேர்வுநடத்த, தேர்வுபெற்றபின்பு பயிற்சி இதற்கெல்லாம் ஆன செலவு என்று கணக்கிட்டால் பல கோடிகளைத்தாண்டும்.
இங்கே வந்து நல்ல பயிற்சிபெற்று நம்முடைய தொழில்நுட்பங்களையெல்லாம் தெரிந்துகொண்டு அனுபவத்தையும் பெற்றுக்கொண்டு கொழுத்த வருவாய்க்காக ஓடுகிறார்கள்.

இவர்கள் ஓடுவதால் ஏற்படும் காலி இடங்கள் உடனடியாக நிரப்பப்படுமா? முடியாது.
ஒரு வேலைக்கு என்று கார்ப்பரேட் நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது அவ்வளவு சுலபமல்ல. அப்படி இருக்க கார்ப்பரேட் அனுமதிபெற்று நிரப்பப்பட்ட பணியிடம் மீண்டும் காலியானால் மறுபடியம் அனுமதி கிடைக்குமா?
இதற்கெல்லாம் காரணமென்ன? இங்கு மனிதவள மேலாண்மைப்பிரிவில் உள்ள அதிகாரிகளில் ஏழு பேர் மலையாளிகள். மற்ற அதிகாரிகளுக்கும் தமிழ்நாட்டின்மீதோää தமிழக மக்கள்மீதோ நம் நிறுவனத்தின்மீதோ சிறிதும் பற்றோ பாசமோ அக்கறையோ எதுவும் கிடையாது.

அதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்காமல் யார்யாரையோ தேர்ந்தெடுக்கிறார்கள். தகுதி - திறமை என்று சொல்லித் தமிழர்களை இழிவு செய்கிறார்கள்.
தகுதி -திறமைக்கு மதிப்பெண் மட்டும்தான் அளவுகோலா?
இன்று பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்ற துறைகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றவர்களை எடுத்து ஆய்வு செய்தாலே போதுமான சான்று கிடைக்கும். இவர்களில் பலரும் முதல் மதிப்பெண் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள்.

எனவே, இனிவரும் பணி நியமனங்களில் மதிப்பெண் என்பதை மட்டும் அளவுகோலாக எடுக்காமல் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களை மட்டுமே அழைத்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் வேலை வாய்ப்பு அளிப்பதன் மூலமே நமது நிறுவனத்திற்கு நிரந்தரமான ஊழியர்கள் கிடைப்பார்கள்
நிர்வாகம் இனிமேலாவது கடந்த கால அனுபவத்திலிருந்து பாடம்பெற்று சரியான நடவடிக்கையை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இவண்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக